கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

power of eyes

கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

சில பேர் நகை நட்டெல்லாம் நிறையப் போட்டிருப்பார்கள்…. கடை வைத்திருப்பார்கள்…. கடையிலும் நன்றாக வியாபாரமாகும்.

அதைப் பார்ப்பவர்கள்… பரவாயில்லை… உங்களுக்கு என்னங்க குறை…! என்று சொன்னால் போதும். இந்த மாதிரி ஒரு நான்கு பேர் சேர்ந்து சொன்னால் போதும்

என்னைப் பார்த்து… கடையில் நடக்கும் வியாபாரத்தைக் கண்டு “உலகமே கண் பட்டு விட்டது…!” என்று எண்ணுவோம். இது பக்தி இல்லை.

நன்றாக இருக்கின்றீர்கள்..! என்று அடுத்தவர்கள் சொன்னால்
1.இனி உன் வாக்குப் பிரகாரம் எல்லாமே நன்றாக வேண்டும்
2.என்னைப் போல் நீயும் நன்றாக ஆக வேண்டும்…! என்று
3.திருப்பி சொல்வதற்கு என்ன வந்தது…?

ஆனால் அதைச் சொல்ல மாட்டார்கள்.

நகை போட்டிருக்கின்றேன்…! எங்கே பார்த்தாலும் பொறாமையிலே இப்படிப் பேசுகின்றார்கள்…! என்று அவர்கள் மேல் வெறுப்பு உண்டாக்கி விடுவார்கள்.

யாருடனாவது பேசும் பொழுது இவர்களைப் பார்க்கும் போது சிரித்து பேசினால் போதும். அல்லது அப்படி இல்லையென்றாலும் பார்த்தவுடனே நேற்று பார்த்தோமே…! என்று சிரித்தால் போதும்..! இங்கே உணர்வுகள் மாறிவிடும்.

நான் போகும் பொழுதும்.. வரும் போதும்.. என்னைப் பார்த்தாலே இளக்காரமாகத் தெரிகிறது… என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் பதிவு செய்தால் அதனின் உணர்வாகத் தான் வருகின்றது.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் பெண்கள்… இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் பழக்கத்தில் இருக்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று அறிய வேண்டும். மற்றவர்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு முறை பள்ளிக்கூடத்தில் ஒருவர் தன் குழந்தையை “ஏதோ சொல்லி விட்டார்கள்” என்று கேள்விப்பட்டதும்
1.என் மனதே தாங்கவில்லை…
2.நான் இந்தப் பள்ளிக்கூடம் பக்கமே போக மாட்டேன்
3.ஐயோ… எனக்குத் தூக்கமே வரவில்லை…! என்று அந்த அன்பர் (குழந்தையின் தாய்) எம்மிடம் வந்து சொன்னார்.

அப்படி என்றால் இந்தத் தியானத்திற்கு வந்ததன் காரணம் என்ன…?

யார் அந்தக் குழந்தையை ஏசிப் பேசினார்களோ… யாம் சொன்ன முறைப்படி அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் பெற வேண்டும்… பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… தெய்வீக அன்பும் பண்பு அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாம் உபதேசித்த வழிப்படி அவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைகக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அந்த அம்மா சாமி… சாமி…! என்று என்னை உயர்த்தித் தியானித்து விட்டு மற்றவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கிவிட்டது. இது எப்படிச் சரியாகும்…?

சண்டைக்குப் போவது… வெறுப்பை உண்டாக்குவது என்ற நிலையில் இப்படி ரொம்பப் பேர் இன்றும் செயல்படுகின்றார்க்சள். இது தியானமே அல்ல…!
1.ஆகவே நாம் எதைத் தியானிக்கின்றோம்…?
2.அசுத்தத்தையும் தீமையான உணர்வையும் தான் தியானிக்கின்றோம்.
3.அதைத் தான் பக்தியாகப் பற்றுகின்றோம்.

ஆக மொத்தம் இன்று உங்கள் கடையில் வியாபாரம் இன்று அமோகமாக நடக்கிறது…! என்று இரண்டு பேரை வந்து சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

உடனே இரண்டு மிளகாயை எடுத்துச் சுற்றி வைத்து விடுவார்கள்…! ஏனென்றால் கண் பட்டுவிட்டதாம்…! (திருஷ்டி)

நல்லது தான் சொல்கின்றார்கள்… இன்னும் கொஞ்சம் உங்கள் வாக்கினால் நல்லாக வேண்டும். நீங்களும் இனிமேல் இது போன்று உயர வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அது போன்று வந்துவிட்டால் “அவர்கள் சொன்ன வாக்கு” நமக்குள் பதிவாகிவிடும்.

அவர்கள் என்ன செய்கின்றார்கள்…!

