மந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self realization - divinity

மந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நீரை உண்டு பூமியின் சத்தெடுத்துத் தாவரம் வளர்ந்து அந்தத் தாவரங்களில் புழு பூச்சிகள் உண்டாகின்றது. அத் தாவரத்தில் பூக்கள் பூத்து பூக்களின் சுவையை அத்தாவரத்தில் வளர்ந்த வண்டுகளே அதற்குகந்த சுவை சத்தான தேனை புஷ்பங்களிலிருந்து பெற்று தேன் என்ற சுவை கொண்ட திரவகம் கிடைக்கின்றது.

இதைப் போன்று இதை ஒத்த ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்ட நீரைக் கொண்டு அதனதன் வளர்ப்புப் பலன் பெறுகின்றது.

இப்படி இக்காற்று அமிலத்தில் பூமி சுழற்சி காற்று மண்டலத்தில் இந்தப் பூமி சமைத்த அமிலக்கூறுகளின் வளர்ப்பு நிலைக்கொப்ப பூமியின் சத்து நிலை ஒன்றின் தொடர்பு கொண்டு ஒன்றொன்றும் அதன் தொடர்ச்சியில் மாற்றுத் தன்மைகள் பெறுகிறது.

மாற்றங்கள் பெற்றாலும்…
1.இந்தப் பூமியின் அமிலக்கூறே இப்பூமியின் ஈர்ப்புக்குகந்த பூமியுடன் தொடர்பு கொண்ட மற்றக் கோள்களின் சத்தெடுத்து
2.அச்சத்துத் தன்மையை பூமி சமைத்து ஆவியாக்கி அமிலமாக்கி நீராக்கி
3.பூமி வளரும் வளர்ப்பிற்கு தன் சமைப்பின் சத்தைக் கொண்டு பூமி வளர்ந்து
4.பலதையும் கொண்டு அவை அவை வாழ்கிறது.

அதைப் போல் இச்சரீரக் கோளத்தில் எண்ணத்தின் ஞானம் கொண்டு சுவாசத்தால் பெறும் சத்துத் தன்மையைக் கொண்டு
1.தனக்கு வேண்டிய உயர்ந்த சத்துக் குணத்தை எத்தன்மையில் பெற முடியும்…? என்று
2.ஞான சக்தியைக் கொண்டு உணரும் ஆற்றல் தொடர்பினால் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
3.உடலை விட்டுப் பிரிந்த முன்னோர் தொடர்பும் ஞானிகள் சித்தர்கள் சப்தரிஷிகள் வளர்ந்த வளரும் சூரியக் குடும்பங்களின் தொடர்பையும் பெறலாம்.

இந்தப் பால்வெளி அண்டசராசரங்கள் எதுவாகிலும்… எண்ணத்தால் அவற்றுடன் நம் உணர்வின் தொடர்பைச் செலுத்தி.. ஞானத்தின் செயல் அலைக்குச் சுவாசத்தால் இந்த உடலின் அணுத் தன்மையை நாம் எண்ணும் நிலைக்கொப்பச் சத்தாக்கிக் கொள்ளலாம்.

அச்சத்தின் பலனால் ஆத்ம வளர்ப்பை நாம் வளர்க்க சுவாசத்தின் மோதலினால்

1.கவன நரம்பின் காந்த ஈர்ப்புச் சக்தியைக் கொண்டு
2.அவை மோதி வளரும் வளர்ச்சியால்..
3.இந்த எலும்புக்கூடு கூறு அனைத்திற்குமே வலுவாக்கிட முடியும்.

அதிலே… முதலில் இச்சிரசு பாகம் காந்த மின் சக்தியின் வளர்ச்சியைக் கொண்டு மேல் நோக்கி நேராக எடுக்கும் சுவாசத்தால் நாம் பதிய வைக்கும் அலைத் தொடர்பு அனைத்துமே சுவாசத்தின் உணர்வால் சரீர எலும்புகளின் வளர்ச்சி அடையும்.

அந்தச் சத்தின் பலனாக ஆத்ம உயிர் வலு சரீர இயக்கத்தால் எண்ணத்தின் தொடர்புடனே ஆரம்பத்தில் எடுத்த சுவாச அலையின் வளர்ப்புத் தன்மையில் வலுக் கொண்ட அடுத்த வளர்ச்சியாக ஆத்மாவின் இயக்கத்தைத் தனித்து இயங்கவல்ல இயக்கத் தொடர்பிற்குச் செயலாக்க முடியும்.

தனித்து இயங்கும் நிலை பெற்று ஒவ்வொன்றையும் சித்தின் தன்மை கொண்டு ரிஷித் தொடர்பில் வளர்ச்சியாகி… ரிஷித் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையில் வாழும் தொடர்பிலேயே அதைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் காட்டிலிருந்தும்… ஜடா முடி தரித்தும்… சாமியார்கள் என்ற காஷாயம் பூண்டு… ஜெப மந்திரம் ஓதி பகவானின் அடிமையாக அடி பணிந்து அடைவதல்ல ரிஷித் தன்மை…!

ஞானத்தின் தொடர்பலையால் சுவாசத்தால் பெறும் உயர் காந்த சக்தியின் தொடர்பை
1.இச்சரீரம் எடுத்துச் சமைக்கும் காலங்களில் அடையக்கூடிய இன்பமும் உடல் ஆரோக்கியத் தன்மையும்
2.இனிமை கலந்த உயர் அலையின் சுழற்சியாக
3.தாம்பத்ய வாழ்க்கை இனிய அன்பு நற்குணத் தொடர்பால் பெறவல்ல இனிய சக்தியைக் கொண்டே
4.உலக சிருஷ்டியை சிருஷ்டிக்கும் ஆற்றல் மனித எண்ண உணர்வு செயலுக்குத்தான் உண்டு.

Leave a Reply