நாம் அடையப் போகும் “பேரானந்தப் பெரு நிலை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

shiva-parvati

நாம் அடையப் போகும் “பேரானந்தப் பெரு நிலை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் அணுக் கதிர்களின் (கதிரியக்கம்) செயலைக் கொண்டு மிக மிக நுண்ணிய வைத்திய முறைகளைச் செயல்படுத்துகின்றார்கள்.

மேலும் அதை வைத்துத் தொழில் நுட்ப முறைக்கும்… வானக் கோளங்களின் தொடர்பு நிலைகளை அறியவும் இந்தப் பூமியின் உள் நிலையை அறியவும் முற்படுகின்றார்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு நாடுமே…
1.ஒன்றுக்கொன்று தெரியாத நிலையில்
2.பூமத்திய ரேகையின் மையப் பகுதியில் அணுச் சேர்க்கையின் நுண் அணு வீச்சுக் கதிர்களைக் கொண்டு
3.பூமியின் உள் பாகத்தில் கிடைக்கப் பெறும்
4.சில ஆக்கச் சக்தியின் அலைத் தொடர்பு வளர்ப்புக்களைத் தன் பாகத்திற்குத் திருப்பி
5.தன் நாட்டை வளப்படுத்துவதற்காகவும்
6.அதே சமயத்தில் தனக்கு மேல் விஞ்ஞானத்தில் வளர்ந்த சில நாடுகளை வளரவிடாத தன்மைக்காகவும்
7.பூமியின் உள் பாகங்களிலேயே விஞ்ஞானத்தால் இவ்வொளிக் கதிர்வீச்சினைப் பாய்ச்சி
7.அதாவது நீர் வாயு லேசர் இயக்க அலைகளைப் பாய்ச்சிப் பல பாகங்களில் பூகம்ப நிலை ஏற்படும் வண்ணம்
8.பல வேலைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
9.(வளர்ச்சி அடைந்த நாடுகள் செய்கின்றன இன்று வரையிலும்)

விஞ்ஞானத்தின் செயலைக் கொண்டு… உயிர் காக்கும் நிலைக்காக மருத்துவ ஞானங்கள் பல செயல்படுத்தியிருந்தாலும்… செயலின் வேகத்தில்… உண்மை உயர்வு வாழ்க்கை எது..? என்று மனிதன் இன்று அறியவில்லை.

தன்னுடைய இனம் புரியாத இன்பத்திற்காக உயர் குண உயிரை உணரும் பக்குவ நிலை இன்றித்தான் இன்றைய மனித வாழ்வு உள்ளது.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்ம உணர்விற்கு இன்பம் உண்டா…?

1.ஜீவ சக்தியின் சரீர வாழ்க்கையில் பெறும் இன்பம் தான் இன்பம் என்ற எண்ணம் மனிதனுக்கு உண்டே தவிர
2.ஆத்ம ஞானத்தில் உணரும் உயர் இன்ப நிலையின் உண்மை நிலை புரியவில்லை…!

சரீர நிலையில் உணரும் இன்பத்தைக் காட்டிலும்… “பேரானந்த பெரு நிலை…” என்று நம் முன்னோர்கள் உணர்த்திய உயர் நிலையின் உண்மை நிலையை வளர்ந்த ஆத்ம ஞானத்தின் சித்து நிலையிலே உணரலாம்.

உணவின் சுவையும்… மணத்தின் மகிழ்வும்… இசையின் இனிமையும்… இயற்கையின் எழிலையும்… பிள்ளைக் கனியமுதின் சொல் அமுதையும்…
1.இந்த உடல் வாழ்க்கையில் உணரும் பக்குவத்தைக் காட்டிலும்
2.ஆத்ம சித்து சக்தியின் தொடர்பினால் ஆத்மா பெறும்
3.இன்பத்தின் பெரு நிலையை உணரும் சக்தி நிலை பெற்றால்
4..சரீர வாழ்க்கையில் பெற்ற இன்பத்தைக் காட்டிலும்
5.பல கோடி இன்ப நிலைகள் சித்து ஞானத்தில் பெற முடியும்.

வாழ்க்கை நிலையில் கலந்து உறவாடும் எண்ணப் பரிமாற்ற நிலை எபப்டி உள்ளதோ… அதைப் போன்றே.. ஆத்ம தொடர் ஞான சித்துவின் வலுக் கொண்ட வளர்ச்சி பெற்ற தொடர்பு நிலையும் பலவாக உண்டு.

கூடிய வாழ்க்கையும்… கலந்துறவாடும் எண்ண நிலையும்… வாழ்க்கைத் தொடர்பில் எப்படி உண்டோ அதைப் போன்றே
1.ஞானச் சித்தின் ஞானிகளும் ஆத்ம சொந்தம் கொண்டு
2.இன்பம் கொண்ட இரு நிலை இன்பத்தையும் பெறுகின்றனர்.

ஜாதி… மதம்… உற்றார்… உறவினர்… என்ற பிடிப்பு வேலியற்ற “உயர் ஞான சொந்த பந்தங்கள்” ஆத்ம தொடர் கொண்டு அடையும் நிலையில்…
1.இரு நிலை இன்பத்தின் பெரு நிலை பெறும்
2.வளர்ப்பு நிலை இப்படி உண்டு.

Leave a Reply