நமது எல்லை எது…?

self-confidence power

நமது எல்லை எது…?

 

கடலுக்குள் ஒடங்களில் செல்லப்படும் போது எதை எல்லையாக வைக்கின்றனரோ எத்தனையோ அலைகள் வந்தாலும் அதிலிருந்து மீட்டு அந்த எல்லையைப் போய் அடைகின்றனர்.

அதைப் போல தான் மனித வாழ்க்கையில் எத்தனையோ விதமான கோபம் சலிப்பு வேதம் குரோதம் வேதனை போன்ற அலைகள் மோதிக் கொண்டே இருக்கிறது.

அப்பொழுது எந்தக் குணத்தைக் கவர்ந்து கொள்கிறோமோ அந்தக் கவர்ந்து கொண்ட சக்தி தான் “வசிஷ்டர்…” என்பது. அது நம் உடலாக ஆகப்போகும் போது “அது நம்முடன் இணைந்து வாழ்கின்றது…!” என்று பொருள்.

1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நாம் நுகர்ந்தால் “வசிஷ்டர்…!”
2.அதாவது வேதனையான சக்தியை நாம் அருந்தப்படும் பொழுது
3.நம்முடன் இணைந்து (அருந்ததியாக) வேதனை என்ற உணர்வைத்தான் உருவாக்கும்.

அதே போல ஒரு குடும்பத்தில் தாயோ தந்தையோ உடலை விட்டுச் சென்றால் விட்டால் நாளை என்ன செய்யப் போகிறோம்..? என்று வேதனையைத் தான் நாம் படுகிறோம்.

இதைப் போன்ற துன்பங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அருள் ஒளி கொண்டு அதைப் பிளக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீமைகள் தமக்குள் உருவாகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்ற உணர்வைப் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல வாழவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நளாயினி போன்று கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்தும் நடத்தல் வேண்டும். இவ்வாறு நடந்தால் இரு மனமும் ஒன்றுகின்றது.

சாவித்திரி என்ன செய்கின்றாள்…? எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள். ஆக இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரு உயிரும் ஒன்றென இணைந்தவர்கள் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

1.இரு மனமும் ஒன்றி…
2.இரு உணர்வும் ஒன்றி…
3.இரு உயிரும் ஒன்றி…
4.அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து
5.இல்லற வாழ்கையில் இருள் என்ற நிலையை அகற்றி
6.நஞ்சு என்ற நிலைகளை அகற்றி நஞ்சை அகற்றிடும் பெரும் சக்தி பெற்று
7.இனிப் பிறவி இல்லா நிலைகள் அடையும் அருள் மார்க்கத்தைத்தான் அன்று ஞானிகள் நமக்குக் காட்டினர்.

எங்கள் குடும்பத்தில் மகரிஷியின் அருள் சக்தி படரவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது தீமைகள் அகல வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். உலக ஞானம் பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்த அருள் ஒளி கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் உணர்வை வளர்த்து பிறவிப் இல்லா நிலை என்ற நிலையை அடைய நாம் பிராத்திப்போம்… தியானிப்போம்…!

இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைவதே நமது எல்லை…!

Leave a Reply