மகரிஷிகளை நாம் எப்படி நினைக்கின்றோம்…? எப்படி நினைக்க வேண்டும்…? எப்படி நினைத்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்…?

light-workers

மகரிஷிகளை நாம் எப்படி நினைக்கின்றோம்…? எப்படி நினைக்க வேண்டும்…? எப்படி நினைத்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்…?

உதாரணமாக மாம்பழமோ மாங்காயையோ சாப்பிட வேண்டும் என்றால் எதை நினைப்போம்..? சுவையா…? மணமா…? அல்லது மரத்தையா…? மாம்பழம்/மாங்காயின் நிறத்தையா…? மாங்காய் மாம்பழம் விற்பவர்களையா…?

இதில் எதை நினைத்து வாங்குவோம்…?

அதே போல் ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால் அவர் உயிரை நினைத்துப் பார்த்தால் கோபம் அதிகம் வருமா…? கண்களைப் பார்த்தால் கோபம் அதிகம் வருமா…? அல்லது கண்களை மூடிக் கொண்டால் அதிகக் கோபம் வருமா…?

கோபமாகப் பேசுபவனின் உணர்வுகள் வெளி வரும் பொழுது
1.அவனின் முகத் தோற்றத்தையும்
2.கண் அசைவுகளையும் அங்க அசைவுகளையும் தான் நாம் கூர்மையாக உற்று நோக்குகின்றோம்.
3.கோபமான சொல் செவிகளில் பட்டு உணர்ச்சிகளைத் தூண்டினாலும்
4.யார் அவ்வாறு பேசுவது…? எப்படிப்பட்ட ஆள்…? என்பதைப் பார்த்த பின் தான்
5.நமக்கும் அவர்கள் படும் அதே கோப உணர்வு இயக்கி நம்மையும் கோபமாகப் பேச வைக்கிறது.

தியானம் செய்யும் பொழுது இது நாள்… இப்பொழுது வரைக்கும் நான் என் உயிரை எண்ணியிருக்கின்றேன். மற்றவர்கள் உயிரை எண்ணியிருக்கின்றேன்.
1.ஆனால் வழி காட்டிக் கொண்டிருக்கும் ஞானகுருவின் (சாமிகள்) உயிரையோ ஈஸ்வராய குருதேவரின் உயிரையோ
2.மற்ற எந்த மகரிஷியின் உயிரையும் நான் எண்ணியது இல்லை.

சாமிகளின் ஞான உபதேசங்களை நேரடியாகவும் கேட்டிருக்கின்றேன். ஒலி நாடாக்களிலும் கேட்டிருக்கின்றேன். புத்தகங்களிலும் படித்திருக்கின்றேன்.

மகரிஷிகளின் உயிரை எண்ண வேண்டும்…! என்று சாமிகள் எதிலும் சொல்லவில்லை. அது சம்பந்தமான உணர்வும் பதிவு அவர் செய்யவில்லை.

அப்படியானால் மகரிஷிகள் என்றால் யார்…? எப்படி அவர்களை எண்ணுவது..?

உயிருடன் ஒன்றி ஒளியின் நிலையாக
1.ஒளிக்கற்றைகளாகவும்…
2.அருள் மணங்களாவும்…
3.கதிரியக்கச் சக்திகளாகவும்…
4.உயிர் வேறல்ல…! என்ற நிலையில் இருக்கும் அவர்களை
5.அவர்கள் உயிரை எண்ணுவது என்றால் இது மனித உணர்வின் எண்ணமாகும்.
6.ஆற்றலின் பிம்பமானதை மனித உணர்வு கொண்டு எண்ண முடியாது…!

மகரிஷிகள் என்றால் அது எம அக்னி. பெரும் நெருப்பு… அது பேரொளி…!
1.பேரொளியை நாம் ஒளியாகத் தான் எண்ண முடியும்.
2.ஒளியின் உணர்ச்சியாகத்தான் நாம் எண்ண முடியும்.
3.உடல் பெறும் நிலைக்கு வரும் பொழுது தான் உயிர் என்று சொல்ல முடியும்.
4.மகரிஷிகள் உயிரையே படைக்கும் சக்தி கொண்டவர்கள் பேராற்றல் கொண்டவர்கள்.
5.அவர்களை நாம் மனித நிலையில் வைத்து அவர்கள் உயிர் என்று பிரித்துப் பார்க்க முடியாது.

