“முழு முதல் படைப்பு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

first god

“முழு முதல் படைப்பு…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆதியிலே… மண்டலங்கள் சுழன்று… வளர்ந்து… ஆவியாகி… குளிர்ந்து… மீண்டும் ஆவியாகி… அந்தந்த மண்டலங்கள் விடும் சுழற்சி ஈர்ப்பு வெக்கை உணர்வில்… தன் வளர்ப்பின் வளர்ப்பிற்குத் தன் சுவை ஈர்ப்பை வளர்த்துக் கொண்டே வந்தது.

அவை அவை எடுத்துச் சமைத்துக் கக்கிய… பல சுவை கொண்ட பல மண்டலங்களின் தொடர்பு கொண்டு… பல அலையின் ஈர்ப்பின்… தொடர் அலைச் சேர்க்கை… சுவை அமில குண ஈர்ப்பு நிலை ஏற்பட்ட பிறகு தான் “சூரிய குடும்பமாகவும் அதிலே பூமியாகவும்” மண்டலங்கள் வளர்ந்தன.

அவை எடுத்த சுவை குண சமைப்பு அமிலத் தொடரினால் பல பல வளர் மாற்றத்தின் கூட்டுக் கலவையில் சமைத்த சத்துத் தன்மையின் சக்தி குணம் இந்தப் பூமியில் படர்ந்து தாவர இன வளர்ச்சியானது.

பின் ஜீவ சக்தி வளரக்கூடிய காற்றமில வளர்ச்சி உற்பத்தி வளர்ப்பு நிலை கொண்ட பிறகுதான்… இந்தக் காற்றான ஆவி குணத்தின் ஜீவ சக்தி வளரக்கூடிய தன்மை வளர்ந்து… பலவில் பலவாக ஆனது.

ஜீவ வளர்ச்சியின் பல பல மாற்ற சுழற்சி ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் மோதுண்டு மோதுண்டு ஒவ்வொரு ஈர்ப்பு மாற்றத்திலும்… ஒவ்வொரு மாற்றத்தின் சக்தியும்… ஒவ்வொரு வளர்ச்சியாக அந்த உயிரணு கூட்டிக் கொண்ட பல சுவை அமில வளர்ப்புடன் வார்ப்பாகி ஜீவ பிம்ப நிலை கொள்கிறது.

இஜ்ஜீவ பிம்பத்தில்…
1.சுவைக்கும் நிலையும்
2.செயலாற்றக் கூடிய அங்க அவயங்களும்
3.ஒளி ஈர்த்துச் செயலாற்றும் திறமையும் பல வார்ப்பில் மாறி மாறி
4.ஒவ்வொரு நிலை கொண்டு மோதுண்ட சுழற்சி வழித் தொடரில் ஒலி ஒளியாகி
5.வழித் தொடர் கொண்டு உயர் சக்தி நிலை பூண்டு மனிதப் பிம்பக் கரு ஞானம் கூடியது.

சூரியனைச் சேர்த்து நாற்பத்தி எட்டு மண்டலங்களும் ஒன்றாக இயங்கித் தன் வளர்ப்பின் வளர்ப்பாக பல நட்சத்திரங்களை வளர்த்துச் செயலாகும் சக்தியில் உருவான உரு நிலை தந்த மனித ஞான பிம்பம் வளர்ந்ததப்பா…!

மண்டல ஈர்ப்பின் சுழற்சி கதியில் நேர்ப்பார்வையில் செயல் வழியில்
1.இயற்கைத் தன்மையில் சுழலும் சக்தியையே
2.இந்த மண்டலச் சந்திப்பு நிலைதனைத் திசை திருப்பும் நிலைதனை ஏற்படுத்துகின்றனர் சப்தரிஷிகள்.

இந்தப் பூமியில் உள்ள மனிதனைக் காட்டிலும் “ஞான சக்தியில் வளர்ந்த மனிதக் கரு உரு நிலை” இந்த நாற்பத்தி எட்டுக் மண்டலங்களில் இல்லா நிலை… மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களில் உண்டு.

இந்தப் பேரண்ட பெரு நிலையின் வளர்ப்பு செயல் எவை…? என்று எப்படி அறிய முடியும்…?

உயிரணு தோன்றி… ஈர்ப்பு நிலையில் சிக்குண்ட செயல் வழிக்கு… முடிவில்லா உருமாற்ற நிலை வளர்ப்புச் சுழற்சியின் முடிவே இல்லை.
1.வளர்ப்பின் வளர் நிலையை உயர் வளர்ப்பின் வளர்ப்பாக்கி
2.உன்னத வளர்ப்புகளை வளர்க்க ஆரம்ப உயிரணு தான் வித்தப்பா…!

இந்த மனித பிம்ப உடல் சேமித்த பதம் கொண்ட பக்குவ நிலைதானப்பா வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் நிலை. இதை உணர்ந்து உயர் ஞான அலையின் வழி சென்றோமானால்… “உருவாகும் உருவ சக்திக்கே நாம் உருவம் தரலாம்…!”

மனிதப் படைப்பு என்பது முழு முதல் கடவுள்…!

Leave a Reply