மரண பயம் வருவதன் காரணம் என்ன…? வெல்வது எப்படி…?

lIght destination

மரண பயம் வருவதன் காரணம் என்ன…? வெல்வது எப்படி…?

 

நமக்குள் இருக்கும் சகோதர தத்துவம் எதிலே இருக்க வேண்டும்..?
1.நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் எனக்குள் அந்தச் சகோதரத்துவம் வளர்கின்றது.
2.மற்றவர்கள் குடும்பம் வளம் பெறவேண்டும் என்று நான் எண்ணினால்
3.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களும் நலம் பெறுகின்றது.
4.ஏனென்றால் எனக்குள் எல்லாமே ஒரு குடும்பமாகத் தான் வளர்கின்றது.
5.நீங்கள்.. நான்… எல்லோரும் சேர்த்து… இந்த உலகம் ஒரு குடும்பமாக இருக்கின்றது.

ஒரு உலகமாக வாழ்கின்றது. ஒரு ஊராக வளர்கின்றது. யார் பிரிந்திருக்கின்றோம்…? யாரும் யாரை விட்டுப் பிரிந்து இல்லை. ஒரு தடவைச் சந்தித்து விட்டால் இரண்டு பேர் உணர்வும் ஒன்றாகிவிடுகின்றது. ஒன்று நட்பாகின்றது அல்லது பகைமையாகின்றது.

பகைமை உணர்வு நமக்குள் வரும் பொழுது அந்தப் பகைமையைத் தான் பெருக்கத் தொடங்குகிறது… (அந்த நேரத்தில்) ஒரு நட்பின் தன்மை வரும் பொழுது நமக்குள் அந்த நட்பின் தன்மையை நமக்குள் பெருக்காது.

அப்படி நமக்குள் பகைமை வரும் பொழுதுதான் ஐயோ…! மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… கை கால் வலிக்கிறது… முதுகு வலிக்கிறது… இடுப்பு வலிக்கிறது…! என்றெல்லாம் சொல்லத் தொடங்குவோம்.

இந்த உணர்வு வர வர….
1.நமக்குக் கோபப்பட்டால்தான் அதற்குச் சாப்பாடு கிடைக்கும்.
2.அல்லது என்னை இப்படிப் பேசினான்…! என்று வேதனைப்பட்டால்தான் அந்த வேதனையான அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

இதெல்லாம் இனம் புரியாது நம்மை இயக்கும்…!

சும்மா இருந்து பாருங்கள்..! உங்களை அறியாது வேதனை வரும். உங்களை அறியாது கோபம் வரும். இது எல்லாம் நமக்குள் இருந்து அந்தப் பகைமைகளை உருவாக்கிக் கொள்வது தான்…!

இங்கே இப்படிப் பகைமை உருவாக்கப்படும் பொழுது புறத்திலேயும் பகைவர்களை உருவாக்கிவிடும். அப்புறம் “மரண பயம்” என்ற நிலைகள் வரும்.

மரண பயம் எதிலே வருகிறது…?

மனிதனாகப் பிறந்த நல்ல அணுக்கள்
1.இப்படியே நாம் போய்விடுவோமா…!
2.நம் ஆசை…! அதாவது நாம் ஆசைப்பட்டது கையை விட்டுப் போய்விடுமா…?
3.நாம் பாதாளத்திற்குள் போய்விடுவோமா..? நம் குடும்பம் சிரமப்படுமோ…! என்ற உணர்வுகள்
4.இந்த மரண பயமாக வருகின்றது.

மரண பயம் வந்து விட்டால் மனிதன் தன்மை வளர்க்கும் தன்மை இழக்கப்படுகின்றது. பயத்தால் துடிப்பின் நிலைகள் அதிகரிக்கின்றது. எதனை எண்ணுகின்றோமோ அதனின் வளர்ச்சி இங்கே வருகின்றது.

ஒவ்வொரு குணங்களும் மரண பயம் பட்டுத்தான் அது மடிந்துவிடுகின்றது. தன் செயலாக்கங்களை எல்லாம் இழந்துவிடுகின்றது.

இந்த மாதிரி ஒருவரிடம் சொல்லிவிடுங்கள். உடனே அந்த நல்ல குணத்தில் நாம் சொன்னது தப்பாகப் போய்விட்டதே என்று “பட… பட… என்று வந்துவிட்டது…!” என்பார்கள்.

அப்பொழுது அந்த நல்ல குணம் என்ன செய்கிறது…?

மடியும் தருணம் வந்து விடுகின்றது. அவர் என்ன சொல்வாரோ…? ஏது சொல்வாரோ…? என்று இந்த உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதனின் உணர்வுகள் அதிகரித்துவிட்டால் இங்கே மடிந்து விடுகின்றது.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நல்ல குணங்களை அங்கே காண முடிகிறதோ..?
1.ஒவ்வொன்றாக நம்மிடமிருந்து மறைந்து விடுகின்றது.
2.நல்ல குணங்கள் ஒவ்வொன்றும் மடிந்து விடுகின்றது… மரண பயத்தை ஊட்டுகிறது
3.அதன் வழி மனிதனின் உணர்வையே (நம்மை) மரணமடையச் செய்யும் நிலைகளுக்கு உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி…! மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் எடுத்து நமக்குள் அவ்வப்பொழுது வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

வாழ்க்கையில் நாம் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும். நம்மை உருவாக்கிய உயிரான ஈசனுடன் ஒன்றி அழியாத நிலைகள் பெற்று ஒளியின் சரீரம் பெறுதல் வேண்டும்.

நம்முடைய எல்லை மரணம் அல்ல…! ஒளி நிலை பெறுவது தான்…!

Leave a Reply