வெயிலோ… மழையோ… காற்றோ… குளிரோ… இன்று எல்லாமே மக்களை அழிக்கும் நிலையாக அதீதமாக வந்து கொண்டிருக்கிறது…! இதன் காரணம் என்ன…?

EARTH-MANTLE

வெயிலோ… மழையோ… காற்றோ… குளிரோ… இன்று எல்லாமே மக்களை அழிக்கும் நிலையாக அதீதமாக வந்து கொண்டிருக்கிறது…! இதன் காரணம் என்ன…?

 

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிர்கள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகித் தாக்கும் பொழுது மின்னல்கள் உருவாகின்றது. அத்தகைய மின்னல்கள் கடலிலே தாக்கப்படும் போது அதற்குள் அடங்கி மணல் பாங்காக மாறுகின்றது. அதை விஞ்ஞானி பிரித்து எடுத்து கதிரியக்கப் பொறியாக மாற்றுகின்றான்.

மாற்றிய கதிரியக்கச் சக்தியை வைத்து அணு உலைகளை உருவாக்கி அணு குண்டுகளையும் உருவாக்கி விட்டார்கள். அணுவின் இயக்கத்தைப் பிரித்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி ஒரு பொருளுடன் மோதச் செய்து வெடிக்கச் செய்து நாட்டையே அழிக்கும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.

இயற்கையில் இரு நட்சத்திர உணர்வுகள் மோதும் போது மின் கதிர்களாக எப்படி மாறுகின்றதோ அதே போல விஞ்ஞானிகளால் பிரித்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கதிர் இயக்கச் சக்திகளையும் அவன் சோதித்து இது இரண்டையும் மோதச் செய்யும் போது அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது,

பூமியில் உருவான ஒவ்வொரு பொருளுக்குள்ளும் (கல்லானாலும் மணலானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்) நட்சத்திரத்தின் சக்திகள் பதிந்துள்ளது. செயற்கையில் உருவான நிலைகள் கொண்டு வெடிக்கச் செய்து இரண்டும் மோதும் போது
1.கல்லுக்குள் இருக்கும் உணர்வுகள் அது வீரியம் ஆகி
2.அந்தக் கல்லை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் பஸ்பமாக ஆவியாக மாறி
3.மரங்களுக்குள்ளும் மனித உடலுக்குள்ளும் மற்ற உயிரினங்களுக்குள்ளும் அனைத்திலும் ஊடுருவி
4.அதற்குள் இருக்கும் எதிர் நிலையான நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி மின்னலைப் போன்று மின்னிப் பொசுக்கிப் பூராவற்றையும் பஸ்பமாக்குகிறது.

ஆகவே இதைப்போல விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அணு விசைகள் அனைத்தும் மக்களையும் நாட்டையும் அழிக்கும் உணர்வுகளுக்கே பயன்பட்டது. நாட்டாசை கொண்டு உலகை அழித்திடும் உணர்வுகளுக்கே அதைப் பயன்படுத்துகின்றார்கள்.

அன்றைய அரசர்கள் மந்திரங்களைச் சொல்லி மாயங்களைச் சொல்லித் “தான் சக்தி பெற்று வாழ வேண்டும்…!” என்று அவர்கள் வித்திட்ட அதே உணர்வே இன்றும் இயக்கிக் கொண்டுள்ளது.

அசுர உணர்வு கொண்டு ஒரு மனிதனுக்கு மாமிசங்களைக் கொடுத்து சோம பானம் (மது) என்ற உணர்வுகளைக் கொடுத்து அவனை மதி மயங்கச் செய்து மந்திர ஒலிகளை எழுப்பி அவனுக்குள் அதை வளர்க்கப்பட்டு அவன் இறந்த பின் அந்த உணர்வை மந்திரத்தால் கவர்ந்து கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.

தனது ஆட்சிக்காக வேண்டி இதைப் போன்ற நிலைகளை ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி பில்லி சூனியம் ஏவல் என்ற நிலையில் மனித உடலுக்குள் மோதச் செய்து மற்ற எதிரி நாட்டாரைப் பித்தனாகவும் பைத்தியக்காரனாகவும் தன்னை மறந்து செயல்படும் நிலைகளுக்கு அன்று அரசர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

அதைப் போலத் தான் இன்று விஞ்ஞானிகளும் விஞ்ஞானக் கருவி கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு வந்து மனிதனைப் புத்தி பேதமாக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆக மொத்தம் நியூட்ரானும்… எலக்ட்ரிக் – எலெக்ட்ரான்… அதே சமயத்தில் கதிர் இயக்கப் பொறியான அந்தக் கதிர் வீச்சின் உணர்வுகள்…! இந்த மூன்றையும் தனித்தனியாக எடுத்தாலும் அதிலே “நியூட்ரான்…” என்ற அழுத்தம் கடும் விஷத் தன்மை கொண்டது.

