நல்லதை மட்டும் இயக்கித் தீமைகள் வராது தடுத்துக் கொள்ளும் முறை

SWIPE CARD

நல்லதை மட்டும் இயக்கித் தீமைகள் வராது தடுத்துக் கொள்ளும் முறை

 

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் (SWIPE CARD) கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதற்குரிய சாவியைப் (PASSWORD) போடச் சொல்கிறார்கள்.

அந்த அட்டையில் என்ன இருக்கின்றதோ அந்தச் சாவியை (PASSWORD) அதிலே போட்டால் தான் அது திறக்கின்றது. இல்லை என்றால் திறக்கவே திறக்காது.

இதைப் போல பலவிதமான உணர்வின் தன்மைகளை அந்தப் பிளாஸ்டிக் அட்டையிலே (SWIPE CARD) கொடுத்து இந்தத் மாதிரி திறக்கும்படிச் செய்கின்றனர். இன்று அதை வைத்து எத்தனையோ விதமான பரிவர்த்தனைகளை நாம் செய்கின்றோம். அந்த அட்டையை வைத்து இருந்த இடத்திலிருந்து “உலகம் முழுவதற்கும்…!” நாம் செயல்படுத்துகின்றோம்.

உதாரணமாக நமக்குள் நண்பர்களாகப் பழகிய அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ளோருடன் பழகியவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதை என்ன…? ஏது…? என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

அவர்கள் உணர்வு நமக்குள் பதிவு இருப்பதனால் அதே நினைவு கொண்டு நாம் எண்ணுவோம் என்றால்
1.அப்போது இந்தக் கதவு திறக்கப்படுகின்றது.
2.அவர் உடலில் இருந்த உணர்வுகள் நோய்கள் நினைத்தவர் உடலில் உருவாகின்றது.
3.அப்போது அந்த இருள் சூழ்ந்த நிலையே நமக்குள்ளும் வருகின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா..!

அதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமைகளை எல்லாம் நீக்கி நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாக இப்பொழுது இங்கே பதிவு செய்கின்றோம்.

நமது உடல்களில் அந்தத் துருவ நட்சதிரத்தின் உணர்வை நாம் பதிவு செய்து கொண்டால் (SWIPE CARD)
1.நமது எண்ணத்தின் திறவுகோலை (PASSWORD) ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக அந்தத் துருவ நட்சதிரத்தின் பால் பாய்ச்சப்படும் போது
2.அந்த அருள் பெரும் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
3.இருளை நீக்கி நல் வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழமாகப் பதிவான பின் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலே நம் உடலுக்குள் அதனின்று வரும் பேரருள் பேரொளி உட்புகுந்து
1.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரும் தீமைகளை எல்லாம் நீக்கி
2.நல் உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் தோற்றுவித்து
3.நல்ல குணங்களுக்கு நம் மணம் இடம் கொடுக்கின்றது.
4.நம்மை மகிழ்ந்து வாழச் செய்கிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடல் நலம் பெற்வேண்டும் என்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களும் நோயிலிருந்து விடுபடுகின்றார்கள்.

Leave a Reply