உயர் ஞானத்தை வளர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

jodhi nilai

உயர் ஞானத்தை வளர்க்கும் சக்தியாக நாம் மாற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…
1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்
2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…!

ஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.

அதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.

“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.

வித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.

அதைப் போன்று…
1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்
2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள்
3.குறைவாய்த்தான் செயல் கொள்கின்றன.

உண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.

“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…!

அதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.

மனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…
1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்
2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்
3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.

ஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.

ஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.

இன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.

இக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.

அதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

1.ஆக… தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்
2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.

செடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே செடிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.

அதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.

1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை
2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி
3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று
4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு
5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.

இத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…
1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு
2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்
3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

Leave a Reply