“ஞானதிருஷ்டி…” எப்படிப் பெறுவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

x-rays-divine-rays

“ஞானதிருஷ்டி…” எப்படிப் பெறுவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உயிரணு வளர்ச்சியில் பல நிலைகள் பல கோடி ஆண்டுகளுக்குப் பல மாற்ற நிலைகள் உருமாறி உருமாறி… வலுத் தன்மை கூடிக் கூடி… வளர் கொண்ட நிலை கொண்ட பிறகுதான் அவ்வுயிரணுவின் ஆத்ம வலு கூடப் பெறுகின்றது.

இப்படிப் பல முலாம் தன்மை கொண்டு உருவாகி உருவாகி உயர் கொண்ட வார்ப்பலையில்
நீர்…
நிலம்…
தாவர… தொடர் வளர்ச்சி நிலை
ஜீவ பிம்ப நிலை…
இப்படிப் பல முலாமில் வளரும் வளர்ச்சி நிலையில்
“ஒளி காணும் நிலை” தாவர வளர்ச்சி நிலைக்கும் இல்லை.

ஆரம்ப இனப் புழு வளர்ச்சிகளுக்கும் சுவாச நிலை மட்டும் கூடுகின்றது. ஒளி நிலை வருவதில்லை.

சுவாசத்தை எடுத்து மணம் தரும் வளர்ப்பு நிலை தாவர இன நிலையிலும் தாவர நிலைக்கு அடுத்த நிலையான தாவரத்திலிருந்து சத்தெடுத்து வளரும் ஜீவ உயிரணு புழு நிலைக்கு சுவாச நிலை எடுக்கும் வளர்ப்பு நிலை கூடுகின்றது.

அடுத்த வளர்ப்பின் வார்ப்பு நிலை வளர்ச்சியில் தான்
1.சரீர பிம்பத்தில் எலும்புகளின் வளர்ச்சி நிலையின் வலு கூடிய தன்மையிலிருந்து
2.ஒளி காணும் விழி அமைப்பு நிலை தான் சரீர ஜீவன்களின் வார்ப்பு நிலையாக வழி கொண்டுள்ளது.

இதற்கு அடுத்த நிலை யாது…?

விழி நிலையின் ஒளி காணும் வழி நிலைக்கே… பிம்பக் கூட்டின் “எலும்புகளின் ஊன் நிலை உயர்வின் நிலைக்கொப்ப…” விழியின் ஒளி நிலை அமைகின்றது.

சுவாசத்தால் உண்ணும் உணவின் சத்தெடுத்து ஆவியானது அமிலமாகி உதிரமாகின்றது.
1.அந்த உதிர ஓட்டத்தால் எலும்புகளின் சத்து நிலை
2.எலும்பின் உள் நிலையின் ஊன் நிலை உறுதியின் வலுவால்
3.எலும்புகளின் வளர்ச்சி முற்ற முற்ற
4.ஒளி நிலையின் பிரகாச கூர் நிலை… “ஊடுருவும்” வளர்ச்சி நிலை உருவாகின்றது.

சரீர பிம்ப வாழ்க்கையில் முன்னோக்கி ஒளி காணும் விழி நிலையின் அடுத்த நிலையான ஞான திருஷ்டி கொண்டு விழியை மூடிக் கொண்டே
1.முன்புறம் காணப்படும் எதிர் நிலையின் ஒளி ஈர்ப்பு மட்டுமின்றி
2.விழியை மூடிய தன்மையிலும் விழித்திருக்கும் தன்மையிலும்
3.பின்புறக் காட்சிகளையும் நம் கண்ணுக்கெட்டாத் தொலைவில்
4.இந்தப் பூமி மட்டுமல்லாமல் எந்தப் பூமியானாலும் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் வழி நிலையில்
5.அங்குள்ள எந்த நிலைகளையும் காணவல்ல உயர்வு நிலை பெறலாம்.

அந்த ஞானதிருஷ்டி என்ற நிலையை இச்சரீர பிம்ப இயக்கத்திலிருந்து தான் செயல்படுத்த முடியும். அதாவது ஜீவ சக்தியுடன் கூடிய இயக்க ஓட்டத்தில் மேல் நோக்கிச் செலுத்தி எடுக்கும் சூரிய அலையின் காந்த மின் அலைத் தொடர்புகளை ஆற்றலாக எடுத்து எலும்புகளை வலிப்படுத்த வேண்டும்.

இவ்வெலும்புகளின் வலுத் தன்மையில் எலும்பின் ஊன் வளர்ச்சி பெருகப் பெருக விழி நிலை கொண்டு எதிர் நிலையில் தெரியும் ஒளி நிலை பெற்ற மனித நிலை
1.அதற்கடுத்த நிலையான எங்குள்ளவற்றையும்
2.உள்ள நிலையிலிருந்தே ஞானதிருஷ்டி என்ற
3.ஊடுருவி ஒளி காணும் ஒளி ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற முடியும்.

இன்றைய விஞ்ஞான வைத்தியத்தால் உடல் உறுப்பின் உள் நிலை காணும் ஊடுருவல் புகைப்படப் பதிவு நிலை (எக்ஸ்ரே) செயல்படுவதைக் காட்டிலும் உயர்ந்த காந்த மின் அலைத் தொடர்பின் வார்ப்பக வளர்ச்சியை இச்சரீர இயக்கத்தில் பெற்ற ஆத்ம நிலையின் வலுத் தன்மையால் பெற்றிட முடியும்.

1.ஊடுருவிக் காணும் அந்த உயர் தன்மை கொண்ட விழித் தன்மையின் செயலை வைத்து
2.பூமியின் உள் நிலையில் உள்ள தன்மைகளையும் காணும் நிலை
3.இச்சரீர பிம்ப ஆத்மாவிலிருந்து ஒவ்வொரு மனிதனும் பெறலாம்.

ஆத்மீக வழித் தொடரினால் ஆத்ம வளர்ச்சியினால் அடையும் தன்மை யாது…? என்ற வினாவிற்கு இந்தப் போதனையிலிருந்து விடை காணலாம் பலரும்.

இச்சரீர பிம்ப ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ளும் ஆற்றலினால்
1.ஊடுருவிக் காணும் விழி ஞான ஒளித் தன்மையால்
2.விஞ்ஞானத்தில் வளர்ச்சி முற்றிய செயற்கைக் கோளினால் அறியும் வழியைக் காட்டிலும்
3.உயிராத்மாவின் ஊடுருவிக் காணும் ஒளி ஞான ஒளி அலையினால்
4.எத்தொடரையும் உயிராத்மா தொடர்பைக் கொண்டு
5.ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் நிலைத் தொடர்பிலிருந்து நிலைப்படுத்தும் வழி முறையையும்
6.உருவாகும் ஊடுருவச் சேர்க்கையில் “நிகரில்லா நிலைதனைப் பெறலாம்…!”

Leave a Reply