பசுவுக்கு உகந்த நற்குணங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

KOMATHA

பசுவுக்கு உகந்த நற்குணங்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மற்ற மிருகங்களைப் போலவும் மனிதனைப் போலவும் பசுவிற்குப் பல எண்ணங்கள் மாறி மாறி வருவதில்லை. பசுவின் குணமே சாந்தமான.. அமைதி கொண்ட குண நலம் கொண்ட நிலை.

பசுவின் பாலை நாம் அருந்தினால்
1.அதன் குண அமிலத்தைக் கொண்ட சுவாசத்தைக் கொண்டு
2.அதன் உடலில் உதிரமான அந்தப் பாலை நாம் அருந்துவதினால்
3.அதற்குகந்த குண அமிலத்தை நாம் பெறுகின்றோம்.

மற்ற மிருகங்களிலிருந்தும் பாலைப் பெறும் சந்தர்ப்பமிருந்தாலும் நம் முன்னோர்கள் “பசுவின் பாலைத்தான்…” உயர்த்தி வழி காட்டிச் சென்றார்கள்.

அதே போல் பசுவின் குண நிலையை ஒத்த ஆவி ஆத்மாக்கள் ஆவி உலகில் இருப்பதில்லை. குறைந்த நிலையில் தான் அவை இருந்தாலும் அதன் வழித் தொடர்ச்சி பிறப்பில் வருகின்றது.

பசுவின் ஈர்ப்பிற்கு துவேஷ குணம் கொண்ட ஆக்ரோஷமான ஆவிகள் அதன் ஈர்ப்பிலும் அதன் எண்ண அணுக்களிலும் இல்லாததினால்
1.பசுவின் ஹோமம் தெளிக்கப்படும் இடத்திற்கும்
2.பசுவின் எரு சாணத்தைக் கொண்டு நடத்தப்படும் யாகங்களின் புகை மண்டலத்திற்கும்
3.பசுவின் நெய் மருத்துவத்திற்கு உயர்ந்ததாகியதற்கும்
4.பசுவின் சாணத்திலிருந்து ஆண்டவனின் விபூதியைத் திருநீறாக்கி நாம் அணிவதற்கும்
5.நம் முன்னோர்கள் பசுவைத் தெய்வமாக்கிக் காட்டினார்கள்.

இப்பொழுது புரிகிறதா பசுவின் உயர்ந்த சக்தி…!

மனிதனைக் காட்டிலும் மிருகங்களில் பலவற்றிற்குப் பல உன்னத சக்தி குணங்கள் இயற்கையிலேயே அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளன.

ஆனால் எதனையும் அறியும் ஆற்றல் பெற்ற மனிதனோ தன் நிலை மறந்து வாழ்கின்றான். மனித ஆத்மாக்கள் பிற உலக ஆசைகளுக்கு அழகு பெற்று வாழ விரும்புகின்றான்.

1.தன் உள் அழகை அழகாக்கி… அன்பாக்கி…
2.தன் ஆத்மாவை அழகுற வாழ வழி நடத்த வேண்டும் என்ற சத்தியத்தை உணர்ந்த
3.நம் முன்னோர்களான சித்தர்களால் விளக்கப்பட்ட உயர் ஞானத்தை நாம் ஏற்று வாழ்ந்திட வேண்டும்.

Leave a Reply