விஷத் தன்மை கொண்ட நிலையில் சுழல் போல உருவாகி அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதி
1.கட்டிடங்களிலேயோ மரங்களிலேயோ மற்றதுகளிலேயோ மோதும் போது
2.அது பூராவற்றையும் தூசி தூசியாகக் கரைத்துத் தூக்கி எறிந்து கொண்டு போகும்.

வலுக் கொண்ட கட்டிடங்களாக இருந்தாலும் அதற்குள் ஊடுருவி இந்தக் கதிர் இயக்கங்களின் விஷத் தன்மையால் அதனுடைய சக்தியை இழக்கச் செய்து காற்றலைகளாகப் பறக்கின்றது.

1.அதே சக்தி கடல் நீர்களிலே படரப்படும் போது கொதிகலனாக மாற்றி
2.மிகப் பெரிய மேகக் கூட்டங்களைக் கூட்டி சூறாவளியாக மாறி
3.நீரை எல்லாம் தனக்குள் அள்ளி வீசி மழை நீர் கொட்டு கொட்டென்று கொட்டி
4.நகரங்களையே சுத்தமாக அழித்திடும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் இன்றைக்கு பெரும் பகுதியான நிலைகள் வருகின்றது.

இன்று (இப்பொழுதும்) மிகப் பெரிய புயல் என்று சொல்கிறார்கள் அல்லவா… (CYCLONE, TYPHOON, HURRICANE). இது எல்லாமே ஏற்கனவே பரீட்சாந்திரமாகச் சோதித்த நிலைகளும் அணு உலைகள் மூலமாகக் கசிந்த கதிரியக்கச் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டுப் பரவியதே காரணம்.

1.பரவி இருக்கிறது என்றால் பூமிக்கு வெளியில் மட்டுமல்ல.
2பூமியின் நடு மையத்திலும் கலந்து விட்டது.
3ஆகவே எப்பொழுதெல்லாம் அது எதிர்மறையாகின்றதோ அப்பொழுதெல்லாம் எதிர்பாராத நிலைகளாக இது நடக்கும்.
4.எங்கெங்கு அதிகமாக அந்தக் கதிரியக்கங்கள் கசிந்ததோ அங்கே இதனின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்
5,இவர்கள் வைத்திருக்கும் கருவிகளால் அதை முழுமையாகக் கணிக்க முடியாது. அப்படியே கணித்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஆகவே இதைப் போன்ற சூறாவளி என்று வரப்படும் பொழுது அதன் உணர்வுகள் நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக வளர வேண்டும். விஞ்ஞானத்தால் விளைந்து கொண்டிருக்கும் இத்தகைய இருள் சூழ்ந்த நிலைகளை முறியடிக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.
(விஞ்ஞானத்திற்கும் மெய் ஞானத்திற்கும் உண்டான போர் போன்று இன்று உலக நிலைகள் வருகின்றது.)

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன்… தன் உணர்வின் தன்மை ஒளியாக்கி உலகில் உள்ள நஞ்சினை வென்று ஒளியின் உணர்வைப் பெற்றவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெற்று நாம் இடும் மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் பரவும் நிலைகள் கொண்டு மக்களை நல்வழிபடுத்தும் உணர்வாக அது அமைந்து அதன் மூலம் நாமும் வாழ்ந்து நமது எதிர் கால சந்ததிகளையும் அருள் வழியில் வாழச் செய்வோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைக் கூட்டி இருளை அகற்றி உணர்வை ஒளியாக்கி தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடும் நிலை பெறுவோம்.

1.விஞ்ஞான அறிவில் வரும் உணர்வுகளை நமக்குள் வராது
2.ஒரு சுழல் காற்றாக நாம் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் அது செயல்படும்…!
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.
4.நம்மைக் காப்போம்… நம் வீட்டைக் காப்போம்.. நம் ஊரைக் காப்போம்… உலகை காப்போம்…! என்ற உணர்வு கொண்டு நாம் செயல்படுவோம்.

Leave a Reply