மகரிஷிகளுடன் பேசுங்கள்

ஈஸ்வரபட்டர்


1. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

குடும்பத்தில் உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடலை விட்டுப் பிரிந்து சென்றால்
என்ன செய்யவேண்டும்?

 

அந்த மாதிரி நேரங்களில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

நேற்றெல்லாம் நன்றாக இருந்தார்,

எல்லோருக்கும் நல்லது செய்தார்.

ஆனால், “இன்று இப்படிப் போய்விட்டாரே..,” 
என்று

பாசத்துடன் அவர்களை எண்ணினால் அந்த ஆன்மாக்கள் உங்கள் உடலுக்குள் வந்துவிடும்.

 

நம் உடலுக்குள் வந்த பின், அவர்கள் உடலில் என்னென்ன நோய் இருந்ததோ, என்னென்ன
தீமைகள் இருந்ததோ அதுவெல்லாம் நமக்குள் வரும். அது நமக்குள் விளையத் தொடங்கும்.
இதைத்தான் பரம்பரை நோய் என்பார்கள்.

 

இதைத் தடுக்க வேண்டுமல்லவா.

 

 ஆகவே, இந்த மாதிரி செய்திகளைக்
கேட்டவுடன் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

 

அந்தச் சக்தியை வலு ஏற்றிக் கொண்டு, உடலை விட்டுப் பிரிந்த அந்த
உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்  என்று உந்திச் செலுத்த வேண்டும்.

 

இவ்வாறு செய்யும்போது அவர்களும் விண் செல்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகள்
நமக்குள் வந்து நோயாக மாற முடியாது. அவர்கள் பட்ட துயரங்களோ துன்பங்களோ நம்மை சாப
அலைகளாக இயக்காது.

 

ஆகவே, நாமும் தீமையை நீக்கிடும் நிலை பெறுகிறோம்.

 

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

 

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் விண்ணிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை
நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

 

இந்த உடலுக்குப்பின் நாமும் அவர்கள் சென்ற அதே வழியில், எளிதில் விண் சென்று
சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

2.  கூட்டுத் தியானத்தின் மூலம் நீங்கள் பெறும்
சக்தி சாதாரணமானதல்ல

கூட்டுத் தியானத்தில் நாம் என்ன செய்கிறோம்?

 

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
அனைவரும் தீமையை நீக்கிடும் அருள் சக்தி பெற்று வாழ்க்கையில் நலமும் வளமும்
பெறவேண்டும் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து உணர்வின் ஒலிகளை எழுப்புகிறோம்.

 

இப்படி, எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று வெளிப்படுத்தும் இந்த உணர்வின்
ஒலிகள்

உங்கள் செவிக்குள் மோதி

வலிமையான சக்தியாக மாறுகிறது.

 

நீங்கள் இதை நுகரும்போது

உங்கள் உயிர் அது எல்லாவற்றையும் சேர்த்து

ஒரு வலிமையான அணுவாக மாற்றுகிறது.

அப்பொழுது தீமைகளை நீக்கும் வலிமை உங்களுக்குள் பெருகுகிறது.

 

உங்கள் வாழ்க்கையிலோ அல்லது குடும்பத்திலோ அங்கே குறைகளோ தீமைகளோ பகைமைகளோ வந்தாலும் கூட்டுத் தியானத்தில் பெறுகின்ற சக்தியை நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

 

“தீமைகளை நீக்கும்” – “தீமைகளிலிருந்து மற்றவரையும் மீட்டிடச் செய்யும்”

ஆற்றல் மிக்கவராக நீங்கள் வளர முடியும்.

ஆகவே, கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளுங்கள்.

அந்தச் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

 

கூட்டுத் தியானத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு சீராகத் தியானித்தால் பின் உங்கள் அனுபவம் பேசும். 

 

தெரிந்து கொள்ளலாம் நீங்கள்.


%d bloggers like this: