அகஸ்தியன் உணர்வுகளை நுகர்ந்து “தீமைகளைப் பிளந்திடும் மூச்சலைகளாக” இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்ய வேண்டும்

menberships

அகஸ்தியன் உணர்வுகளை நுகர்ந்து “தீமைகளைப் பிளந்திடும் மூச்சலைகளாக” இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்ய வேண்டும்

 

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ விதமான நிலைகள் வருகின்றது… பார்க்கின்றோம்…!
1.அவை எல்லாமே நமக்குள் அப்படியே புகாதபடி
2.தீமைகள் வளர்ந்திடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தீய செயல்கள் எது நடந்தாலும்…
1.நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்..!
2.தீமை செய்வோர் அவர்களுக்குள் அறியாத நிலைகள் நீங்க வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழும் நிலைகள் பெறவேண்டும்
4.அவர்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்று
5.இதைத் தான் நாம் சொல்லிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் எடுக்கும் இத்தகைய உணர்வுகள் இது பெருகப் பெருக இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை மாற்றும் திறனாக அது வளரும்… நாம் வெளிப்படுத்தும் இந்த உயர்ந்த உணர்வுகள் “மூச்சலைகளாக” இது பரவும்.

உங்கள் அருகில் உள்ள நண்பர்களுக்கோ மற்றவர்களுக்கோ இதைப் போலச் சொல்லி அவர்கள் குடும்பங்களிலும் கூட்டுத் தியானங்கள் அமைத்து “அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும்” என்ற இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.

இப்படிப் பரப்பப் பரப்ப அவர்களுக்குள்ளும் இது பரவுகின்றது.

1.இப்படி எத்தனை பேர் அதிகமாகின்றனரோ
2.அவர்கள் வெளிப்படுத்தும் அத்தனை அருள் உணர்வுகளும்
3.இந்தக் காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள நச்சுத் தன்மையை நீக்கக் கூடியதாக வளரும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் அவன் துருவ நட்சத்திரமாக இருப்பதால்
1.எந்நாட்டவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
2.அவர்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். நமக்குள் அவன் உணர்வைச் சேர்த்து… அவன் உணர்வைப் பூமியில் பரவச் செய்து… விஞ்ஞான அறிவால் வந்த தீமைகளை நீக்கச் செய்திட வேண்டும்.

காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எல்லோரும் எடுக்கும் பொழுது
1.“கடவுளின் அவதாரம் வராக அவதாரம்” என்ற நிலையில்
2.தீமைகளைப் பிளந்து நல் உணர்வை நுகரும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

Leave a Reply