பழைய வினைகளைக் கழிக்க வேண்டிய முறை

meditation high tech

பழைய வினைகளைக் கழிக்க வேண்டிய முறை

 

என் (ஞானகுரு) வாழ்க்கையில் சிறிய பிள்ளையாக நான் இருந்ததிலிருந்து செய்த தவறுகளை எல்லாம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டுகின்றார்.

ஒடக்கானைப் பிடித்து அது கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டு “அது ஆடுகிறதைப் பார்த்து நீ ரசித்திருக்கின்றாய்…!” எத்தனை தடவை இந்த மாதிரிச் செய்தாய்…?

அதே மாதிரி குருவியை உயிருடன் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தீயை வைத்து எரித்து வாட்டியிருக்கின்றாய். கிணற்றில் குஞ்சு பொரித்த மைனாக் குஞ்சுகளின் கால்களில் கயிறைக் கட்டி இழுத்து அதன் கால்களை உடைத்திருக்கின்றாய்…! என்று இதை எல்லாம் சொல்கிறார் குருநாதர்.

நான் (ஞானகுரு) கல்யாணம் பண்ணிய புதிதில் ஒரு இடத்தில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது அப்படியே கிறு…கிறு… என்று தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டேன்.

அதை ஞாபகப்படுத்தி நிதானம் இல்லாமல் இன்ன இடத்தில் விழுந்தாய்…! என்று சொல்கிறார்.

அப்புறம் கல்யாணம் ஆன புதிதில் நானும் என் மனைவியும் போகும் பாதையில் ஒரு சிறிய பாலத்தில் ஒரு ரயில்வே தண்டவாளப் பகுதியைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் இரயில் வந்து கொண்டிருக்கின்றது. அதைப் பார்த்ததும்.. ஒதுங்கி ஓரத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக வேண்டி என் மனைவியிடம் “இந்தப் பக்கம் வாம்மா…!” என்றேன்.

கீழே குனிந்து பார்த்தால் ஒரே அசூசையாக அசிங்கமாக இருந்தது. ஐய்யய்யோ..! என்று சொன்னதும் என் மனைவி என்னைப் பிடித்து மீண்டும் இரயில் தண்டவாளத்திற்கே இழுத்தது.

ஆனால் வண்டியோ மிகவும் பக்கத்தில் வந்துவிட்டது. ஒதுங்க வேறு இடம் இல்லை. அப்புறம் அப்படியே தள்ளி விட்டபடி நானும் கீழே விழுந்தேன். இரயில் போய் விட்டது. நாங்கள் இரண்டு பேரும் எதை அசிங்கம் என்று சொன்னோமோ அதிலேயே விழுந்தோம்.

அதையும் குருநாதர் சொல்கிறார். அத்தகைய உணர்வின் இயக்கங்கள் அந்தச் சத்து உனக்குள் இருக்கப்படும் பொழுது அது “விதியாக” உனக்குள் அமைகிறது.

“டேய்…! அன்றைக்கு நான் தான்டா உன்னைக் காப்பாற்றினேன்..” என்று சொல்கிறார் குருநாதர்.

1.முன்னொரு சமயம் ஒரு பிறவியில் இருக்கும் போது நீ எனக்கு உதவி செய்திருக்கின்றாயடா…!
2.இப்பொழுது நான் இந்த அருள் சக்தியைப் பெற்றிருக்கிறேன்.
3,இப்பொழுது உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்கிறார் குருநாதர்

இதை எல்லாம் வரிசைப்படுத்தி மறைந்த உணர்வுகளை எல்லாம் குருநாதர் காட்டுகிறார்.

எனக்கு இரண்டு வயதில் அம்மை நோய் வந்திருந்தது. நான் இட்லி வேண்டும்..! என்று கேட்டு அழுகின்றேன். என் மனைவியுடைய சின்னம்மா (அப்பொழுதே சொந்தக்காரர்கள் தான்) வந்து என்ன செய்கிறது. சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொண்டு வருகிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தான் இட்லி எல்லாம் செய்வார்கள். இல்லை என்றால் வேறு எந்த வீட்டிலாவது செய்து வைத்திருந்தால் சிறிய பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பார்கள்.

சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொடுத்தவுடன் நான் அந்த அம்மா மீதே “அதை வீசிவிட்டேன்…!” அதையும் குருநாதர் என்னிடம் சொல்கிறார்.

இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார். என் வாழ்க்கையில் என்னென்ன…? எப்படி நடந்தது… என்னென்ன நிலைகள் இருந்தது…? என்று சொல்கிறார்.

நீ இளமையில் உன்னை அறியாது செய்த தவறுகள்
1.நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றியது.
2.அதன் வழிப்படி ஒவ்வொரு தவறையும் நீ செய்யச் செய்ய அது பெருகிக் கொண்டே வருகிறது.
3.அந்த உணர்வுகள் பெருகிய பின் உடலில் உள்ள அந்தத் தவறான உணர்ச்சிகள்
4.உன்னை எப்படிக் கொண்டு போகும் தெரியுமா…? என்று கேட்கிறார்…?

இன்றும் சில சிறிய குழந்தைகள் பூச்சிகளைப் பார்த்தாலே அதை அடித்துக் கொன்று கொண்டே இருக்கும். பார்க்கலாம் நீங்கள். ஆக அறியாமல் செய்தாலும் நாம் எதைச் செய்கிறோமோ உயிர் அதை நுகர்ந்து நம் உடலுக்குள் தான் சேர்க்கிறது.

இதை எல்லாம் அறிந்து கொண்ட நிலையில் மனிதனின் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்..? என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் உங்களிடமும் அதைப் பின்பற்றச் சொல்கிறோம். ஏனென்றால் எது இருந்தாலும் அப்போதைக்கு அப்போது இது கழியும். (விதியின் விளைவுகள்)

நான் (ஞானகுரு) எல்லாருக்கும் நன்மை தானே செய்திருக்கின்றேன். எவ்வளவோ உயர்ந்த சக்திகளை எல்லாம் பெற்றிருக்கின்றேன்.
1.எனக்கு ஏன் கையில் எலும்பு முறிகிறது…?
2.என்னை ஏன் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படி எல்லாம் சோதிக்கிறார்..? என்று சொன்னால் என்ன ஆகும்…!
3.நான் செய்த பாவத்தின் நிலைகளை அனுபவித்துத் தான் தீரனும்.

ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலை பெறும் போது மேலே பட்ட தூசிகளைத் தட்டி விட்டுத் துடைப்பது போல் துடைத்துக் கொண்டே தான் போக வேண்டும்.

1.அதாவது இந்த உடல் பற்று இல்லாதபடி
2.அந்த அருள் பற்றுடன் போனால் இந்தப் பற்று வராது.
(இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.)

ஒரு சமயம் நான் குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும்போது ஒரு அம்மா வந்தது. அது உடலில் ஒரு தீயில் எரிந்த ஆவி இருந்தது. அதனால் ஐய்யய்யோ…! எரியுதே…எரியுதே… என்று குதிக்கும். அந்த அம்மாவின் வயது 45 இருக்கும்.

மேல சேலையைப் போட்டாலே குதிக்கும். ஐய்யய்யோ… எரியுதே என்னைக் கொல்கின்றீர்களே கொல்கின்றீர்களே..! என்று போட்ட துணியை வீசிவிட்டு ஒடும். ஏனென்றால் அந்த அம்மாவினால் அந்த எரிச்சலைத் தாங்க முடியவில்லை.

அங்கே சுற்றுப்பயணத்தில் வரப்படும் போது நம்மிடம் கூட்டி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் துணியைப் போடமுடியவில்லை. அப்புறம் நான் சொன்னேன்.

அந்த அம்மாவைச் சுற்றித் துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு வாருங்கள். திரைக்கு பக்கம் அந்தப் பக்கம் பின்னாடி போகச் சொல்லுங்கள். துணியைப் போடாதீர்கள் என்று சொன்னேன்.

அதன்படி கூட்டிக் கொண்டு வந்தார்கள். அங்கே கூட்டுத் தியானம் இருக்கும்படி சொன்னேன். பின் அந்த நேரத்தில் அந்த அம்மாவுக்காக நான் பாய்ச்சும் அலைகள் எப்படி அங்கே பாய்கிறது…? என்று குழந்தைகளை வைத்துப் பார்க்கச் சொன்னேன்.

