தனித்த நிலையில் சக்தி பெற முடியுமா…?

eternal-sages-world

தனித்த நிலையில் சக்தி பெற முடியுமா…? 

நம் உடலுக்கு என்ன தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?
1.இன்று நம் உடலை எத்தனையோ அழகு படுத்துகின்றோம்.
2.நாளைக்குச் செத்த பிற்பாடு தூக்கிப் போட்டு விடுகிறார்கள்…!
3.இந்த ஈசன் வெளியிலே போய்விட்டது என்றால் உடலான நீசனுக்கு என்ன மதிப்பு…?

தூக்கி இழுத்து வெளியே போட்டு விடுகின்றார்கள். யாராவது சீந்துகின்றார்களா…? அதனை இழுத்து இங்கேயும் அங்கேயுமாகத்தான் போடுகின்றார்கள்.

நம் உடலை எத்தனையோ அழகாகத்தான் வளர்த்தோம்…! ஆனால் செத்த பிற்பாடு யாராவது கவனிக்கின்றோமா…?

இந்த உடலை முக்கியமாக நினையுங்கள். ஆனால் இந்த உடலுக்காக வேண்டி இந்த உணர்வை (என்னை) இப்படிப் பேசுகின்றானே அப்படிப் பேசுகின்றானே… அது பேசுகின்றானே… இது பேசுகின்றானே… என்ற அந்த வேதனை நமக்கு வேண்டவே வேண்டாம்…!

யாராவது நம்மைக் குறையாகப் பேசினால் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

நாளைக்கு அவர்களுக்கு நல்லது பேசக்கூடிய எண்ணம் வரட்டும். நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரட்டும்.
1.இதைச் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.
2.இது நமக்குத் தான்…!

நுகர்ந்த உணர்வு தப்பு என்று தெரிவதற்கே நான் தப்பு பண்ணினேன் என்பது தனக்குத் தெரிந்தால் தானே…!
1.அவன் தப்பு செய்கின்றான் என்று தெரிய வேண்டும்.
2.எனக்குத் தெரியாமலே விட்டால் தப்பை நான் கண்டுபிடிக்க முடியாது.

உதாரணமாக வழக்கமாக நாம் செல்லும் ரோட்டிலே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். நேற்றைக்கு… அதற்கு முந்திய நாள்… அதற்கு முன்னாடி… எல்லாம் நன்றாகத் தானே இருந்தது,
1.பள்ளமாக எப்படி இருக்கப் போகின்றது…! என்று கண் மூடித்தனமாக
2.நானே குருட்டுத்தனமாகப் போய்க் கொண்டிருந்தால் பள்ளத்தில் போய் “லபக்…” என்று விழுந்து விடுகின்றேன் அல்லவா…!

முன்னாடி பார்த்து நான் உஷாராகப் போக வேண்டும் அல்லவா…? நேற்று இந்தப் பாதையில் தானே வந்தேன்… அதனால் ஒன்றும் இருக்காது…! என்று போனால் என்ன ஆகும்.

இதைத்தான் ஆறாவது அறிவின் தன்மையைச் சேவற்கோடியோன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். “சேவற் கொடியோனே…!” என்று சொன்னால் நாளை வரக்கூடிய நிலைகளை தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது நம் ஆறாவது அறிவு.

காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப் போன்று ஆறாவது அறிவு பெற்றவர்கள் உண்மையின் உணர்வை அறியக் கூடியவர் என்று “சேவற் கொடியோனே” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்த முன் சிந்தனை வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாம் பெறுகின்ற அந்த மகரிஷிகளின் சக்திகள் எல்லோருக்கும் கிடைக்க வெண்டும் என்று நாம் அதற்காக வேண்டித் தவமிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன். அதனால் கல்கி யுகத்திற்கு நான் தனியாகப் போவேன் என்று சொன்னால் எங்கேயும் போக முடியாது.

ஒரு அரிசியை வைத்துப் பசியைத் தீர்த்து விடுவேன் என்று நினைத்தால் அது ஏமாளித்தனம். ஒரு நெல்லை வைத்து வேண்டுமானால் பல நெல்களை உருவாக்கலாம். பல நெல்களாக்கி மொத்தமாகக் குவித்துச் சமைத்து ஆக்கிச் சாப்பிட்டோமானால் எல்லோருக்கும் கொஞ்சம் பசி தீரும்.

ஒன்றை வைத்து நான் சமைத்துச் சாப்பிடுவேன் என்று சொன்னால் எப்படி முடியும்…? அதோடு போய்விடும். அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும்
1.இந்தக் கௌரவம் அந்தக் கௌரவம் என்று கௌரவம் பார்த்தோமென்றால் போய்விடும்.
2.எல்லாம் மண் தின்று விடும்.
3.அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
4.அந்த மெய் ஒளியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்து
5.நமக்குள் மெய் ஒளியை வளர்த்து நாம் பறக்க (கல்கி) வேண்டும்.

Leave a Reply