“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் பிறப்பை அழைப்பதன் காரணம் என்ன…?

CHITRAI Fruit

“சித்திரைக் கனி” என்று பெயரை வைத்துப் புது வருடப் பிறப்பை அழைப்பதன் காரணம் என்ன…?

1.அதாவது கனி என்றால் அதற்குள் ஒரு வித்தும்
2.அந்த வித்தைக் கனி மறைத்திருக்கிறது என்ற நிலையும்
3,வித்தானாலும் அந்த வித்தையும் ஒரு திரை மறைத்திருக்கின்றது என்ற நிலையும் உணர்த்துவதற்குத்தான்
4.அதைச் சித்திரை என்றார்கள் ஞானிகள்.
5.அந்தத் திரையை நீக்கினால் வித்தின் தன்மை கனியாகி மீண்டும் ஒரு வித்தாகின்றது.

இந்த வித்தில் மூடியிருக்கும் இந்த நிலையை (சித்திரையை – சிறு திரையை) நீக்கினால் அதன் சத்தின் தன்மையை நாம் அறியலாம்.

மண்ணிலே ஊன்றும் பொழுது வித்தினுடைய மேல் மூடி அதற்குத் தக்க நிலையில் அது வெளிப்படும் போது தன் உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அச்செடியாக விளைந்து அதன் இனத்தின் வித்தாக விளைகின்றது.

எத்தனையோ வகையான குணங்கள் கொண்டிருந்தாலும் இவ்வாறே ஒவ்வொரு வித்திற்கும் திரை உண்டு.

இதனை நாம் அறிந்து கொள்வதற்காக சித்திரை மாதத்தினுடைய நிலைகளைப் புது வருடம் பிறக்கிறது (புதிய வித்தாகிறது) என்று காட்டினார்கள்.

இந்தப் புது வருடத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைக் குறிக்கும் நாளாக
1.இந்த வாழ்க்கையில் நம்மை மூடி மறைத்திருக்கும் தீமையான திரைகளை நீக்கி
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து
3,பேரருள் பெற்று பேரொளியை நமக்குள் பெறச் செய்வதற்குத் தான்
4.”சித்திரைக் கனி…!” என்று அழைக்கின்றனர் நமது ஞானிகள்.

Leave a Reply