கெட்டதை நல்லதாக எப்படி மாற்றிக் கொள்வது…?

Polariss

கெட்டதை நல்லதாக எப்படி மாற்றிக் கொள்வது…?

மிளகாய் காரமாக இருக்கின்றது. ஆனால் குழம்பு வைக்கிறோம் என்றால் அந்தக் காரத்தைச் சேர்த்தவுடன் ருசியாக இருக்கிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. அதைக் குழம்பில் அளவோடு சேர்க்கப்படும் போது ருசியாக இருக்கிறது.

ஒரு விஷமோ மனிதனைக் கொன்று விடுகிறது, ஆனால் எந்த வைத்தியமாக இருந்தாலும் சரி
1.நல்ல மருந்துடன் அந்த அளவு கோல்படி விஷத்தைச் சேர்த்த பின்
2.அது அந்த மருந்துக்கே வீரிய சக்தியாகின்றது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தால் மனிதனைக் கொல்கின்றது. ஆனால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விட்டால் விஷம் தணிந்து அந்தப் பாலுக்கே அது வீரிய சக்தி கொடுக்கின்றது.

இதே போல் தான் நல்ல மருந்துக்குள் விஷத்தைக் கலந்தால் வேகமாக ஊடுருவிச் செல்லும். அந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் அந்த மருந்தும் வலுவாகிறது.

மருந்தை நாம் உட்கொண்டால் நம் உடலில் விஷத்தன்மை கொண்ட அணுக்களுக்கு இது எதிர்மறையாகி மறைவிடமாகும்போது அதற்கு உணவு போகாதபடி தடுக்கின்றது.

கெட்ட அணுக்களுக்குச் சிறிது காலம் உணவு கிடைக்கவில்லை என்றால் அது ஆகாரம் இல்லாமல் மடிகின்றது. இதைப் போன்ற நிலையில் மனிதன் தனக்குள் உண்மையின் உணர்வை அறிந்து செயல்டும் ஆற்றல் பெற்றவன்.

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் விஷத்தின் தன்மைகளை மாற்ற அருள் ஞானியின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது விஷத்தை அடக்கி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

நாகப்பாம்பு போன்ற பாம்பினங்கள் தன் உடலிலே இருக்கக்கூடிய விஷத்தை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சுகின்றது. அதையே உணவாக எடுக்கின்றது. இருந்தாலும் தன் உடலில் விஷத்தின் தன்மையைச் சேமிப்பாக்குகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் விஷத் தன்மை உண்டு.
1.பாம்பு அதனைத் தனக்குள் ஜீரணித்து
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் போது “நாகரத்தினமாக…!” மாறுகின்றது.

அத்தகைய பாம்பினங்கள் சுமார் நூறு வருடம் வாழ்ந்தால் அதன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெறுகிறது. ஒளித் தன்மை அடைகின்றது. ஆனாலும் அதற்கு வளர்ச்சி இல்லை.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மைகள் மோதலாகும்போது
2.ஜீவணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது துருவ நட்சத்திரம்
3.நம் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி நுகரப்படும் போது
4.அதனைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றார் துருவமகரிஷி துருவ நட்சதிரத்திரமாக…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலராம்… பலருடைய எண்ணங்கள் இருந்தாலும் கோபப்படுவதோ வேதனைப்படுவதோ சலிப்பு அடைவதோ இது எல்லாம் வாலி. அதை எல்லாம் எடுத்துக் கொண்டால் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

1.இருளாக இருக்கும் நிலையில் அங்கே என்ன சாமான் இருக்கின்றது அறியாதபடி தத்தளிக்கின்றோம்
2.ஆனால் வெளிச்சத்தை கண்டபின் இன்ன பொருள் அங்கே இருக்கின்றது என்று அறிகின்றோம்
3.ஆக நமக்குள் மகிழ்ச்சி பெறச் செய்வதும் ஒரு பொருளை அறியச் செய்வதும் ஒளி (வெளிச்சம்).

அந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து “ஈஸ்வரா…” என்று அவனிடம் வேண்டி… அது எங்கள் உடல் முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்தும் போது இதன் உணர்வின் வலிமை பெறுகிறது. ஒளியாக மாற்றுகின்றது.

அப்பொழுது மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உணர்வை உணர்ந்தாலும் நமக்குள் அந்த நினைவு வருவதில்லை.

இதைத்தான் கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது “நரசிம்ம அவதாரம்…” என்று காட்டப்படுகின்றது.
1.இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நமக்குள் புகாது எவர் தடுக்கின்றனரோ
2.அவரே உயிருடன் ஒன்றி கல்கியின் தன்மை பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

Leave a Reply