உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

Inner peace

உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போர்… உடலுக்குள் போனால் மகாபாரதப் போர் – விளக்கம்

 

ஒவ்வொரு நிமிடமும் நாம் நல்ல குணங்கள் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இருந்தாலும் நம் நண்பர் வேதனைப்படுகின்றார் என்றால் அதை நுகர்ந்தால் குருஷேத்திரப்போர் ஆகின்றது.

1.நம் உடலுக்குள் குருவாக இருக்கின்றது உயிர்.
2.உயிரிலே (சுவாசித்தது புருவ மத்தியில்) பட்டபின் குருஷேத்திரப்போர் நடக்கின்றது.

என் நண்பனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று ஏங்கிப் பெற்றால் நம் உடலுக்குள் போனால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது மகாபாரதப் போர்.

இப்படி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் போர்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.

அதாவது கண்ணன் சங்கநாதம் ஊதியபின் குருஷேத்திரப் போர்…
1.வேதனைப்படும் உணர்வைக் கண்கள் கவர்ந்து உயிரிலே மோதும் போது
2.அந்த வேதனை என்ற உணர்வுகளைச் சங்கநாதம் ஊதுகின்றது.

ஆனாலும்… வேதனைப்படுகின்றான் என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுடன் கலக்கப்படும்போது இங்கே குருஷேத்திரப் போர் நடக்கின்றது. ஏனென்றால் உடலுக்குள் இருக்கும் அனைத்து நல்ல குணங்களுக்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

அதே சமயத்தில்… வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்ற பின்…
1.உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் இது தாக்கப்படும் போது
2.பதட்டமும் பயமும் ஏற்பட்டு மகாபாரதப் போர் ஆகின்றது.

இப்படி உடலுக்குள் வேதனை என்ற உணர்வு புகுந்து விட்டால் விஷத்தின் தன்மை நமக்குள் வளர்ச்சியாகின்றது. அதனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நொடிக்கு நொடி குருக்ஷேத்திரப் போரும் மகாபாரதப் போரும் நடந்து கொண்டேதான் உள்ளது.

“சந்தோஷம்…” என்ற சீதா ராமனாக.. அதாவது சந்தோஷம் என்ற எண்ணங்கள் (ராமன் எண்ணம்… சீதா மகிழ்ச்சி) கொண்டு வாழ்ந்தாலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தால் வாலி ஆகின்றது.

அந்த வாலி என்ற உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்லத் தொடங்குகின்றது…இரண்யன்.

நாம் மகிழ்ச்சி என்ற உணர்வைத் தான் தோற்றுவிக்க எண்ணுகின்றோம்.

ஆனால் நண்பனைப் பார்த்து வேதனைப்படும்போது அதை நுகர்ந்தால் வாலியாகி… நமது நல்ல குணங்களை எப்படி அழித்து மாற்றிவிடுகின்றது…? என்று
1.சுவையின் உணர்வுகள் அந்த உணர்ச்சிகள்
2.நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்று இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

அதை யாராவது நாம் மதிக்கின்றோமா…?.

நம் எண்ணங்கள் எப்படிச் செயல் படுகின்றது…? வேதனை என்ற உணர்வை நுகர்ந்த அது நம் நல்ல குணங்களைக் கொன்றிடும் இரண்யனாகின்றது என்பதை ஞானிகள் காட்டுகின்றனர்.

தசரத சக்கரவர்த்தி என்பது பத்தாவது நிலை அடையக்கூடிய உயிர். நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் இரையானாலும் வேதனை என்ற உணர்வு வரும்போது
1.அந்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி
2.மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது கொன்று விடுகின்றது “தசப்பிரியன்…”

அதன் மூலம் நாம் அடிக்கடி வேதனைப்பட்டு இந்த உடலை வளர்ப்பதற்கும்… மற்றொருவரைக் கொன்று புசிப்பதற்கும்… மற்றவருக்குத் தொல்லை கொடுக்கும் நிலையே நமக்குள் வருகின்றது. ஆனால் இதே தொல்லை கொடுக்கும் உணர்வை நுகரும்போது தசப்பிரியன் ஆகின்றது.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிரில் நாம் எடுக்கப்படும்போது இதே உயிர்தான் அதையும் வளர்க்கின்றது. அந்தக் கோபம் என்ற உணர்வு உயிரிலே பட்டபின் அசுர உணர்வை வளர்க்கின்றது. நம் நல்ல குணங்களை கொல்கின்றது.

சீதா – சுவை மகிழ்ச்சி… என்ற நிலை வரப்படும் பொழுது உடலான இந்திரலோகம் நம்மை மகிழச் செய்கிறது. ஆனால் சந்தர்ப்பத்தால் வந்த வேதனை என்ற உணர்வுகள் இந்த இந்திரலோகத்தில் வந்தால் நல்லதை உருவாக்காதபடி தடையாகின்றது.

அதாவது மகிழச் செய்யும் இந்திரலோகத்தைச் சிறைப் பிடித்து விடுகின்றான் இரண்யன். நம் ஆறாவது அறிவு இயக்கமற்ற நிலைகள் மாற்றும் போது அசுர உணர்வுகள் நமக்குள் வரப்படும்பொழுது இந்த உடலில் எப்படி விளைகின்றது…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் அந்தத் தசப்பிரியன் என்ற நிலை வரும்போது அவன் எண்ணும் உணர்வுகள்.. அவனும் விஷ்ணுவை (உயிரை) நோக்கித் தான் தவமிருக்கின்றான்.

1.நான் சொன்னபடிதான் இந்த உயிர் கேட்க வேண்டும்…! என்று
2.விஷ்ணுவை அடிமைப்படுத்தக் கடும் யாகங்களைச் செய்கின்றான்…!
3.என் வழிக்குத் தான் நீ வரவேண்டுமே தவிர உன் வழிக்கு நான் வர முடியாது என்று
4.நம் உணர்வின் தன்மை உயிர் பத்தாவது நிலை அடைந்தாலும் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது
5.நம் உயிரான ஈசனை நமக்குள் நல்லதை உருவாக்காதபடி எப்படித் தடையாகிறது என்று காட்டுகின்றார்கள்.

நெருப்பிலே நீங்கள் எந்தப் பொருளைப் போடுகின்றனரோ அந்த மணம் தான் அதிலிருந்து வரும். நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே வேதனை என்ற விஷத்தின் தன்மையைப் போட்டால் விஷத்தின் தன்மைதான் இயக்கும்.

உயிருடைய வேலை அதுதான்…! என்பதனை இங்கு தெளிவாகக் காட்டப்படுகின்றது

இந்த உடலில் விஷத்தின் தன்மை அதிகமானால் விஷத்தை உடலாக்கிக் கொண்ட மற்ற உயிரினங்கள் எப்படியோ அந்த நிலை அடையச் செய்கின்றது.

இந்த ஐந்தாவது அறிவிலிருந்து ஆறாவது அறிவு வரும்போது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
1.தீமைகளை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனுக்குள்
2.விஷத்தின் தன்மை தோயப்படும்போது அது மனிதனை எப்படி மாற்றுகின்றது…?
3.இதிலிருந்து எப்படி மனிதன் மீள்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது இராமயாணம்.

ஆகவே தான் கோவில்களிலே நம் மனதைக் குவித்து… பகைமையற்ற நிலைகள் கொண்டு எல்லோரும் பேரின்பம் பெற வேண்டுமென்று காட்டப்பட்டுள்ளது.

1.நல்ல குணத்தை வளர்க்க…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் இணைத்து
2.எப்படி வளர்க்க வேண்டுமென்று கோவில்களில் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

Leave a Reply