எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு…!

Remote spiritual power

எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு…!

சூரியன் தன் பாதரசத்தால் தான் கவர்ந்தாலும் மற்ற உணர்வலைகள் வரப்படும்போது மோதி இது நெருப்பாகி கவர்ந்தவற்றில் உள்ள விஷத்தைப் பிரித்து விடுகின்றது. அதனுடைய சந்தர்ப்பத்தால் அது செயல்படுத்துகின்றது

அதே போல் நம்முடைய சந்தர்ப்பம் தீமை என்ற உணர்வுகளை கண்ணால் கவர்ந்து அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்துதான் இந்த மனித வாழ்க்கையை நடத்துகின்றோம். அப்படி வரக்கூடிய தீமையான உணர்வுகளை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி
2.எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்ற உணர்வை
3.உள்முகமாக உடல் முழுவதற்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்த வேண்டும்,

அபப்டி எடுத்துக் கொண்டால் நம்மைப் பயமுறுத்தும்… அச்சுறுத்தும்… கோப்படுத்தும்… வேதனைபடுத்தும்… இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் நமக்குள் புகாது தடுத்துக் கொள்ளலாம்…! என்று அனுபவபூர்வமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

எங்கே வைத்து..?

டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது விமானம் கவிழும் சந்தர்ப்பத்தில் இந்த உபதேசத்தைக் கொடுக்கின்றார்.

“கவிழப் போகிறது…!” என்ற நிலை ஆன பின் விமானத்தில் உள்ள பிரயாணிகள் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நீ ஏன் பயப்படவில்லை..?
1.நீ இந்த உடலின் இச்சைப்படவில்லை
2.நீ உயிரின் இச்சைப்பட்டாய்…!
3.ஏனென்றால் உயிர் ஒளியானது… அறியும் தன்மை ஆனது…!
4.அதே அறியும் தன்மையை நீ அச்சம் இல்லாமல் எடுப்பதனால் உனது காக்கும் சக்தியும் அதிலே சேரலாம்…! என்று சொன்னார்.

அத்தனை பேர் பயந்தாலும் நீ ஒருவன் இந்த உயர்ந்த உணர்வுடன் வலிமையாக இருந்தால் விமானம் கவிழாது காக்கப்பட்டது..! என்று காட்டுகின்றார்.

ஆக இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று அங்கு காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகின்றது…? என்பதை குருநாதர் இப்படி எமக்குப் பல வழிகளிலும் காட்டினார்.
1.எல்லாவற்றிலும் தப்பும் உணர்வுகள் மனிதனுக்கு உண்டு.
2.எல்லாவற்றிலும் தப்பிய மனிதன்தான் அகத்தியன்.

அவன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்… துருவ நட்சத்திரமானான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் அதிகமாக்கினால்… நம் ஆன்மாவில் பெருக்கிக் கொண்டால்… “தீமையான உணர்வுகள் எது வந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிடும்…!”

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

Leave a Reply