அறியாமல் வரும் நோய்களை மாற்றிக் கொள்ளும் எளிமையான வழி முறை

Sugar and heart attack.jpg

அறியாமல் வரும் நோய்களை மாற்றிக் கொள்ளும் எளிமையான வழி முறை

குழம்பு வைக்கும் பொழுது ஒரு மிளகாய் அதிகமாகப் போய்விட்டது என்றால் நம்மால் சாப்பிட முடிவதில்லை. காரம்…காரம்…! என்று தான் சொல்வோம்.

உதாரணமாக ஒரு கோபக்காரனைப் பார்த்துவிட்டுப் பெண்கள் வந்து குழம்பு வைத்தால் அதிலே இரண்டு மிளகாயை அதிகமாகப் போட்டுத் தான் ஆவார்கள்.

அதே சமயத்தில ஆண்கள் அந்தக் கோபப்படுவோரை வேடிக்கை பார்த்து விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தால் உணவை வாயிலே வைத்ததும் ஒரு எரிச்சல் உண்டாகும். எரிச்சலானதும் நமக்கும் உடனே அதே கோபப்படக்கூடிய உணர்வைத் தூண்டும்.

மிளகாயை அதிகமாகப் போடச் செய்வதும் எரிச்சலடையச் செய்வதும்
1.இதை எல்லாம் யார் செய்வது….? நாம் கோபப்படுகிறோமா…?
3.அந்தச் சந்தர்ப்பத்தில் பார்த்த அந்த உணர்வுதான் நம்மை அப்படிச் செயல்படுத்துகிறது.

அதே போலத்தான் ஒரு வேதனைப்படுவோரைப் பார்க்கிறோம். நம்முடைய சந்தர்ப்பம் அடிக்கடி அந்த வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அதை நுகர நுகர வேதனையை உருவாக்கும் விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கும்.

பின் அதனால் வாத நோய்… சரவாங்கி நோய்… மூட்டு வாதம் வந்து விடுகின்றது. வாத நோய்களில் எத்தனையோ வகையான நிலைகள் உண்டு.

ஆனால் நாம் தப்பு செய்யவில்லை…!

ஆகவே இந்த மாதிரிப் பிறருடைய கஷ்டத்தையோ பிறர் படும் வேதனையோ பிறர் கோபத்துடன் சண்டையிடுவதையோ நாம் நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அடுத்த நிமிடமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்க வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று
5.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் உள் முகமாகச் செலுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின் எந்தக் கோபப்படுவோரைப் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்தோமோ அவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் வழியில் வாழக்கூடிய சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோரைப் பார்த்திருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி வேதனையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.

விஷமான கருணைக் கிழங்கை வேக வைத்து அதிலே காரத்தைச் சேர்த்துப் புளியைக் கரைத்து மற்ற பொருள்களை எல்லாம் சேர்த்து அதை ருசியான குழம்பாக மாற்றுவது போல் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் மீது வந்து மோதும் மற்ற உணர்வுகளை நல்லதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்படி மாற்றினால்…
1.நாம் நுகரும் இத்தகைய உணர்ச்சிகள் நம் உணவுடன் சேர்த்து நல்ல இரத்தங்களாக மாறிவிடுகிறது
2.நோய்கள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply