ஒளிச் சரீரம் பெற்ற பின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…?

Astral souls life

ஒளிச் சரீரம் பெற்ற பின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…?

 

மனிதன் ஆன பின் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று ஒளியின் சரீரமாக நாம் வாழலாம்.

1.இப்பொழுது எப்படி மூச்சலைகள் விடும் பொழுது உயிரணுக்களைத் தோற்றுவிக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருந்து நாம் எதையெல்லாம் எண்ணி மகிழ்கின்றோமோ
3.அதைப் போல விண்ணில் ஒளிச் சரீரம் ஆனபின் அந்த ஒளிச் சரீரத்திற்குள் நின்று சிவசக்தியின் சொரூபம் பெறலாம்.

இன்று கணவன் மனைவி இரு சரீரமாக இருந்தாலும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி ஒளி சக்தியினுடைய நிலைகளைத் தனக்குள் அது சிவசக்தியாகக் கூட்டப்படும் பொழுது
1.இரு சரீரம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கூடான நிலைகள் கொண்டு
2.ஒரே ஒளியின் சரீரமாக ஆக முடியும்.

அத்தகைய நிலை பெற்று விட்டால் விண்ணிலே வரக்கூடிய ஆற்றலின் தன்மையை அணுக்களாக மாற்றி அதனின் சத்தைத் தனக்குள் வடித்து அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை நாம் மூச்சலைகளாக விடும் பொழுது மற்ற மண்டலங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கலந்து விண்ணிலே பல மாற்றங்கள் ஏற்படுவதற்கும் அது காரணமாகின்றது.

மனித நிலையிலிருந்து கணவன் மனைவியாக ஒளிச் சரீரம் ஆகிவிட்டால் அது என்றுமே அழிவதில்லை. அது பெரு வீடு பெரு நிலை. மரணமில்லாப் பெரு வாழ்வு என்பதும் அது தான்…!

அந்த ஒளிச் சரீரத்திற்குள் நின்று அதிலேயும் வடித்துக் கட்டிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பின் ஒளியாக மின்னும் வைரக் கற்களாக மாற்றுகின்றது.

பெரு வீடான நிலையான நிலை கொண்டு அதிலேயும் சிறுத்து அந்த உணர்வின் தன்மை அவ்வாறு வளர்ச்சி அடைந்து கொண்டே போகின்றது. வளர்ச்சி என்ற நிலையில் அடையக் கூடிய அந்தத் தன்மைகளை மேலும் மேலும் விவரித்துக் கொண்டே போக வேண்டியதில்லை.

ஆகவே இந்த விஞ்ஞான உலகத்தில் வாழும் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மனித உடலைப் பெற்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.

Leave a Reply