கொசு பேன் மூட்டைப் பூச்சி பல்லி இவைகள் எல்லாம் வீட்டிற்குள் எப்படி உருவாகின்றது…?

happiness meditation

கொசு பேன் மூட்டைப் பூச்சி பல்லி இவைகள் எல்லாம் வீட்டிற்குள் எப்படி உருவாகின்றது…?

உடலிலே சிலருக்கு அடிக்கடி அரிப்பு ஏற்படும். தலையையும் சொறிந்து கொண்டே இருப்பார்கள்…! இதற்கு என்ன காரணம்…?

வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலமோ சலிப்போ வேதனையோ பட்டால் நாம் வெளிப்படுத்தும் அந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

அதனுடன் சேர்ந்து நம் உடலிலிருந்து வெளிப்படும் மணமும் கலந்து விட்டால் அணுக்களாகின்றது. அத்தகைய அணு செல்கள் உயிரினங்களாகிச் சஞ்சலப்படுவோர் சிரசிலே பேன்களாகவும் உடலிலே சீலைப் பேனாகவும் உருவாகின்றது. அதனால் இனம் புரியாத அரிப்புகள் உடலிலே ஏற்படுவது.

அதே போல
1.நாம் சலிப்பாகச் சஞ்சலமாக வெளியிடும் மூச்சலையையும்
2.நாம் கழிக்கும் மலத்திலிருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையையும்
3.நம் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தையும் சூரியன் காந்த சக்தி கவருமேயென்றால்
4.எல்லாம் சேர்ந்து இணைந்து கொசு இனங்களாக உருவாகின்றது.
5.கொசுவாக ஆன பின் மனிதனுடைய இரத்தத்தையே உறிஞ்சி வாழும் நிலைகள் பெறுகின்றது.

எந்த மனிதனின் இரத்தத்தை அதிகமாக அது குடித்ததோ அதனின் நினைவு கொண்டு மனிதன் ஈர்ப்பிற்குள் அந்த உயிராத்மா கவரப்பட்டு மனிதனின் உணர்வின் துணை கொண்டு மனிதனாகவே உருபெறும் வளர்ச்சிக்கு வருகின்றது.

வெறுப்பும் வேதனை கொண்டு படுக்கையில் படுக்கப்படும் போது சீலைப் பேனாகத் தோன்றினாலும் பெண்கள் பெரும் பகுதி அதைச் சீப்பால் நசுக்குவார்கள். நசுக்கப்பட்ட அந்த உயிரணுக்கள் அவர் உடலுக்குள்ளே தான் சேரும்.

மீண்டும் அது பட்ட வேதனையின் தன்மைகள் வரப்படும் போது அந்த அலைகளும் மனித உடலில் இருந்து வெளிப்படும் மூச்சலைகளும் கலந்து அதுவே மூட்டைப் பூச்சிகளாக வளரத் தொடங்கி விடுகின்றது.

கொசுவானாலும் மூட்டைப் பூச்சியானாலும் மனிதனைக் கடிக்கும் நிலைக்கே வருகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தத் தீமையின் விளைவுகள் பல்லிகளாகவும் உருவாகின்றது.

மீண்டும் மீண்டும் இதைப் போன்ற உணர்வுகளை எடுத்து வளர்த்த நிலையில் நம்முடைய விளை நிலைத்தில் பயிரினங்களை வளர்த்தாலும் அதில் விளைந்த முத்துகளை வீட்டில் கொண்டு வந்து வைத்தாலும் நாம் இடும் மூச்சலையால் அதிலும் பூச்சிகளும் வண்டுகளும் விழுந்து அதை உணவாக உட்கொள்கின்றது.

ஒருவருக்கொருவர் வெறுத்திடும் நிலையோ அழித்திடும் நிலைகளையோ கொண்டு வந்தால் வீட்டிலே தேள்கள் உருவாகின்றது. இதைப்போன்ற நிலையில் அசுர குணங்களின் அணுக்கள் நமக்குள் விளைந்த பின் நல்ல தசைகளாக உருவாக்கிய அணுக்களை அது கொன்று புசித்துத் தசைகள் கரையும் நிலையும் நம் எண்ணங்கள் சிதையும் நிலையும் வளர்ந்து நம்மை நரகலோகத்திற்கே அழைத்துச் சென்று விடுகின்றது.

நாம் வாழும் வீட்டில் இதைப் போன்ற தீமைகள் உருவாகாதபடி ஆறாவது அறிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் கவர்ந்து அந்த அசுர சக்திகளை ஒடுக்கி நல்ல சக்திகளாக மாற்றிட வேண்டும்.

1.காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் சரி…
2.அதே போல இரவிலே தூங்கச் செல்லும் போதும் சரி…
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை
5.நமக்குள் ஓங்கச் செய்தல் வேண்டும்.

இதனால் நம் மனமும் உடலும் தூய்மை அடைகின்றது. வாழ்க்கையில் வரும் சலிப்பையும் சஞ்சலத்தையும் அகற்ற முடிகின்றது. சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் கிடைக்கின்றது.

தொழிலையும் சீராக்க முடிகின்றது. சகோதர உணர்வுகள் வளர்கின்றது. இதே உணர்வுடன் விவசாயம் செய்யும் பொழுது நிலங்கள் பண்பட்டுப் பயிரினங்களும் செழிப்பாகின்றது. மகிழ்ந்து வாழ்ந்திடும் நிலைகளை நாம் பெற முடிகின்றது.

Leave a Reply