என்னால் தியானமே செய்ய முடியவில்லை… என்பார்கள்…!

MEDITATION - CONCENTRATION

என்னால் தியானமே செய்ய முடியவில்லை… என்பார்கள்…!

 

சில நேரங்களில் நம்மை அறியாமலே சிந்தனை இல்லாமலே வேறு சிந்தனைகள் வரும். நாம் தியானிக்கும் பொழுது இந்த மாதிரி வரும்.

ஏனென்றால் சிலருடன் நாம் அதிகமாகப் பழகியிருப்போம். அவர்கள் கஷ்டமாக இருந்திருப்பார்கள்.
1.அதை நாம் நுகர்ந்து விட்டால்
2.அந்த அணுக்கள் நம் உடலில் விளைந்து விட்டால்
3.தியானிக்கும் நேரத்தில் நம்மை அறியாமலே அவர்களைப் பற்றிய எண்னங்கள் வரும்.

பலருடைய உணர்வுகள் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் கவர்ந்த பின் அந்த அலையை எடுத்து நம் ஆன்மாவாக ஆன பின் நமக்குள் இது தான் முன்னணியில் வருகின்றது.

நாம் தியானிக்கும் நிலையே மாறி விடுகின்றது. சாதாரணமாகப் பேசிக் கொண்டே இருந்தாலும் திசை மாறிப் போய்விடும்.

அதே போல் நாம் வியாபாரம் செய்யும் பொழுது ஒருவன் ஏமாற்றியிருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகள் திரும்பத் திரும்ப வரும்… நமக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்திருப்போம்.

அப்படிப் பதிவு செய்திருந்தால் ஏமாற்றம் அடைந்த நிலைகள் நமக்குள் இருக்கப்படும் பொழுது அந்த உணர்வுக்கெல்லாம் “வலு ஜாஸ்தி…!”
1.அப்பொழுது தியானத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.அந்த விஷம் கொண்ட உணர்வுகள் (உடலில் உள்ள அணுக்கள்) அது உணவுக்காக
3.தன் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது நம் ஆன்மாவாக அதிகமாகச் சேர்க்கின்றது.
4.அதைச் சுவாசித்தோம் என்றால்… நாம் தியானிப்பது துருவ மகரிஷி என்று…!
5.ஆனாலும் அந்த ஏமாற்றப்பட்ட உணர்வுகள் தான் நமக்குள் வருகின்றது.

இந்த மாதிரி நினைவுகள் வந்தாலும் நாம் கண்களை மூடித் தியானிக்கின்றோம். உடனே கண்களைத் திறந்து நம் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்திட வேண்டும்.

“கண்களைத் திறந்து” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று திரும்பத் திரும்ப எண்ணி அப்படியே கண்களை மூட வேண்டும்.

இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் ஏமாற்றியவர்களின் உணர்வை நமக்குள் இழுப்பது குறையும்.

ஆகவே… ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் பொழுது இத்தகைய நிலை வந்தால் இதைப் போல் நாம் சமாளித்துப் பழக வேண்டும்.

நமக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு… தியானத்தில் குறுக்கே வரும் – நாம் நுகரும் அந்த உணர்வுகள் இரத்தநாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து விடுகின்றது.

அப்படி நம் உடலில் உள்ள அந்த வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அணுக்களுக்கு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும் பொழுது
2.உணவு கிடைக்காது வெறுப்படையும் உணர்வுகளைத் தடைப்படுத்தும்.

அதாவது நம் ஆன்மாவில் வெறுப்படையும் உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது நம் நல்ல குணங்களுக்கும் மற்றதுக்கும் நம்மை அது தடைப்படுத்துவது போல்
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் உடலுக்குள் செலுத்தினோம் என்றால்
3.இரத்தங்களில் கலந்த பின் அந்த அணுக்களுக்கு இதை வலுவான நிலைகள் கொண்டு போனால்
4.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்திவிடும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை இரத்தநாளங்களில் கலக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வுக்குக் கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கும்.

இப்படி அதை ஒடுக்கி ஒடுக்கி நாம் பழக வேண்டும். இப்படிப் பழகினோம் என்றால் அந்தத் தீமை விளைவிக்கும் அணுக்கள் அனைத்தும் மாறுகின்றது.

ஆனால் இவ்வாறு செய்யத் தவறினால் நமக்குள் நோய்களை உருவாக்கும் தன்மையாக உருவாகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றி அமைக்கத் தியானிக்க வேண்டும்.

ஆகவே எப்பொழுதுமே தியானத்தில் அமர்ந்ததும் நம் எண்ணங்கள் சிதறுகிறது என்றால் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

அந்த அருள் ஒளி படர வேண்டும். எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள தீமைகள் அனைத்தும் செயலிழக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.உங்கள் தியானம் சீராகும்..
2.அருள் சக்திகளை நமக்குள் வலுவாகச் சேர்க்க முடியும்.

Leave a Reply