ஞானத்தில் வளர்ச்சி பெற்ற மனித உயிரான்மாக்களின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

eswarapattaya-namaha

ஞானத்தில் வளர்ச்சி பெற்ற மனித உயிரான்மாக்களின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காட்சி:-
தூளியில் குழந்தையைப் போட்டுத் தாலாட்டித் தாய் தூங்க வைக்கின்றாள். அந்தக் குழந்தை இன்பமாகத் தாயின் தாலாட்டுடன் மகிழ்ந்து உறங்குகிறது நிம்மதியாக…!

தாய் தன் குழந்தையை அன்பாகத் தாலாட்டி உறங்க வைத்தாலும் அந்தத் தூளி உறுதியாக இருக்கிறதா…? அதில் கட்டியுள்ள துணி கெட்டியாக இருக்கின்றதா,,,? குழந்தையின் மேல் பூச்சி புழுக்கள் விழாமல் உள்ளதா…? என்றெல்லாம் பல தற்காப்புகளைப் பார்த்துத்தான்… அந்தக் குழந்தையைத் தாலாட்டும் இன்ப நிலையில் மகிழ்ந்து… குழந்தையின் நிம்மதியான உறக்கத்திற்கு உகந்த பாதுகாப்பைச் செய்கிறாள் அந்தத் தாய்.

இதிலிருந்து எதனைப் புரிந்து கொண்டீர்கள்..?

இன்று அந்தக் குழந்தைக்குத் தாயாகத் தன் சுயநலத்தை மட்டும் எண்ணாது அந்தக் குழந்தையைப் பேணிக் காத்து அதிலே தன் நிறைவைக் காணும் தாய்
1.அதே குழந்தையை வளர்த்து…
2.அது ஒரு குழந்தையை ஈன்று பேணி வளர்க்கும் முறைக்கு
3.அத்தாயே அக்குழந்தையை வழி நடத்திச் செல்கிறாள்.

இதன் தொடர் வழிக் காலங்கள் உருண்டு கொண்டே வருவதைப் போன்று
1.நம் சப்தரிஷிகளால்… அவர்கள் பெற்றெடுத்த உயர் ஞானக் குழந்தைகளை
2.அவர்களின் வழித் தொடர் ஞானங்கள் வழி நடந்தே செயல் கொள்ள
3.அவர்கள் செயல் உலகெங்கும் வழிபட்டுக் கொண்டுள்ளது.

இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இன்றுள்ள ஜென்ம நிலை இந்தக் கலியில் கடைசியாக முடிவுற்று இதன் நிலை முற்றுப் பெறாமல் இருக்கத்தான் நம் சப்தரிஷிகளின் செயல் ஞானத் தொடர் இன்று உள்ளது.

தன் ஆத்மக் குழந்தைகளை இந்தப் பூமியின் ஈர்ப்பு அமிலத்துடன் சூட்சமம் கொள்ள அவர்கள் வழிப்படுத்தினால் தான் கலியில் ஞானம் பெருகும்.

1.கலியின் வட்டத்தில்… ஞான ஜெந்துக்கள் ஜீவன் கொண்டு
2.அஜ்ஜீவ சக்தியிலிருந்து எடுக்கும் ஜெகத்தின் ஜோதி சக்தியிலிருந்து தான்
3.எந்தச் சக்தியும்… எந்தச் சக்தி என்பது… எந்த ஒரு வளர்ச்சி பெறும் அமில குணங்களின் மண்டல சக்திகளே வளர முடியும்.

இன்றுள்ள இந்தக் கலியில் வாழும் மக்களின் நலனை உயர்வாக்கி ஞானத்தின் பால் அவர்களின் எண்ண ஒளியைச் செயலாக்குவது உலக வளர்ச்சி மட்டுமல்லாமல்
1.எம்மண்டலங்களையும் வளர வைக்கும் சக்திக்கு
2.மனித ஞான வழியில் வந்த செயல் ஞானம் வேண்டுமப்பா…!

இது நாள் வரை தந்து வந்த பாடத்தின் பொருள் புரிந்ததா…?

இன்றுள்ள நம் பூமியில் உள்ள மனித ஆத்மாக்களுக்கு எந்த நிமிடத்தில் எந்த ஆத்மா பிரிகிறது…! என்பது தெரியாத ஓர் சூழ்நிலை உலகெங்கும் உருவாகி… உலக மாற்றத்திற்கு நாள் நெருங்க நெருங்க மனித ஆத்மாக்களின் எண்ணங்களும் சிதறிவிட்டன…!

சிதறியுள்ள ஆத்மாக்களின் ஜெபத்தின் ஈர்ப்பால் நாமும் பொறுக்கி எடுக்கின்றோம். ஆகவே மண்டல உரு வளர்ச்சிக்கு உரு தாருங்கள்…!

Leave a Reply