மேகங்களைக் கூடச் செய்து மழைகளை பெய்ய வைத்தே ஆக வேண்டும்… அது நம்மால் முடியும்…!

Rain with thunder storm

மேகங்களைக் கூடச் செய்து மழைகளை பெய்ய வைத்தே ஆக வேண்டும்… அது நம்மால் முடியும்…!

 

பூமியில் உள்ள நீர் எங்கோ ஆழத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் பூமியின் நீர் வளங்கள் ரொம்ப மோசமாகப் போவதால் நம்முடைய நினைவுகளை எல்லாம் மேகங்களில் படரச் செய்து கரும் மேகங்களைக் கூடச் செய்து மழைகளை பெய்ய வைத்தே ஆக வேண்டும். அது நம்மால் முடியும்…!

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இந்த உணர்வை ஊட்டி உங்கள் நினைவினை மேகங்களில் செலுத்தச் செய்து அதன் உணர்வின் துணை கொண்டு மழை பெய்யத் தியானிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

நீங்கள் எல்லோரும் தியானத்தில் இருந்து… தியானித்த அந்த உணர்வுகளை மேகங்களில் கலக்கச் செய்து
1.நல்ல மழை பெய்ய வேண்டும்
2.இந்த நாடு செழிக்க வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

நாம் தியானிக்கும் இந்த உணர்வின் வழி இங்கே மழை பெய்தாலும் இங்கே நாம் வாழும் பகுதிகளில் கடும் தீமைகளை விளைவிக்கும்
1,தீய அணுக்கள் வளராது அதைத் தடைபடுத்தவும் உதவும்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளையும் குறைக்கச் செய்யும்.
3.ஏனென்றால் உங்களுக்குண்டான திறமைகளை நீங்கள் இதிலே பார்க்கலாம்.

மனிதனான நாம் எதை அழுத்தமாக எண்ணுகின்றோமோ அந்த வலிமையின் தன்மை கூடி இந்த எண்ண அலைகளை நாம் எங்கே நினைவைச் செலுத்துகிறோமோ அங்கே இது பாய்கின்றது. அந்த உணர்வுகள் படர்கின்றது. மழை பெய்ய வைக்கின்றது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் விண்ணிலே நினைவைச் செலுத்தி அவர்களின் அருள் வட்டத்தில் இருந்து நம் உடலைக் காக்கவும் நம் நாட்டைக் காக்கவும் முடியும். ஏனென்றால் ஆதியிலே……
1.வானவியல் தத்துவம் பூவியியலாக மாறினாலும்
2.புவியியலின் உணர்வு கொண்டு தான் மனிதன் உயிரியியலாக மாற்றிக் கொண்டது.
3.ஆகவே வானவியல் உணர்வு நமக்குள் வரும் போது அதை வைத்து
4.இந்தப் புவியியல் நிலைகளை மனிதர்கள் நம்மால் சீராக வைக்க முடியும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியன் இந்த பூமியினைத் திருப்பி தனக்குகந்த நிலைகள் வைத்தது தான் இன்று வரையிலும் இந்தப் பூமி சீராக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இருந்தாலும் விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் பூமியின் மையப் பகுதியில் விஷக் கதிரியக்கங்கள் அதிகமாக ஊடுருவிச் சென்று விட்டது. அதனால் சிறிது காலத்தில் பூமியிலே திசை மாற்றம் வரப் போகிறது…!
1.ஒரு டிகிரி மாறி விட்டாலே போதும்….
2.கடல் நீரும் மாறும்.
3.நிலப் பகுதிகளில் நீர்கள் அரிக்கும்.
4.மனித உணர்வுகள் மாறும்.
5.இந்த மனிதனின் நிலைகளில் பெரும் பகுதி மாற்றங்கள் வரும்.
6.அதற்குள் நீங்கள் தியானித்து பூமியின் திசையை மாறாது சீராக வைக்க முடியும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் கவர்ந்து மழை பெய்யக்கூடிய ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் ஆற்றல்களை ஒன்று சேர்த்துக் கலக்கப்படும் போதுதான் வரும் அதே ஆவியின் நிலைகள்
1.உங்கள் உணர்வின் அலைகள் மேகங்களாகக் கூட்டப்பட்டு
2.அது பெரும் மழையாகப் பொழியும்.

அதே வழி கொண்டு இந்த பூமியின் டிகிரி மாற்றத்தையும் மாற்றலாம். அன்று அகஸ்தியன் செய்தது போன்று மீண்டும் இந்தப் பூமியில் வாழும் மக்களை நீங்கள் சீராகவும் வைக்க முடியும்.

Leave a Reply