தியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…!

Eswaraya Gurudevar Tapovana Guru Peedam

தியானம் செய்யாதபடி தீமைகள் போகாது…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் எத்தனையோ அவஸ்தைப்பட்டு (ஞானகுரு) மெய் ஞானத்தைப் பெற்று வந்தோம். அப்படிப் பெற்ற நிலையை நான் உங்களைத் தேடி வந்து சொல்லும் போது எத்தனை பேர் கேட்டுப் பின்பற்றுகின்றீர்கள்…?
1.எத்தனையோ பேருக்கு அருள் சக்திகளைப் பாய்ச்சி நோய்களையும் நீக்கி விட்டேன்.
2.அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்து ஞான வழியில் வளர்ந்திருக்கின்றார்கள்…!

கடுமையான நோய்களுடன் வந்தாலும் அது நீங்கிய பின் அடுத்து நான்கு பேருக்கு இவர்கள் சொன்னால் “அது மற்ற எல்லோருக்கும் நல்லதாகுமே…!” என்ற எண்ணத்தில் தான் யாம் அதைச் செய்தோம்.

ஆனால் அப்படி நோயை நீக்கிக் கொடுத்தபின் இங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியிடம் போய் ஐம்பதாயிரம் காணிக்கை செலுத்தி விட்டு வந்து எனக்குச் பலவிதமான சாப்பாட்டைக் கொடுத்து தபோவனத்திற்கு இரண்டு தென்னை மரக்கன்றையும் வைத்து விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

ஆக அவர்கள் செய்த வேண்டுதலின் படி அந்த வெங்கடாஜலபதி தான் நோயை நீக்கிக் கொடுத்ததாகக் காணிக்கை செய்து விட்டு வருகிறார்கள்.

ஆனால் யாம் சொல்வது
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எண்ணிப் பெறுங்கள்.
2.அது உங்கள் உடலுக்குள் விளைந்த பின் உங்கள் துன்பங்களையும் நோய்களையும் அகற்றும்.
3.நீங்கள் நன்றாக ஆவீர்கள்.
4.நீங்கள் நன்றாக ஆனதும் உங்களுக்குள் விளைந்த உணர்வு கொண்டு அடுத்தவருக்கும் இதைச் சொல்லுங்கள்.
5.உங்கள் உணர்வு அவர்களுக்குள் பாய்ந்து அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது
6.அவர்களும் உடல் நலம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் தான் யாம் எல்லாவற்றையும் செய்தோம்.

ஆனால் அதை எல்லாம் சரியாகப் பின்பற்றாதபடி அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். எதை..?

கொஞ்சம் சக்திகளைக் கொடுத்து விஷயத்தைக் காட்ட ஆரம்பித்த பின் அதை எல்லாம் தன் வசதிக்குதான் கொண்டு போய் விட்டார்களே தவிர மனமாற மக்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை.

இது ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள். எனக்குள் எல்லாமே இருக்கிறது. இதை நான் செய்கிறேன். ஏதாவது ஒன்றைச் செய்தால்
1.“நான் செய்தேன்…” என்று நீ போய்ச் சொல்…!
2.என்னால் நல்லதாக ஆனது என்று என்று சொல்
3.பெரும்பகுதி இப்படி விளம்பரம்படுத்திக் கொள்கிறார்கள்…!

அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்கள் கிடைக்கப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அந்த தனித்தன்மை வைத்துப் பலருக்கும் யாம் செய்து கொடுத்தோம்.

ஆனால் அதன் வழி வந்தவர்கள் எல்லாம் தோல்வி (FAILURE) ஆனதால் தான் “சரி… இனி நேரம் இல்லை…!” என்ற காரணத்தால் இப்போது எல்லோருக்குமே நேரடியாகத் தெரியும்படி (OPEN) இப்பொழுது கொடுத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளின் அருளாற்றல்களை எல்லோருக்கும் வேகமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற அந்தத் துணிவிலே தான் இருந்து கொண்டு இருக்கிறேன்.

1.நீங்கள் மகரிஷிகளை எண்ணி உங்கள் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் வேண்டித் தியானத்தைச் செய்யுங்கள்.
2.உங்களுக்கு நல்லாகும் என்ற நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.
3.தியானத்தைச் செய்யாதபடி நல்லது ஆகாது.
4.அந்த ஆசையிலேயாவது “மெய் ஞானத்தைப் பெற வரட்டும்…!” என்பதற்காகச் சொல்கிறோம்.

ஏனென்றால் நீங்கள் ஒரு ஆள் அந்த ஆற்றல்களைப் பெற்றால் தொழிலில் நீங்கள் நூறு பேரை பார்த்தாலும் உங்கள் சொல் அந்த நூறு பேருக்கும் நன்மை தரும்.

ஆனால் (சாதாரணமாக) இப்பொழுது நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். அந்த நூறு பேர் கஷ்டம் என்று உங்களிடம் வந்து சொல்லும் பொழுது நூறு பேர் உணர்வும் உங்களுக்குள் வந்து விடும்.
1.ஆக முதலில் நன்றாக இருப்பீர்கள்.
2.பிறர் கஷ்டத்தைக் கேட்ட பின் அந்தக் கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வந்து விடுகிறது.

இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளில் இருந்து உங்களை மீட்டுவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம். நீங்கள் ஒவ்வொருவரும் இதை எண்ணி வளர்த்துக் கொண்டால் உங்கலுக்கும் நல்லதாகின்றது. உங்கள் சொல் மற்றவருக்கும் நல்லதாகும்.

பிறரின் தீமைகளைப் பார்க்கும் போது உடலில் நோய் வருகிறது. ஆனால் அந்த மகரிஷிகளின் உணர்வை வலுவாக்கிய நிலைகள் கொண்டு நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் நோய் குறைகிறது. அந்தளவுக்கு இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் “நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்…!”

நான் செய்து கொடுப்பேன் என்று என்னை (ஞானகுரு) எண்ணுவதற்குப் பதில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தின் “குருபீடத்தை நினைத்து… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…!” என்று நீங்கள் தியானியுங்கள்.

உங்கள் உடல் நலமாகும். அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் தொழிலும் நன்றாக இருக்கும். இந்த மாதிரி எடுத்துக் கொண்டால் எல்லோரும் பொதுவாக தபோவனத்தின் ஈர்ப்புக்கு வருகின்றனர். யாரையுமே போற்றுவது இல்லை.

நான் எடுத்த பங்குக்கு அந்த உயர்ந்த நிலையை நான் அடைகிறேன். அது போல அவரவர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கொப்ப அந்தப் பலனை நிச்சயம் அடைய முடியும்.

எல்லோரையும் மெய் ஞானிகளாகத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது முடியவில்லை. அந்த ஆசையிலேயே போகிறது. (ஞானகுரு உபதேசித்த வருடம் 2002)

ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தியை எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் இத்தனை சிரமத்திலேயும் மீட்டி வரும் போது “எல்லோரும் இதைப்பெற வேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான்…” இதை மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்.

தபோவனம் வளர்கிறது என்றால் அது மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரால் தான், அவருடைய உணர்வு தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம். அத்தனை பேருக்கும் சந்தர்ப்பம் அது தான்.

நான் செய்தேன் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது…! நான் எதைத் தேடி வைத்திருக்கின்றேன்…? என்னிடம் எந்தப் பொருளும் கிடையாது. அருளைத் தான் நான் தேடி வைத்திருக்கிறேன்.

அந்த அருளால் என்ன செய்கிறேன்…? உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

நீங்களும் அதே போல் எண்ணினீர்கள் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறலாம். அந்தச் சக்திகளை உணர முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

Leave a Reply