மகரிஷிகளின் எல்லையை அடையும் வழி முறை…!

eswarapattauya gurudevar circle

 மகரிஷிகளின் எல்லையை அடையும் வழி முறை…!

 

தாயிடம் சேய் (பிறந்த குழந்தை) தனக்குப் பசிக்கிறது என்பதை எப்படிக் கேட்கும்…? குழந்தைக்கு எந்த மொழி தெரியும்…? ஒன்றுமே தெரியாது…!

தன்னுடைய அழுகை ஒலி மூலமாகப் பாசத்தால் பிடிவாதத்துடன் தான் உணவைக் கேட்கும். பிடிவாதத்துடன் கேட்கும் அந்தக் குழந்தையின் பசியை அறிந்த தாய் அப்பொழுது தான் பாலை உணவாகக் கொடுக்கும்.

அழுகாத சேய்க்குத் தாயிடமிருந்து உணவு உடனடியாகக் கிடைக்குமா…? கிடைக்காது…!

ஏனென்றால் சேய் அழுவது வேதனையால் அல்ல…! தன் உணவுக்காக…!

அந்தச் சேய் தனக்கு உணவை வேண்டிக் கேட்பது போல் நாமும் கேட்க வேண்டும்.

நல்லது நடக்க வேண்டும்…. தெளிவு வேண்டும்… ஞானம் பெறவேண்டும்… பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.நம்முடைய இலக்கைப் புருவ மத்தியில் உள்ள ஈசனிடம் வைத்தால்… வேண்டினால்… சுவாசித்தால்… இழுத்துக் கவர்ந்தால்…
1.உயிரும் நம்முடன் பேசும்…!
2.வழி காட்டிக் கொண்டிருக்கும் குருநாதரும் நம்முடன் பேசுவார்.
3.2000 சூரியக் குடும்பத்திற்கப்பால் உள்ள பேரண்ட மகரிஷியாக இருந்தாலும் பேசத்தான் செய்வார்கள்.

இரண்டு கண்களின் நினைவையும் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
1.புருவ மத்தி வழியாக… அதாவது உயிர் வழியாக…!
2.பூமியின் வட துருவத்தின் வழியாக நேரடியாக நினைவைச் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வலைகளைக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
4.தேடுவதும் கிடைக்கும்… நமக்குத் தேவையானதும் கிடைக்கும்… நாம் போக வேண்டிய பாதையும் கிடைக்கும்.

எதுவாக இருந்தாலும் உயிரிடம் சொல்லி விட்டு… பின் மகரிஷிகளிடம் தெளிவாகக் கேட்டு… பின் உயிரிடம் அவர்களிடம் (மகரிஷிகளிடம்) கேட்டு எனக்கு வாங்கிக் கொடு…! என்று உயிரிடம் வலுவாக அழுத்தமாகக் கேட்க வேண்டும்.

என் நினைவலைகளை இப்படிக் குவித்துச் செலுத்தித் தான் ஊடுருவிப் (SCANNING and PROCEEDING) போய்க் கொண்டேயிருக்கிறேன். பதிலும் வருகிறது… பலனும் கிடைக்கின்றது…!

எண்ணும் எண்ணக் குறி வைத்தே…
எடுக்கும் பகுத்தறிவு வளர் ஞானத்திலே…
ஏற்றத்திலே உணரும் உணர்வாய் நீர்…
ஏற்ற உடல் ஆத்ம ஜீவனிலே
ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே…!
ஐக்கியமாகிவிடு…!
ஈஸ்வரபட்டாய குருதேவா… ஈஸ்வரபட்டாய குருதேவா…!

Leave a Reply