குடுகுடுப்புக்காரன் “வாசல்படி மண்ணையும்… தலை முடியையும்.. பழைய துணியையும்… ஏன் கேட்கின்றான்…?

kudukuduppai

குடுகுடுப்புக்காரன் “வாசல்படி மண்ணையும்… தலை முடியையும்.. பழைய துணியையும்… ஏன் கேட்கின்றான்…?

நாம் கோயில்களில் யாகங்கள் செய்வதைப் பார்ப்போம். தெய்வத்திற்கு யாகங்கள் செய்து கும்பாபிஷேகம் செய்து சக்தி ஊட்டுவார்கள்.

1.அங்கே சொல்லும் மந்திரம்… வாசிக்கும் இசை…
2.நெருப்பில் போடும் புகை… அதில் என்னென்ன மணங்கள் வருகிறதோ…
3.அதை எல்லாம் யாகத்தில் உட்கார்ந்து இருப்போர் நுகர நேர்கிறது.

கோயில்களில் இருக்கும் இந்தத் தெய்வத்திற்கு இன்ன சக்தி இருக்கின்றது என்று இப்படி மக்கள் மத்தியிலே அதன் உணர்வுகளை உருவாக்குகின்றனர்.

அடுத்து அந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன அர்ச்சனைகள் செய்தால் நம்முடைய குறைகளை எல்லாம் நீக்கி நலமாக இருப்போம் என்று அதையும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். அந்த உணர்வுகளை அங்கே ஊட்டுவார்கள்.

ஆனால் அத்தகைய யாகத்தில் உட்கார்ந்து நாம் கேட்டு நமக்குள் அங்கே செய்வதை எல்லாம் பதிவாக்கினால் இதற்குப் பெயர் “வசியம்…” சில கோயில்களில் பனிரண்டு வருடம் ஆகிவிட்டால் மீண்டும் இத்தகைய யாகத்தைச் செய்து மனித உடலிலே பதிவு செய்து அந்தக் கோயிலுக்குக் கூட்டமாக வருவார்கள்.

அக்காலங்களில் இதைப் போன்ற நிலைகள் நிறைய உண்டு.

ஏனென்றால் அந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்து பக்தி கொண்ட நிலையில் தெய்வத்தை எண்ணி வாழ்ந்து இறந்தபின் அரசர்கள் இந்த மாதிரி ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கவர்ந்து கொள்வார்கள்.

1.ஆக மொத்தம் உடலுடன் இருக்கும்போது அரசனுக்குச் சேவை செய்கின்றோம்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் அவன் செய்யும் வேலைகளுக்குப் பயன்படுவோம்.

ஆலயத்தில் அரசன் வழிப்படுத்திய முறைப்படி மந்திரங்களை நாம் பதிவு செய்து கொள்கின்றோம். (பெரும் பகுதி இன்று மந்திரம் சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்)

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்ட ஆன்மாக்களை வசியம் செய்து அடுத்து அவர்கள் இறக்கப்படும் போது இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் குடுகுடுப்புக்காரன் வருகின்றான்.

இவர்கள் எல்லாம் அக்காலங்களில் அரசருக்கு ஐந்தாம்படை என்று சொல்வார்கள். காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று தனித் தனிக் கூட்டமாக (BATCH) வருவார்கள்.

ஒரு கூட்டம் இந்த வருடம் காடுகளில் வளர்ந்து மந்திரங்களை செய்வதும் அடுத்து அதே மந்திரத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குள் வந்து இரவிலே வீடு வீடாக வந்து நல்ல நேரம் வருகின்றது.. கெட்ட நேரம் வருகின்றது… அது வருகிறது… இது நடக்கப் போகிறது…! என்று சொல்வார்கள்.

அப்படி வரும் பொழுது நம் வீட்டு வாசல் படியில் இருக்கின்ற மண்ணை எடுத்துக் கொள்வான். ஏதாவது ஜோசியத்தைச் சொல்லி துணி மணிகள் கொடுங்கள்…! என்று கேட்பான்.

அந்தக் குடுகுடுப்புக்காரன் கேட்டவுடனே புது துணியை எடுத்துக் கொடுப்பீர்கள்.

அவன்… வேண்டாங்க..! பழைய துணி கொடுங்கள்…! என்பான். அப்புறம் ஏதாவது சொல்லி நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொள்வான். கேட்டால்… தோஷத்தை நீக்க வேண்டும் என்பான்.

இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் அதற்கென்ற அரசனிடம் ஒப்படைப்பான். இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு இந்த நிலைகளில் இறந்தார்கள்…! என்று எல்லாவற்றையும் கூறுவான்.

அந்த அதர்வண வேதத்தைக் கற்றுணரந்தவர்கள் இதை அடிப்படை ஆதாரமாக வைத்து மந்திரங்களை ஜெபித்து இந்த ஆன்மாவை எல்லாம் அங்கே கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக உடலோடு இருக்கும் போதும் அரசனுக்கு அடிமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் அந்த ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி அடிமையாக்கி… அடுத்த நாட்டின் மேல் ஏவல் செய்வார்கள்.
1.ஒவ்வொரு அரசனும் அவனுக்கு வேண்டிய குலதெய்வம் என்ற நிலையை உருவாக்கி
2.அவன் நாட்டு மக்களுக்குள் இதை பதிவு செய்வான்.

நம்மை ஆட்சிப் புரிந்து வந்த கடந்த கால அரசர்கள் குலதெய்வம் என்று வைத்து அதன் வழியில் குடி மக்கள் இப்படிச் செய்வார்கள்…! என்று பதிவாக்கிக் காலம் காலமாக வைத்துள்ளார்கள்.

குலதெய்வம் என்ற நிலைகள் கொண்டு அந்த மக்கள் இறந்த பின் அந்த ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். எதிரிகள் போர் முறை என்று வரப்படும்போது கைவல்யப்படுத்திய ஆன்மாக்களைப் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளுக்கு எதிரிகளை வீழ்த்திடவும் அவர்களைப் புத்தி பேதமாக்கவும் பயன்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான அறிவை எடுத்துக் கொண்டாலும் கூட
1.ஒரு நாட்டில் உளவாளிகளாக (SPY) வைத்து
2.அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்ற நிலையை
3.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் அறிந்து இயக்கி
4.அதை வைத்து உலகம் முழுவதற்கும் பல வகைகளிலும் தீமைகளைப் பரப்புகின்றனர்

அதே சமயத்தில் விஞ்ஞானத்தில் முதிர்ந்திருந்தாலும் கர்த்தர் தான் தன் கடவுள் என்று சொல்பவர்களும் அந்த அதர்வண வேதத்தைக் கற்றிருப்பார்கள்.

மற்ற மதத்தில் உள்ளவர்களும் அங்கிருக்கும் உணர்வுகளை அந்த ஆன்மாக்களைச் சேர்த்துப் பக்தி கொண்ட நிலையில் மற்றவர்களை இயக்குவார்கள்.

அத்தகைய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துத் “தன் மதம் தான் பெரிது…!” என்று இயக்குவார்கள். உலகம் முழுவதுமே இன்று பார்க்கலாம். இனப்போர் மொழிப்போர் மதப்போர் என்று இரக்கமற்றுத் தாக்கும் நிலை வருகின்றது.

இதுகள் எல்லாம்
1.மனித உடலில் ஒரு ஆவி புகுந்து கொண்டால் அதன் நிலையையே செயல்படுத்துகின்றது.
2.அந்த ஆவி எந்தெந்த நிலைகளில் அந்த உடலில் இருக்கும் போது இடைஞ்சல் செய்ததோ
3.இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அதே தீயவினைகளைச் செய்கின்றது
4.அதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும் எந்த வேலையும் ஆவதில்லை.

ஆனால் மந்திரங்களைச் செய்து… யாகங்கள் செய்து… சக்கரங்கள் வைத்து நீக்கி விடுவோம்…! என்ற நிலையில் செய்கின்றனர். அது நீங்காது.

1.அந்த உடல் இறக்கும் பொழுது தான் அந்த ஆன்மாக்களும் வெளியில் வரும்.
2.வந்த பின் அடுத்து மனிதனல்லாத மிருக உடலோ ஊர்ந்து செல்லும் உயிரினமாகவோ தான் அது பிறக்கும்.
3.அல்லது இன்னொரு மனிதன் பற்று கொண்டான் என்றால் மீண்டும் அங்கே செல்லும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் அமாவாசை அன்று சாங்கியங்களையுக் யாகங்களையும் செய்து மறுபடியும் மனிதனில்லாத பிறப்பிற்குதான் நாம் கொண்டு வருகின்றோம்.

1.இந்த உடலைச் விட்டு சென்ற பின்
2.”பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்கள்…”
3.இன்று.. இது வரையிலும்… மத அடிப்படையில் இல்லை.

Leave a Reply