யூதர்கள் வாழும் இடத்தில் போகர் உருவாக்கிய சிவலிங்கம்

Bogar samadhi

யூதர்கள் வாழும் இடத்தில் போகர் உருவாக்கிய சிவலிங்கம்

 

அன்று ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் போகர் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றலை ஊடுருவி அதனின் செயலின் ஆக்கத்தை அவன் கண்டுணர்ந்தான்.

அதாவது மனோசீலை என்ற வெடிபொருளை மனித உடலுக்குள் சேர்த்து அறியாது சேர்ந்த விஷத்தின் தன்மைகளை நீக்குவதற்கு அன்று செய்தான். மனோசீலையை மருந்தாக உபயோகப்படுத்தினான்.

மெக்கா மதினா இஸ்ரேல் நாடுகளுக்கெல்லாம் போகர் சூட்சமமாகச் சென்று வந்தார்.
1.அதாவது தன்னுடைய சரீரத்தை இருந்த இடத்திலே வைத்துவிட்டு
2.இங்கிருந்து இன்னொரு சரீரத்திற்குள் நின்று
3.அங்கே உணர்வுகளைப் பாய்ச்சும் நிலை
4.இங்கு பழனி மலையிலே தான் இவருடைய சரீரம் உண்டு.

இன்று ரேடியோ டி.வி. அலைகளை எப்படி இயக்குகின்றோமோ இதைப் போன்று போகர் தான் எடுத்துக் கொண்ட அலை வரிசைகளிலே ஒரு மனித உடலுக்குள் நின்று முதன் முதலிலே இஸ்ரேலில் போய்ச் செயல்பட்டார்.

இஸ்ரேலில் அவர் செய்து கொண்ட நிலைகள் தான் யூத வம்சத்தினுடைய நிலைகளில் அங்கே சிவலிங்கம் ஒன்று குகைக்குள் உண்டு. அந்த குகைக்குள் நின்று அந்த சில நிலைகளைச் செயல்படுத்தினார்.

அங்கே ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவர் வெளியிட்ட அந்த உணர்வின் தன்மைகளை யூதர்கள் எடுத்துத்தான் மந்திர ஒலிகளாக மாற்றி விட்டார்கள்.

அப்பகுதிகளிலே பூராவும் இந்த யூதர்களுடைய நிலைகள் ஆட்சி புரிந்து உலகம் முழுவதற்கும் மந்திர சக்திகளாகப் பரவியது.

அவர் அங்கிருந்து சீனாவிற்குச் சென்று பல நிலைகளில் செயல்பட்டார். ஒவ்வொரு மனித உலகத்தின் நிலைகளையும் சுவாசித்து விட்டு மீண்டும் இந்தப் பழனியிலே அவருடைய உடலுக்குள் மீண்டும் வந்து சுழன்று கொண்டிருந்தார். மற்ற உடலிற்குள் புகுந்து ஆங்காங்கு செய்து வைத்த நிலைகள் தான் அது.

1.தன் உடலையே காயகல்பமாக ஆக்கிக் கொண்டு
2.தான் வெளியிலே சென்றாலும் அது அழுகிவிடாத நிலைகள் கொண்டு
3.வெகு தூரத்தில் இருந்தாலும் இந்தச் சரீரத்தை மீண்டும் இயக்கிக் கொண்டு அந்த நிலையை அன்று செய்தான் போகன்.

மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கினான். நஞ்சினை அடக்கிடும் உணர்வை மனித உடலிலே பெற்றான் அந்தப் போகமாமகரிஷி.
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
3.மகிழ்ந்த உணர்வின் அலைகளாகப் பரப்பும் நிலையைச் செய்தான்
4.மனிதர் அனைவரின் உயிரைக் கடவுளாக மதித்தான்.
5.அனைவரும் தெளிந்த நிலைகள் கவர வேண்டும் என்று ஏங்கினான்.

மனிதனின் ஆறாவது அறிவைக் காத்திடும் நிலையாக அவன் தெளிந்த உணர்வு கொண்டு விண்ணுலகம் சென்றான் போகன். ஒளியின் சுடராகச் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் இருக்கின்றான்.

அந்தப் போகமாமகரிஷியை நாம் யாரும் நினைக்கின்றோமா…!

Leave a Reply