
விஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்ற நிகழ்ச்சி
நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஒரு சமயம் ஆஸ்த்மா நோயால் கணவர் மிகவும் அவதிப்பட்டார்.
ஓரளவுக்குச் செல்வத்தைச் சம்பாரித்து எளிய குடும்பமாக இருப்பினும் தன் மனைவி மீது இருந்த அந்தப் பற்றின் தன்மையும் குழந்தை மீது இருந்த பற்றின் தன்மையும் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.
ஆனால் தன் நோயினால் அதைத் தாங்காத நிலைகள் கொண்டு விஷத்தை உணவாக உட்கொண்டு விட்டார். அவரின் ஆன்மா பிரிந்து விட்டது.
பிரியும் பொழுது தன் மனைவியின் நினைவாகவே ஆன்மா சென்றதால் மனைவியின் உடலுக்குள் சென்றுவிட்டது.
ஆன்மா மனைவி உடலுக்குள் சென்ற பின் அவர் விஷத்தைக் குடித்த பின் அவர் உடல் எப்படித் துடிதுடித்ததோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடி துடிப்பு வந்துவிட்டது.
1.அந்த ஆன்மா மனைவியின் இரத்தநாளங்களில் சுழன்று வரப்படும் பொழுது
2.சிறுமூளை பாகம் சென்ற பின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதே உணர்வு அதே சொல் அதே செயலாக வருகின்றது.
இப்படித்தான் அந்த உடலை இயக்கிக் கொண்டிருந்தது.
என்னிடம் (ஞானகுரு) அவரை அழைத்து வந்தார்கள். தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.
இதற்கு முன்னாடி ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிறிது நேரம் அந்த உணர்வின் இயக்கம் இருக்கும். பின் சரியாகப் போகும் ஆனால் இப்பொழுது இந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமாகிவிட்டது என்றனர்.
ஆவிகளை ஓட்டுபவர்களிடம் எல்லாம் சென்று நாங்கள் பார்த்தோம். செல்வங்களை எல்லாம் செலவழித்தோம். வறுமைக் கோட்டில் மிகவும் வாடிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் என்னிடம் சொல்கிறார்கள்.
அப்பொழுது அந்த அம்மாவுக்கு நினைவு இல்லை. குழ்ந்தைகளும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்தைச் சார்ந்தோருக்கு விவரத்தைச் சொல்லி இந்த முறைப்படி தியானமிருங்கள் என்று சொன்னேன்.
1.அந்த உடலில் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்த உடலில் உள்ள ஆன்மா அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்.
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.
அதன் வழியிலே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் செய்தார்கள். என்னிடம் வந்திருக்கும் பொழுது ஒரு அரை மணி நேரம் இதைச் சொல்லிச் செய்தார்கள்.
அந்த அம்மாவிற்குச் சிறிது தெளிவாகியது. பின் எழுந்த பின் இதே போன்று அவர்களிடமும் விவரத்தைச் சொன்ன பின் அவர்களும் இதே போல் நினைவைச் செலுத்தினார்கள்.
பின் பரிசுத்தமாகியது…!
பின் அந்த அம்மாவுக்கு நல்ல நிலைகள் வந்து அவர்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கும் நிலையும் வந்தது.
கடைசியில் இறந்த பின்…
1.அந்த ஆன்மாக்கள் இரண்டுமே ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது. ஒளி பெறும் சரீரம் பெற்றது.
இது இருபத்தைந்து வருடம் முன்னாடி நடந்த நிகழ்ச்சி. (ஞானகுரு உபதேசம் செய்தது 1997).
ஆரம்ப நிலைகளில் நான் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றி வரும் பொழுது இத்தகைய நிலைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வந்தது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் இப்படி எளிதில் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப முடியும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.