நமக்கு வேண்டிய சுதந்திரம்

independence day

நமக்கு வேண்டிய சுதந்திரம்

உதாரணமாக… வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாவரத்தின் வேரினை நாம் அறுத்து விட்டால் இதற்கு நீர் கொடுக்கும் ஜீவ சக்தி இழந்த பின் அந்த மரம் தன் இனத்தைக் கவரும் தன்மையை இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நண்பர் என்ற நிலையில் ஒருவருடன் பழகி அவரின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டாலும் சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் பகைமையாகிவிட்டால்
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுக்கும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அதனுடைய விழுதுகளும் தடைப்படுகின்றது.
3.அவரைப் பற்றிய பகைமையான நினைவுகள் மீண்டும் நமக்குள் எழுவதில்லை.

இப்படி இந்தப் புவியில் வாழும் அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுடன் வளரப்படும் பொழுது
1.ஒருவருக்கொருவர் வெளியிட்ட பகைமை (தீமை செய்யும்) உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்திலே நிலைக்காது
2.அது நகர்ந்து சென்று கடலின் ஈர்ப்புக்குள் அது சென்று மறைந்து விடுகின்றது
3.நம்முடைய ஆன்மாவும் இந்தப் பரமான்மாவும் (காற்று மண்டலமும்) தூய்மையாகின்றது.

இவ்வாறு பூமியின் நிலைகளில் பரிசுத்தப்படுத்தும் உணர்வலைகள் பெருகும் பொழுது பேரன்பு கொண்ட நல்ல சிந்தனைகள் மக்களின் மத்தியிலும் தூண்டப்படுகின்றது.

ஞானிகளால் காட்டப்பட்ட நெறிகளை அவர்கள் உணர்த்திய பேருண்மைகளை நாம் இவ்வாறு பயன்படுத்துதல் வேண்டும்.

மதத்தின் பெயராலேயோ அரசியலின் பேராலேயோ இனத்தின் பேரால் நமக்குள் பதிவு செய்த தீமையின் உணர்வுகளை அகற்றிவிட்டு
1.உலகில் உள்ள அனைத்து மக்களும் நாம் ஓர் இனம்.
2.நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள்
3.அவனின் இயக்கத்தால் தான் இயங்குகிறது ஒவ்வொரு உடலும்…! என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.

உயிராக நின்று ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு வெறுப்பின் தன்மையோ வேதனையான உணர்வுகளையோ கொடுக்காது நாம் அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

நம் உயிரான ஈசனுக்கு நாம் செய்யக் கூடிய கடமைகள் எது…? என்று உணர்ந்து
1.நமது வாழ்க்கையிலும் சரி… நம் உடலுக்குள்ளும் சரி…
2.நம் நல்ல குணங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும்.

அப்படி நம் நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பாதுகாப்புக் கவசமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து தீமையான உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட்டு இந்த மனித வாழ்க்கையில் சுதந்திரமாக அனைவரும் வாழ வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்…!

Leave a Reply