கொல்லூரில் நடந்த நிகழ்ச்சி – புலியிடம் பெற்ற அனுபவம்

Power and wisdom

கொல்லூரில் நடந்த நிகழ்ச்சி – புலியிடம் பெற்ற அனுபவம்

 

கொல்லூரில் யாம் (ஞானகுரு) இருக்கப்படும்போது மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது. ஆறு மாதங்கள் மழைப் பெய்யும். குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் விடாது மழை பெய்யும்.

இங்கு கார்த்திகை மாதம் மழை பெய்வது போன்று அங்கு ஆடி மாதம் விடாது மழை பெய்யும். யாம் அமர்ந்து கொண்டு மழையில் நனைந்துக் கொண்டே இருக்கவேண்டும். குருநாதர் சொன்னதை எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

அட்டைப் பூச்சிக் கடித்து இரத்தம் போய்க் கொண்டிருக்கின்றது. மழை நீர் எனது மேலே பட்டதற்கும் இந்த இரத்தத்திற்கும் இரத்தத்தில் குளித்த மாதிரியாகி விட்டது. அட்டைக் கடிப்பது தெரியாது. இரத்த வாசனை வருகின்றது.

புலி சும்மாவா இருக்கும். இரத்த வாடை வந்தவுடன் அது மோப்பம் பிடித்து “கிர்…கிர்” என்று சுற்றி வருகின்றது.

இதை எமது குருநாதர் எம்மைப் பார்க்கச் சொல்கிறார். வாசனையை நுகர்ந்து அது சுற்றிச் சுற்றி வருகின்றது. எம்மை அட்டை சாப்பிட்டது. குடித்துவிட்டு இரத்தம் வெளியிலே போகின்றது. வாசனையைக் கண்டு கொண்டு இந்த புலி வருகின்றது. அது சுற்றிச் சுற்றி வந்து நிற்கின்றது.

குருநாதர் எம்மை எழுப்பிவிட்டுப் பாதுகாப்பாக இருந்து அந்த உணர்ச்சியின் உடைய நிலைகளையும் வேகத்தையும் எண்ண அலைகளையும் கவனிக்கச் சொல்கிறார்.

இந்தச் சமயத்தில் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நீ எப்படி எடுக்க வேண்டும். இந்த உணர்வு கொண்டு அந்த உணர்வுடன் எப்படி பாய்ச்ச வேண்டும். எம்மிடம் குருநாதர் இரண்டு மூன்று ஆயுதங்கள் கொடுத்திருக்கிறார்.

1.ஒன்று யாம் வேகமாக எண்ணினோமென்றால் அதற்குக் கண் தெரியாமல் போகும்.
2.மற்றொன்று வாயை அசைக்க முடியாமல் போகும்.
3.இதுபோன்று இரண்டு விதமான சக்தி கொடுத்திருக்கின்றார்.
(ஒன்று தாக்க வந்தது. அதற்கென்று இந்த உணர்வை எடுத்துச் சுவாசித்தால் அதற்குக் கண் தெரியாமல் போகும். அல்லது வாய் அசைக்காதபடி கைகால்கள் அங்கேயே நின்று விடும்.)
4.மூன்றாவது அந்த எண்ணத்தைச் சுவாசித்தால் நமக்குச் சாதகமான நிலைகளில் அதனுடைய உணர்வை மாற்ற வேண்டும்.

நம்மிடம் இருந்து போகும் கெட்ட வாசனையைத் தடுத்து நிறுத்திவிட்டு நம்முடைய பாசமான உணர்வு
1.குழந்தைகளிடம் எப்படி அது பாசத்தைச் செலுத்துகின்றதோ அந்த மாதிரி ஒரு உணர்வைச் செலுத்தியவுடன்
2.அது எவ்வாறு கொஞ்சுகின்றது, குலாவுகின்றது என்ற நிலையைக் குருநாதர் எம்மிடம் காண்பிக்கிறார்.

இங்கே எனக்குப் பயம் துடிக்கின்றது. என்னதான் தியானம் இருந்தாலும், பதுங்கிப் பதுங்கிப் புலி அருகில் வருகின்றது. இப்படிச் சுற்றி வருகின்றது, அப்படிச் சுற்றி வருகின்றது.

புலிகள் இரண்டு ஜோடியாக வருகின்றது. ஒன்றாக இருந்தால் தப்பிக்கலாம். இரண்டும் அருகில் இருந்தால் எப்படியிருக்கும்…? மனது படக்…படக் படக்கென்று அடித்துக் கொண்டிருக்கின்றது.

குருநாதர் கொடுத்த பவர் இருக்கிறது என்று தைரியமாக இருக்கின்றது. இதைப் பாய்ச்சிக் கண் தெரியாமல் போய்விட்டால் முதலில் அந்த கண் தெரியாத உணர்வை யாம் எடுக்க வேண்டும்.

கை கால் அசையாத நிலை இருக்கவேண்டும் என்றால் அந்த அலையை யாம் சுவாசிக்க வேண்டும். அந்த அலையைச் சுவாசித்துப் பிரித்து என் உடலில் சேர்த்துத் தான் பாய்ச்ச வேண்டும். பார்ப்பது செய்வதற்கு நன்றாக இருக்கும்.