1.“வியாபாரம் நன்றாக ஆகிறது… பரவாயில்லையே…!” என்று சந்தோஷத்தில் சொல்கின்றார்கள்.
2.அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இல்லை.

ஏனென்றால் இது எல்லாம் “பக்தி” என்று சொல்லிக் கொண்டு என்ன செய்கின்றார்கள்…? கண் திருஷ்டி… ஓமழிப்பு…! என்று தான் எண்ணிக் கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் சரக்கு வாங்கப் போகும் போதெல்லாம் இந்த எண்ணம் தான் வரும். அந்தக் குறை உணர்வுடன் அங்கே சென்றால் மட்டமான சரக்காகப் பார்த்து எடுத்து வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.

மட்டமான சரக்கு கடையிலே சரியாக வியாபாரம் ஆகாது. உடனே என்ன நினைப்பார்கள்…? கண் திருஷ்டி பட்டதிலிருந்து என் சரக்கே வியாபாரம் ஆகவில்லை என்பார்கள்.

அதே மாதிரி வீட்டிற்குள் மற்றவர்கள் வந்து உங்கள் குழந்தை அழகாக இருக்கின்றது…! என்று தொட்டு விட்டால் போதும்.

ஐய்யய்யோ…! என் குழந்தைக்குக் கண் பட்டு விட்டது.. என்ன ஆகுமோ..? என்று எண்ணுவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். காரணம் இது எல்லாம் பக்தி…!

குழந்தை அழகாக இருக்கின்றது என்று ஒருவர் சொன்னால்…
1.உங்கள் அருளால் என் குழந்தை நன்றாகச் சாப்பிட வேண்டும்
2.குழந்தைக்கு நல்ல ஜீரண சக்தி கிடைக்க வேண்டு,ம்
3.உங்கள் வாக்காலே குழந்தை என்றுமே நன்றாக இருக்க வேண்டும்…! என்று
4.இந்த எண்ணம் தான் நம் மனதில் வர வேண்டும்.. அதைச் சொல்ல வேண்டும்.

அவர்கள் யதார்த்தமாகக் குழந்தையைப் பார்த்தவுடன் அந்த மகிழ்ச்சி வருகின்றது. அதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் மனது நம்மிடம் இல்லை.

இப்படிச் செய்கின்றார்களே…! என்று குழந்தைக்குப் பால் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வு வரும். அந்த உணர்வு வந்தவுடன் அந்த பிள்ளைக்கு தலை வலிக்கும்… மேல் வலிக்கும்… எல்லாம் வலிக்கும்… வீர்… வீர்… என்று கத்தி அழுகும்.

யார்…? உங்களால் தான் குழந்தைக்கு இப்படி வந்தது…! என்று தெரியாது.

அவர்கள் பார்த்தார்கள்.. என் குழந்தைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது. உடனே மிளகாயையும் உப்பையும் எடுப்பார்கள். குழந்தைக்குச் சுற்றுவார்கள். அடுப்பில் போடுவார்கள். போட்டவுடனே அதிலே நெடி எதுவும் வராது.

பாவிகள்…! என்ன செய்திருக்கின்றார்கள் பாருங்கள்..?

“நெடி வரவில்லை…!” என்றால் நாம் எடுத்துக் கொண்ட வெறியான உணர்வுகள்… அந்த வெறுப்பான உணர்வுகளுடன் கையில் எடுத்துச் செல்லும் போது அது அந்தக் காரத்தையே போட்டு அமுக்கி விடுகின்றது. நம் எண்ணம் அப்படித் தான் இயக்கும்.

ஆகவே அடுப்பில் அதைப் போட்டாலும் அந்த நெடி தெரிவதில்லை. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பக்தியில் இது என்ன செய்கின்றது…? நல்லதை நினைத்தால் கூட எடுத்துக் கொள்வதற்கு இல்லை.

காசைக் கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்து… அபிஷேகம் செய்தால்… “சாமி காப்பாற்றும்” என்றால் இது பக்தி அல்ல. இந்த முறையை மாற்ற வேண்டும்.

1.கோவிலுக்குச் சென்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.இது தான் பக்தி. இதுவே தான் தியானம்…!

ஆனால் அன்று நான் உனக்குப் (சாமிக்கு) பூமாலை போட்டேனே… உன்னைத் தேடி வந்தேனே… என்னை இப்படிச் சோதிக்கின்றேயே…! என்ற வகையில் எண்ணினால் இந்தப் பக்தி தான் அங்கே தியானமாகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ… நீ அதுவாகின்றாய்.. கோவிலுக்குச் சென்றாலும் அங்கே நாம் வேதனையைப்பற்றி அதிகமாக எண்ணினால் அதுவாக வளர்ந்து… அதுவாக நாமாகி…. அதுவாகின்றோம்.

ஆகையினாலே நாம் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். இது தான் உண்மையான பக்தி…!

Leave a Reply