கணவனும் மனைவியும் “ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!”

Husband and wife unity

கணவனும் மனைவியும் “ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!”

 

நமது உயிர் ஒளியின் தன்மை பெற்ற நட்சத்திரங்களின் சக்தி கொண்டது தான், கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால்.

இது இரண்டுமே மோதலில் வரப்போகும் போது பெண்பால் என்ற நிலைகள் அந்த உயிருடன் மோதிய துடிப்பின் தன்மை ஏற்பட்டால் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் ஆண்பாலாகத் தான் உருவாகும்.

அதிலே ரேவதி நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகி விட்டால் பெண்பாலின் உணர்வுகள்… அதாவது ஒன்றைக் கவர்ந்து அது வளர்க்கும் தன்மை பெறும் கருவாக வருகிறது.

ஆகையால் தான் இந்த உயிரின் துடிப்பின் நிலையை கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர். ரேவதி நட்சத்திரம் என்று கொண்டவர் என்று ஒரு உயிரினுடைய நிலைகளுக்குப் பெயர் வைத்தாலும் இங்கே ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக வளரப்படும் போது பெண்பாலுக்கு அந்த மற்றதைக் கவரும் சக்தி வருகிறது.

ஆண்பால் பெண்பால் என்ற நிலைகள் பெற்றாலும் இரண்டு எண்ணங்கள் கலக்கப்படும் போது தான் ஒன்றைத் தனக்குள் கலந்து உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

ஆண் செடி பெண் செடிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காற்றிலே இதன் அலைகள் படர்ந்தாலும்
1.ஆண் செடியின் உணர்வுகள் பெண் செடியின் மீது பட்ட பின் அந்த உணர்வுகள் கருவுற்றுத்
2.தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது. ராசி ஜாஸ்தி வரும்.
3.ஆண் செடிகள் இல்லை என்றால் பெண்பால் செடியின் ராசி குறைவாகவே இருக்கும்.
4.ஆண் செடியின் தன்மை கம்மியாகி விட்டாலே போதும். பயிர் இனங்கள் வளர்ச்சி குன்றிவிடும்.

இதைப் போன்று தான் இந்த மனிதன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டாலும் கணவன் மனைவி என்ற நிலையில் வாழ்கிறோம். சில வீடுகளில் பார்த்தால் என்ன செய்வார்கள்…?

மனைவி தன்னுடைய கணவனை “எப்போது பார்த்தாலும் அவர் இப்படித் தான் செய்வார்…!” என்று குறையாகவே நினைத்து அதையே சொல்லிக் கொண்டிருப்பார்.

அதே போல் கணவனும் தன் மனைவியை “நான் எதைச் சொன்னாலும் மனைவி கேட்க மாட்டேன் என்கின்றது…! என்று குறையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.

இப்படி இந்த வெறுக்கும் உணர்வின் அணுக்கள் இருவருக்குள்ளும் முனித் தன்மையாக அடைகின்றது. முனி என்றால் ஒன்றைத் தனக்குள் எடுத்து மற்றொன்றைத் தாக்கும் நிலைகள்.
1.ஆகவே இரண்டு பக்கமும் என்ன செய்யும்…?
2.இந்தப் பகைமை உணர்வுகள் தான் இருக்கும்.
3.இருவர் உடலிலும் இரண்டறக் கலந்து நல்ல குணங்களைப் பேணிக் காக்கும் சக்தியும் இழக்கச் செய்துவிடும்.

இந்த முனித் தன்மை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. அது ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது. தனித் தன்மையாக அந்த ஊடுருவும் தன்மை பெற்றாலும் பெண்பால் என்ற நிலைகள் இணைந்து விட்டால் ஒடுங்கி விடும்.

விஷத்தின் தன்மையை ஒடுக்கி உணர்வின் துடிப்பின் நிலையாக அணுவின் சக்தியாகப் பெறக்கூடிய தகுதி பெறுகிறது. இதை எல்லாம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி நல்ல நிலை பெறவேண்டும் என்று இரண்டு பேரும் ஏகோபித்து எண்ணினால் அந்த எண்ணங்கள் கை கூடி காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

ஆனால் சிலர் ஆலோசனை சொல்கிறேன் என்ற நிலையில் “உன் கணவன் நன்றாக இருக்கும் போது நீ செய்தால் பரவாயில்லை…! அப்படி இல்லாமல் இருக்கும் பொழுது நீ எதற்குப் போய் உதவி செய்து கொண்டே இருக்கின்றாய்…? என்று மனைவியிடம் சொன்னால் போதும். இது ஊடே கலந்து விடும்.

அடுத்து நீங்கள் எந்த நிலைகள் செய்தாலும் கூட இந்தக் குறை உள்ள உணர்வுகளே கணவன் மனைவிக்குள் அதிகமாக வளரும். சில குடும்பத்தில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லைப் பயன்படுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பெண்பால் என்ற உணர்வுகள் எதிலே கலந்ததோ அந்த உணர்வின் கலவை கொண்டு உணர்வின் அணுத் தன்மை பெறும் தகுதி பெற்று விடுகின்றது. ஆகவே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலையில் இந்த வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்
1.பல கோடி உணர்வுகள்
2.பல குடும்பங்களில் பல நிலைகள்
3.பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவராக இருக்கலாம். அதே சமயத்தில் மனைவி தன் அறியாமையினால் வேதனைப்படும் செயல்களைச் செய்து விட்டால் வேதனையும் வெறுப்பையும் கணவனுக்குள் உருவாக்குகின்றது

அந்த வேதனை என்ற விஷத் தன்மை கூடப்படும் போது மனைவியை நினைக்கும் போதெல்லாம் வெறுக்கும் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வருகின்றது.
1.அப்பறம் மனைவி தன் நிலைகளில் நல்லதைச் சொன்னாலும்
2.கணவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை.

அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடி கணவனில் விளைந்த வெறுப்பின் உணர்வு இங்கே சாடிய பின் இவர் செய்யும் அந்தத் தவறின் உணர்வே அங்கே விளைகின்றது.

இருவரும் இந்த உணர்வின் தன்மைகளை வளர்க்கப்படும் போது
1.இருவருக்குமே நோய் வருகின்றது.
2.இரண்டு பேருக்குமே கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி எல்லாம் வரும்.

வேதனையை வளர்த்துக் கொண்ட நிலையில் இருவருமே ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி…! இதை வாங்கலாம்…! என்று எண்ணி ஒரு பொருளை வாங்குவார்கள்,
1.ஆனால் வாங்கியபின் இரண்டு பேருக்கும் அந்த வேதனையாகிப்
2.பகைமை தான் வரும். பொருளைப் பாதுகாக்கும் சக்தியும் இழந்து விடுகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான் இது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள், மகரிஷிகளின் அருள் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக மாற்றுங்கள்…!

கணவன் மனைவி உயிருடன் ஒன்றி வாழ்ந்தால் அதுவே சொர்க்கலோகமாகின்றது…!

Leave a Reply