பின் நாடட்களில் இதே உணர்வு வந்தவுடன் என்னுடைய கண்ணின் கருவிழி கொஞ்சம் கொஞ்சமாக மங்கி போகும். சக்தியைக் கொடுத்துவிட்டு இதையும் சொல்லியிருக்கிறார்.

எதையுமே செய்யாவிட்டால் புலி நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். அது எம் வாசனையை நுகர்ந்து அருகில் வரும்போது நீ இப்படிச் செய்தால் இப்படிப் போவாய்… கை கால்கள் வராமல் போவிட்டால் உன் அங்கங்களும் இந்த மாதிரி ஆகிவிடும் என்று இதையும் சொல்லியிருக்கிறார்.

ஆனால் புலிக்கு அதன் பசிக்கு எதையாவது அடித்து சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இங்கே யாம் நடந்து செல்லும்போது வில் மாதிரி அட்டைப் பூச்சி எம் மீது ஒட்டிக் கொள்கின்றது.

ஒட்டியது தெரியவில்லை. இரத்தத்தைக் குடித்துவிட்டு புளியங் கொட்டை மாதிரி தொப்பு தொப்பு என்று கீழே விழுகின்றது. இரத்தம் சொட்டுகின்றது. முதலில் எமக்குத் தெரியவில்லை. இரத்த வாசனை பட்டு புலி வந்த பின்புதான் எமக்குத் தெரிகின்றது.

இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…? புலி ஒரு நிமிடத்தில் தாவினால் எத்தனையைத் தான் சிந்திக்க முடியும். ஆனால் பவர் கொடுத்திருக்கிறார். திடீரென்று வாரும்போது இதை எடுப்பதா…? அதை எடுப்பதா…?

திடீரென்று ஏதாவது வந்து விட்டால், நாம் ஐய்யய்யோ… ! அம்மா, அப்பா என்றுதானே சத்தம் போடுகிறோம். “ஈஸ்வரா…” என்றா சப்தம் போடுகிறோம்…? எவ்வளவு தூரம் சொன்னாலும் கூட ஐய்யய்யோ…! அம்மா என்றுதான் சப்தம் போடுகிறோம். இப்படிச் சொன்னாலும் பரவாயில்லை “ஐய்யய்யோ ஐய்யய்யோ” என்றுதானே சொல்கிறோம்.

“அம்மா…!” என்று சொன்னால் கூட இந்த உணர்வைக் கேட்டு நாய் கூட நிற்கும். அம்மா…! என்று யார் சொல்லப் போகிறார்கள்… சொல்ல மாட்டார்கள். “ஐய்யய்யோ ஐய்யய்யோ” என்று தான் சத்தம் போடுபார்கள். அல்லது லபோ லபோ என்பார்கள்.

“அம்மா…” என்றால் நாய் கடிக்காதே..! வேகமாகக் கடிக்க வரும்போது அம்மா….! என்று சொன்னால் போதும்.

அப்பொழுதுதான்…
1.அந்த தாய்ப் பாசத்திற்கு வேணடி என் அம்மாவை அந்த இடத்தில் நினைத்து
2.அந்தப் பாசத்தின் உணர்வின் நிலைகள் கொண்டு எம்மை எப்படி வளர்த்ததோ
3.அந்த உணர்வுடன் சேர்த்து நீ சுவாசி…! என்று குருநாதர் சொன்னவுடன்,
4.அந்த உணர்வலைகளை வேகமாகச் செலுத்தியவுடன் தன் குழந்தையிடம் எப்படிச் சுழல்கின்றதோ
5.அதே மாதிரி அந்த அலையை எடுத்து, அந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்.

ஆனால் இதற்கு நேரம் ஆகும். இந்தத் தாய்ப் பாசத்தை எடுத்துக் கொடுப்பதற்கு நேரமாகும். இதை எடுத்துக் கொடுப்பதிற்குள் அது முந்திவிட்டால் நம்மைக் கொன்றுவிடும். உடனடியாக இதைச் செய்ய வேண்டும்.

இதை விடுத்து விட்டு உடனடியாக எண்ணியவுடன் அதன் கண்ணோ மகை காலோ போகவேண்டும் என்று எதை நினைக்கிறோமோ அது போய்விடும். அதற்குப் போய்விடும். ஆனால் கடைசியில் நமக்கும் கண்ணும் கை காலும் போய்விடும்.

மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொரு அங்கமாக இழந்து விட்டால் அடுத்து இந்த உயிராத்மாவில் எது சேரும்…? அது தான் சேரும் என்று குருநாதர் இதையும் கொடுத்து அதையும் காட்டி எல்லாமே அனுபவமாகக் கொடுத்தார்.

யாம் உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுப் பார்த்து வந்தோம். உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தை லேசாகப் போக்கும்படி ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுங்கள் என்று சொல்கிறோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து உங்கள் துன்பங்களைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

Leave a Reply