உயிரை உருவாக்குபவனை பல உயிர்களைப் பேரொளியாக மாற்றும் ஆற்றல் கொண்டவனை பழையபடி உயிர் என்று எப்படிக் குறுக்கிக் கொண்டு வர முடியும்…?

மனிதர்கள் நம்முடைய உயிர் கடுகளவு தான் இருக்கும். தியானத்தின் மூலம் ஆற்றல் பெருகப் பெருக இப்பொழுது அதை நாம் ஒரு மிளகு அளவோ அதைக் காட்டிலும் இன்னும் சிறிது அதிகமாகவோ இப்பொழுது உயர்த்தியிருக்கலாம்.

மகரிஷிகளை அபப்டி எந்த அளவு கொண்டு சொல்ல முடியும்…? விரிந்து இருக்கும் அகண்ட பிரம்மாண்ட நிலையில் அதை நாம் நம் மனித நிலையில் சொல்லாலே சொல்லவும் முடியாது.

அதனால் தான் சாமிகள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்று தான் குறிப்பிட்டாரே தவிர அவர் உயிரைப் பற்றி ஒரு இடத்திலும் சொல்லவில்லை.
1.அவர் உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரம் ஆகிப் பல கோடி ஆண்டுகளாகிவிட்டது என்று தான் சொல்கிறார்.
2.அதிலிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் மற்றவர்கள் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் பொழுது
3.அவர்கள் அனைவரும் அவரின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து அவர்களும் மகரிஷிகளாகி விட்டார்கள் என்று தான் சொல்லியுள்ளார்.

எந்த மகரிஷியும்…. – ஈஸ்வராய குருதேவரின் உயிரையோ அகஸ்தியனின் உயிரையோ எண்ணியதாகவும் அல்லது அவர்கள் உயிரை எண்ணித்தான் ஆற்றல்களைப் பெற்றார்கள்…! என்றும் சொல்லவில்லை.

மகரிஷிகள் என்பவர்கள் நெருப்புக்குச் சமம். கடுமையான கதிரியக்கச் சக்தி தான் அது. அதைச் சாதாரண மனித உணர்வு கொண்டு எடுக்க முடியாது. குரு துணை இல்லாது அதை நெருங்கவும் முடியாது.

குரு மூலமாகத்தான் எடுக்க முடியும். அது தான் ஞான வித்து. மகரிஷிகளின் உணர்வைக் கவர்வதற்கு நமக்கு வேண்டியது ஞானகுரு உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞான வித்து.

மகரிஷிகளுடன் பேச வேண்டும் என்றால் ஞான குருவின் உபதேச வாயிலாக வரும் ஞான வித்துக்களைப் பதிவாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அதன் மூலமாகத்தான் பெற முடியுமே தவிர மின்சாரம் உற்பத்தியாகும் இடத்தில் உள்ள மின்சாரத்தை அப்படியே எங்கும் யாரும் உபயோகப்படுத்த முடியாது.

அதை விநியோகம் செய்யும் (RELAY AND DISTRIBUTION) குரு மூலமாகத்தான் பெற முடியும். குருவை எண்ணி அவர் கொடுக்கும் உபதேசத்தை எண்ணி அதன் மூலமாக மகரிஷிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளலாம்.

என்னுடைய அனுபவம் இது தான்…!

 

2 thoughts on “மகரிஷிகளை நாம் எப்படி நினைக்கின்றோம்…? எப்படி நினைக்க வேண்டும்…? எப்படி நினைத்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்…?

 1. இந்த இணையதளத்தின் அனைத்து பதிவுகளும் அருமை. மிகவும் தெளிவான, தெளிவை தரும் பதிவு. குருவின் ஆசி பெற்ற தங்களின் மூலமாக துருவ மகரிஷிகளின் அருள்சக்தி எங்கும் பரவட்டும். மிக்க நன்றி.

  # 5.அவர்கள் உயிரை எண்ணுவது என்றால் இது மனித உணர்வின் எண்ணமாகும்.#
  # 3.உடல் பெறும் நிலைக்கு வரும் பொழுது தான் உயிர் என்று சொல்ல முடியும்.#
  # 4.மகரிஷிகள் உயிரையே படைக்கும் சக்தி கொண்டவர்கள் பேராற்றல் கொண்டவர்கள். #
  # 5.அவர்களை நாம் மனித நிலையில் வைத்து அவர்கள் உயிர் என்று பிரித்துப் பார்க்க முடியாது. .#

  • மிக்க மகிழ்ச்சி. எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கும் உங்களைச் சார்ந்த எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி.

Leave a Reply