அப்படிப் பார்க்கும் பொழுது அந்த அம்மா உடலில் இருந்த தீ பிடித்த ஆன்மா (ஆவி) வெளியில் போகிறது. உடனே அந்த அமமா எழுந்து உட்கார்ந்தது. துணியைக் கொடுத்துப் போடச் சொன்னார்கள்.

மறுபடியும் அந்த ஆன்மா வந்தவுடன் ஐய்யய்யோ எரியுதே எரியுதே என்று பல நிகழ்ச்சிகள் ஆகி அப்புறம் கடைசியில் அந்த அம்மா நன்றாக ஆனது. அந்த ஆவியின் செயல்கள் ஒடுங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அங்கே அந்த அம்மாவுக்கு எரிச்சல் எப்படி அது உடலில் எரிகிறது என்று நீ பாருடா…! என்றார்.

பார்த்ததும் எனக்கு அப்படியே கப..கப.. என்று எரிகிறது.

ஆக அந்த உடலில் இருந்த ஆவியின் தன்மையை அடக்கினாலும் அந்த எரிச்சலான உணர்வலைகளை நான் கவரப்படும் போது நான் நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகிறது.

அது உடலிலிருந்து எரிந்த அந்த ஆவியின் உணர்வலைகள் வந்ததை நான் சுவாசிக்கப் போகும் போது எனக்குள் கொஞ்ச நேரத்தில எரிய ஆரம்பிக்கின்றது.

இப்படி எரிகிறது என்றால் எரியக் காரணம் என்ன..? என்ற நிலையில் உடலிலே விளைந்தால் இது மாதிரித் தான் எரியும்…! என்று சொல்லிவிட்டு இன்னொன்றும் சொன்னார்..!

1.டேய்…. உன் சிறு வயதில் நீ குருவிகளை எப்படியடா சாப்பிட்டாய்…?
2.எத்தனை குருவிகளை உயிருடன் கம்பியில் கட்டித் தீயில் சுட்டுத் தின்றாய்…?

இங்கே இந்த அம்மா உயிருடன் இருக்கும் போது எரிகிறதே என்று நன்மை செய்யப் போனாய். தீயில் வெந்த ஆவி அந்த உடலிம் இருக்கிறது. ஆனால் நீ அதை அடக்க வேண்டும் என்கிற போது அந்த வேதனை உணர்வைச் சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்துக் கொண்டு வருகிறது

நீ கவரும் பொழுது அந்த உணர்வுகள் உனக்குள் வந்துவிட்டது.
1.காரணம் அந்தக் குருவிகள் எப்படித் தீயில் எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருக்கிறது.
2.அதற்கு அது சாப்பாடு தேவை.
3.அதை எடுப்பதால் உனக்கு எரிச்சல் தெரிகிறது என்று விளக்கமாகச் சொன்னார் குருநாதர்.

நடந்த நிழச்சி இது. அனுபவித்துத் தான் உங்களிடம் சொல்கிறேன்.

நான் என் சிறிய வயதில் செய்த தப்பு அது ஒரு விதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த அம்மாவைப் பார்த்தால் எரிச்சல் ஆகிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுகிறேன். எனக்குள் கொஞ்சம் மறைகிறது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு இதை எல்லாம் மாற்ற வேண்டும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.நான் தினம் தியானம் செய்கிறேன்…?
2.எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது..? எனக்கு ஏன் நோய் வருகிறது என்று சொன்னால்
3.நாம் இந்தப் பூமிக்குள் தான் தான் இருப்போம். விண் செல்ல முடியாது.

ஆகையினால் தான் உங்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்தோம் என்றால் நாம் அங்கே போகலாம்.

சில பேர் என்ன சொல்வார்கள் என்றால் என்னை எல்லோரும் சேர்ந்து எப்படி எல்லாம் பேசினார்கள்…! பாவிகள்… அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…! என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட உணர்வுடன் இந்த உடலை விட்டுப் போனால் யாரை நினைத்தோமோ அதனால் நோயாகி அந்த உடலுக்குள் போய்ச் சேர்ந்து மீண்டும் பிறவி நிலைக்குத் தான் வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்…!

Leave a Reply