அகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

herbal power of agastyar

அகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி

 

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கு உங்கள் நினைவைச் செலுத்தி அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்தப் பச்சிலையின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அந்தப் பச்சிலையின் மணங்கள் இப்பொழுது வரும்.

சிலர் கிடைக்கவில்லை என்றால் “எனக்குக் கிடைக்கவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் சிலருடைய எண்ணங்கள் சில நேரங்களில் உங்களை அறியாதபடி வேறொரு பக்கம் திசை திருப்பும்.

இந்தப் பேருண்மையின் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் பொழுது இடைமறித்தே..
1.தொல்லைப் பட்டவர்கள் தொல்லையின் நிலைகளைச் சிலர் எண்ணும் பொழுது
2.“நமக்குக் கிடைக்குமா…?” என்ற சில உணர்வுகளும் ஊடுருவும்.

அப்படி ஊடுருவும் நிலை வரும் பொழுது நாம் தியானிக்கும் பொழுது அந்த நேரத்தில் கிடைக்காமல் இருக்கலாம். அந்த அகஸ்தியன் பெற்ற மணங்களை அறியவிடாமலும் செய்யலாம்.

அப்படி அறிய முடியவில்லை என்றால் அது கிடைக்கவில்லையே…! என்று சோர்வடைய வேண்டாம். ஆக அதை நாம் உணர முடியவில்லை என்று தான் வருகின்றது.

உபதேச வாயிலாகப் பதிந்த உணர்வுகள் கொண்டு நீங்கள் தியானித்தாலும் அகஸ்தியன் உணர்வை உணரும் தடையை ஏற்படுத்தும் பொழுது அதை உங்களால் நீக்கிட முடியும் என்ற நம்பிக்கையில் நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற முடியும்
2.அவர் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வை விளைய வைத்த அந்த அருள் சக்தியை
3.எங்களுக்குள் வளர்க்க முடியும் என்று வலுவாக எண்ணுங்கள்.

இப்பொழுது கிடைக்கவில்லை என்றாலும் இரவு தூங்கும் பொழுது கூட இந்த உணர்வின் உண்மையை நீங்கள் உணர்ந்திட வேண்டும். அதை வளர்த்திட வேண்டும்.

கிடைக்கவில்லை என்று சோர்வடைய வேண்டாம்.
1.நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்கள் கிடைக்கும்
2.அதை நீங்கள் எப்படியும் பெறவேண்டும்
3.நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்
4.உங்களுடைய சொல்லும் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் நோய்கள் பறக்க வேண்டும்
5.அருள் ஞானம் அங்கே உதயமாக வேண்டும்
6.இன்றைய விஞ்ஞான உலகில் தீமைகள் பரவி வரும் நேரத்தில்
7.தீமைகளை அகற்றும் சக்தியும் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

தீமைகளைத் தடுக்கும் சக்தி உங்களுக்குள் வளர்ந்து உங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகி அவர்களும் தீமைகளை வென்றிடும் சக்தி பெறவேண்டும் அவர்கள் உடலிலும் அது விளைய வேண்டும் என்பதே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய அருள் வழி.

ஏனென்றால் ஒன்றில் விளைந்து தான் ஒன்றிலிருந்து வருகின்றது.
1.குருவின் சக்தியில் விளைந்தது
2.அதற்கு முன் அகஸ்தியனின் சக்தியில் விளைந்தது.
3.அகஸ்தியன் சக்தியை குருவின் சக்தி விளைய வைத்தது
4.அந்த உணர்வின் சக்தியை எமக்குள் (ஞானகுரு) விளைய வைத்தார்.

விளைந்த வித்தினை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவாக்கி அதை விளையும் பருவத்தினையும் ஏற்படுத்துகின்றோம்.

அப்படிப் பதிவான வித்தின் துணை கொண்டு அந்த அகஸ்தியரின் அருள் உணர்வுகளை நீங்கள் எவ்வாறு பருக வேண்டும்…? எதனை வளர்க்க வேண்டும்…? எதனை உருவாக்க வேண்டும்…? என்ற உணர்வினையும் உங்களுக்குள் விளக்க உரைகளாகக் கொடுக்கின்றோம்.

அதன் துணை கொண்டு… அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை எல்லாம் நாங்கள் பெறுவோம் என்ற உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

சிறிது தடைப்பட்டாலும்.. அகஸ்தியனின் அருளாற்றல் மிக்க சக்தியை
1.எனக்குள் நுகர்வேன்
2.அதை வளர்ப்பேன்
3.அருள் வழியில் செல்வேன்
4.அருளானந்தத்தைப் பெறுவேன் என்ற உணர்வை ஏங்கிப் பெறுங்கள்.

அந்த அகஸ்தியனின் அருள் சக்திகள் இங்கே நமக்கு முன்னாடி மிதந்து கொண்டுள்ளது. அதை நாம் அனைவருமே பெறமுடியும்.

அகஸ்தியனால் வளர்க்கப்பட்ட சக்திகள் பரவிப் படர்ந்து கிடந்த நிலையைத்தான் வியாசகன் தனக்குள் பெருக்கிக் கொண்டு அந்த உணர்வின் நிலையை மீண்டும் உருவாக்கப்பட்டு உண்மையின் உணர்வை வெளிப்படுத்தினான்.

வியாசகனுக்குப் பின் அந்த அரசர்கள் தங்கள் உடலின் இச்சைக்கே சக்திகளை வளர்த்துக் கொண்டவர்கள். ஆக இந்த உடல் இச்சைக்கு நமக்குத் தேவையில்லை.

உயிரின் உணர்வின் தன்மை கொண்டு என்றும் மரணமில்லாப் பெருவாழ்வு என்றும் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையும் அருளானந்த நிலை என்றும் அடைவதே வைகுண்ட ஏகாதசி – ஏகாந்த நிலை.

“வைகுண்டம்,,,” என்பது எங்கே அது உருவானதோ அதன் உண்ர்வின் தன்மையை நாமும் எடுத்துக் கொண்டால் ஏகாந்த நிலைகள் கொண்டு என்றும் நாம் மகிழ்ந்து மகிழ்ந்து வாழும் உணர்வின் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றோம்.

அந்த ஏகாந்த நிலை பெறும் தகுதியை உருவாக்கத்தான் இந்த உபதேசமே…!

அந்த அகஸ்தியன் பெற்ற அருளானந்தத்தை நீங்களும் பெற்று அவன் துருவனாகி அந்தத் துருவ நட்சத்திரமாக ஆன நிலையை நிச்சயம் அடைய முடியும்.

அந்த அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளையும் அவன் நுகர்ந்தறிந்த நஞ்சினை வென்றிடும் மகா பச்சிலைகளின் மணங்களையும் தியானிக்கும் பொழுது நீங்கள் அனைவரும் அந்த மணத்தைப் பெறுவீர்கள்.

மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்கள் உங்களுக்குள் விளையும்…!

Leave a Reply