சுவாசத்தின் மூலம் நோய் எப்படி வருகிறது…?

lungs protection

சுவாசத்தின் மூலம் நோய் எப்படி வருகிறது…?

 

உதாரணமாக ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பயமும் கோபமும் நுகரப்படும் பொழுது அந்தப் பயத்தினால் சிந்திக்கும் தன்மை இழந்து அதனால் வேதனை என்ற உணர்வாகின்றது.

அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வுகளுடன் கோபம் என்ற உணர்வு அதிகமாகப்படும் பொழுது உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்காதபடி திணறல் வரும் பொழுது தான் அது “ஆஸ்த்மா…” நோயாக வருகின்றது.

ஏனென்றால் அவர் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் அதே போல் உணர்வை எடுத்திருக்கும்.
1.வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை அந்தத் தாய் சுவாசித்து
2.சுவாசித்த உணர்வுகள் தாய் உடலில் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது
3.அங்கே ஒரு குணத்திற்கும் மற்றொரு குணத்திற்கும் ஒத்துக் கொள்ளாது போர் முறைகள் வரப்படும் பொழுது
4.கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கும் இத்தகைய ஆஸ்த்மா நோய் வரக் காரணமாகின்றது.

அந்த நோய் அந்தத் தாய் உடலில் ஒரு தடவை வளர ஆரம்பித்தாலும் அடுத்த குழந்தை அந்தத் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.வேறு வலுவான நல்ல உணர்வை அந்தத் தாய் எடுத்திருந்தால்
2.அந்த வலுவான உணர்வுகளைக் அந்தக் குழந்தையும் பெற்றிருந்தால்
3.அந்தக் குழந்தையின் குடும்பத்தில் இந்தப் பாரம்பரிய ஆஸ்த்மா நோய் வராது.

ஆக அந்தக் குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் ஒருவர் தாய் கருவில் இருக்கும் பொழுது வலிமை பெற்று அந்த ஆஸ்த்மா நோய் வராதபடி வலிமையான நிலைகள் பெற்றாலும் அவன் வளர்ந்து வரப்படும் பொழுது இந்தக் குடும்பத்தின் பாரம்பரிய நிலைகள் கொண்டு அவனுடைய எண்ணம் அந்தக் கலந்த உணர்வு கொண்டு அடுத்து அது திருமணமானால் அங்கே கருவில் வரக்கூடிய அநக் குழந்தைக்கு ஆஸ்த்மா வரும்.

அது எப்படி…?

ஏனென்றால் அடிக்கடி குடும்பத்தில் வந்த அந்த ஆஸ்த்மா நோயைப் பற்றிப் பேசத் தொடங்கினால் போதும்…!
1.நான் அவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…. இவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…! என்றும்
2.எங்கள் பாட்டிக்கு ஆஸ்த்மா இருந்தது எங்கள் தாத்தாவிற்கு இப்படி இருந்தது என்றும்
3.அந்த நோய்களைப் பற்றி எண்ண ஆரம்பித்தால் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால்
4.அந்தப் பாரம்பரிய நோய் அவர்களின் குழந்தைக்கு நிச்சயம் வந்துவிடும்.
5.அதாவது அவருடைய தாய்க்கு ஆஸ்த்மா நோய் இருக்கும் இவருக்கு அந்த நோய் இருக்காது ஆனால் அவருடைய குழந்தைக்கு அந்த நோய் வரும்.

சொல்வது அரத்தமாகிறதல்லவா…!

இதைப் போலத் தான் நாம் நுகரும் உணர்வுகளுக்கொப்ப நம்முடைய உடல்கள் மாற்றம்… குணங்கள் மாற்றம்… இதைப் போன்ற நிலைகள் எல்லாம் அதிகரித்துவிடுகின்றது.

தாய் கருவில் பெற்ற உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை இயக்குகிறது என்பதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய மெய் வழியை உங்களுக்கு உணர்த்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படர வேண்டும் என்று அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து வந்தால் அத்தகைய நோய்களையும் தீமைகளையும் அகற்ற முடியும்.

Leave a Reply