நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

PRAISE THE LORD

நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

 

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்..” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

Leave a Reply