கடை விரித்தேன்… கொள்வார் இல்லை…!

vallalar (2)

கடை விரித்தேன்… கொள்வார் இல்லை…!

நஞ்சினைப் போக்கும் உணர்வுகள் இராமலிங்க அடிகள் பெற்றிருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.

ஆனால் அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர
1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்?
2.புகழும் நம்மைத் தேடி வராது.
3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.
4.நாம் பெறவேண்டியது என்ன? என்று இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.

இந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர் ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி
1.என்றும் அருட்பெரும் ஜோதியாக
2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்
3.அவர் ஆறு திரையிட்டு
4.ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.

ஆனால், அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப் பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான் அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும் எடுப்பார் இல்லை”.

இதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…,” என்று அவர் விடுபட்டுச் சென்றார். நொந்து சென்றார்.

தொட்டுக் காட்டித் தீட்சிதை கொடுத்து யாம் (ஞானகுரு) மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யவில்லை… பதிவின் மூலமே பெறச் செய்கிறோம்…! உங்களால் ஆற்றல்மிக்க சக்திகளை எளிதில் பெற முடியும்…!

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. அதே போல் தனி மனிதன் “ஒருவரால்” அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.

1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.
3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து… கவர்ந்து…, எடுக்க வேண்டும்.
4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.
5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,

அவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே உபதேசத்தின் நோக்கம்.

1.குண்டலினியைத் தட்டி எழுப்பி…
2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்…,
3.தொட்டுக் காண்பித்தார்கள்… பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்…,
4.ஐயோ.., “ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.

அருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக மாற்றத்தான்” மீண்டும் மீண்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியை உணர்த்திக் கொண்டி வருகின்றோம்.

தொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ சொல்ல  வரவில்லை.

உதாரணமாக சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.

அருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பமே இது.

1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்
2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன் நாம் ஒன்றிடல் வேண்டும்.

Leave a Reply