நோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து

Diabetes

நோயுற்றவர்களுக்குத் தியானத்தின் மூலம் கொடுக்க வேண்டிய மருந்து

 

உதாரணமாக குடும்பத்தில் ஒருவருக்குச் சர்க்கரை வியாதி (அல்லது வேறு எந்த வியாதிகாக இருந்தாலும்) இருக்கிறது என்றால் அதைக் கூட்டுத் தியானத்தின் மூலம் போக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்துமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்று “முதலில்…” நாம் நமக்குள் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் சர்க்கரைச் சத்து உள்ளவர் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர் உடல் நலம் பெறவேண்டும்… என்று
1.எல்லோரும் சேர்ந்து தியானித்து
2.அந்த அருள் உணர்வுகளை அவர் பால் பாய்ச்சுதல் வேண்டும்.
3.கூடுமான வரையிலும் அந்த நோயிலிருந்து விடுபட முடியும்.

இது ஒரு பழக்கமாக வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் இதைப் போல் சொல்லி “அங்கே நோய் நீங்க வேண்டும்” என்ற வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்.

அவர்களும் அந்த அளவுக்கு வளர்ந்து வந்துவிட்டால் நாம் ஒருவருக்கொருவர் நம் பார்வையில் பல தீமைகளைப் போக்க முடியும்.

1.ஒரு இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஐந்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து
2.நோய்கள் அகல வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெறவேண்டும்
3.குடும்பங்களில் எல்லோரும் நலம் பெறும் சக்தியாக வாழ்ந்திட வேண்டும் என்று தொடர்ந்து செய்யுங்கள்.

ஒரு பிரசாதத்தையோ அல்லது வெறும் தண்ணீரையோ வைத்துத் தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அவர்களுக்குக் கொடுங்கள்.
1அப்படிக் .கொடுத்தீர்கள் என்றால் அந்த தண்ணீரே மருந்தாக மாறும்.
2.நோய் உள்ளவர்கள் குடித்தால் பச்சிலையோ மூலிகையோ கலந்த மாதிரி கசப்பாக இருக்கும்… அதுவே மருந்தாக மாறும்.
3.அதைச் சாப்பிட்டாலே உடல் நலம் பெறுவார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்கிப் பழக வேண்டும்.

எப்படித்தான் இந்த உடல் நலமாக இருந்தாலும் கடைசியில் முதுமை அடையும் பொழுது இந்த உடலை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும். அப்பொழுது உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் நாம் அடுத்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

ஆகவே… எந்த நிலையிலும்
1.நோயைப் போக்குவதற்கும்
2.இந்த அருள் ஞானத்தை நமக்குள் கூட்டிக் கொண்டே இருப்பதற்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் வலுவை நமக்குள் பெற்றிருந்தால்
4.உடலை விட்டு ஆன்மா எப்பொழுது சென்றாலும் நம் நிலை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்.

அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து உயிருடன் ஒன்றிய நிலையாக

1.இப்பொழுது நாம் எடுக்கும் அந்த ஒளியான உணர்வே நிலைத்து நின்று
2.ஏகாந்த நிலை என்ற நிலையை அடைச் செய்யும்…!

இது… மனிதனான பின் நாம் உருப்பெற வேண்டிய நிலைகள்/ ஆகவே இதை நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply