இந்த உலகில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and body

இந்த உலகில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்த உலகில் உள்ள பொருள் பொக்கிஷங்கள் அன்றாண்ட அரசர்களாலும் முன்னோர்களாலும் சில முக்கியமான கோவில்களிலும்… அகழிகளிலும்… சுரங்கப் பாதைகளிலும்…. மற்றும் சில பெயர் குறிப்பிட வேண்டாத சிலைகளுக்குள்ளும்… பீடங்களுக்குள்ளும்… பல பொருள்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படி வைத்தவர்கள்…
1.தன் ஆத்மா இன்றளவும் உயர முடியாமல்
2.தான் பதுக்கி வைத்த அந்த பொருள் என்ற பேராசைப் பொக்கிஷ சுழற்சியில்
3.அந்த ஆவிகள் இன்றளவும் அங்கேயே சுழன்று வாழ்கின்றன.

நம் எண்ணத்தினால் அதனை அடைய வேண்டும் என்ற தெய்வ சக்தியுடன் செயல்பட்டுச் சித்து நிலை கொண்டு அறிந்திடலாம். அதை எடுக்கவும் செய்திடலாம்.

ஆனால் அதனால் அடையக்கூடிய பொருள் என்ன…?

பிம்பப் பொருளை அடைந்தால் நாம் பெறவேண்டிய ஞானப் பொருளின் வழித் தொடர் அற்றுப் போய்… மேன்மேலும் இந்தப் பேராசையின் சுழற்சியில் சுற்றிக் கொண்டே வாழ்ந்து.. இதே நிலையில் பொருளைப் பதுக்கியவனின் ஆன்மா போல் சுழலத் தான் முடியும். “நல்ல நிலை அடையும் வழி இல்லை…!”

இந்தப் பொருள் மட்டுமல்லாமல் இந்தப் பூமிக்கடியில் இயற்கை வளமுடன் வளர்ந்திட்ட பல அபூர்வ கனி வளங்கள்… படிவக் குவியல்கள்… எங்கெங்கு உள்ளன…? என்பதனை எல்லாம் நாம் அடையும் சித்து நிலையால் உணரலாம்.

அதன் நிலையை வெளிப்படுத்தி இந்த உலக ஆன்மாக்களை மேன்மேலும் இந்தப் பேராசையின் செயற்கைச் செயலுக்குத்தான் அது முன்னோடியாக நிற்குமேயன்றி…
1.எப்பொருளை அடைய வேண்டும்…? என்ற
2.பரம்பொருளின் நிலை பெற வழியாகாது.

சித்தர்களின் சப்தரிஷிகளின் செயலால் தான் இந்த உலக ஆத்மாக்கள் இன்று வரையிலும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல கோடி உயிரணுக்களைக் கொண்ட இந்த உடலின் பிம்பத்திற்கு
1.இந்த உயிர் என்ற பொக்கிஷத்தினைப் போன்ற
2.பலவாக உள்ள உலகத்தில் ஒன்றாகிய தெய்வச் சக்தியைப் பெறும் பொக்கிஷத்தை நாம் பெறும் ஞான அருளைப் பெற வேண்டும்.

ஆகவே உலகத்திலுள்ள “பொருள் பொக்கிஷத்தை..” நாடி நாம் செல்லக்கூடாது.

Leave a Reply