சாகாக்கலைக்கும் வேகா நிலைக்கும் என்ன வித்தியாசம்…?

ramalinga-adigal-vallalar

சாகாக்கலைக்கும் வேகா நிலைக்கும் என்ன வித்தியாசம்…?

நஞ்சின் இயக்கத் தொடர் கொண்டது தான் ஒவ்வொரு உயிருமே…!

அதாவது நட்சத்திரங்களில் வெளிப்படும் கதிரியக்கங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றை ஒன்று வென்றிடும் நிலைகள் கொண்டு எதிர் கொண்டு தாக்கிடும் பொழுது நஞ்சின் தன்மை உச்சகட்டம் அடைகின்றது.

அப்பொழுது அதனால் துடிப்பின் நிலைகள் ஆகி வெப்பம் உருவாகின்றது. வெப்பத்தினால் உண்டாகும் அதனுடன் இணைந்த ஈர்ப்பு சக்தியான காந்தம் தன் அருகிலே இருக்கும் ஒரு கோளின் சத்தைக் கவரப்படும் போது அது ஒரு உயிரணுவின் தோற்றமாக உருவாகின்றது.

இவ்வாறு உயிரணுவாகத் தோன்றிய பின் எந்த நெருப்பில் பட்டாலும் அந்த உயிர் வேகாது. (அழியாது)

ஒரு உயிரணு பூமிக்குள் வந்த பின் தான் எடுத்துக் கொண்ட ஒரு தாவர இனத்தின் சத்தைத் தனக்குள் சமைத்து அந்த உணர்வுக்கொப்ப உடலாக மாற்றி மாற்றி மனிதன் வரை வந்தது தான் இந்த உயிர்.

மனிதனாக இருக்கும் நிலையில் எந்த உயிரானாலும் நெருப்பிலே போட்டால் அது வேகுவதில்லை. ஆனால் உடல்கள் அனைத்தும் கருகிவிடும்.

அதாவது ஆதியிலே விஷத்தின் தாக்குதல் கொண்டுதான் நெருப்பாக உருவானது. ஆனால் நெருப்பிற்குள் நஞ்சைப் போட்டால் அந்த நஞ்சு கரைந்து விடுகிறது. நெருப்பின் தன்மை அடையப்படும் போது அந்த நஞ்சினைப் பொசுக்கி விடுகின்றது.
1.நஞ்சால் தான் நெருப்பானது.
2.ஆனால் நெருப்பால் அந்த நஞ்சினைக் கொல்லும் செயலும் உண்டு.

அருள் ஞானிகள் தங்கள் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளியின் சரீரம் ஆன பின் எந்த நஞ்சும் தன்னைக் கொல்லாது நஞ்சினையே தனக்குள் அடக்கி அதனின் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித்தான் விண்ணுலகம் சென்றார்கள்.

1.விண்ணுலக ஆற்றல் எப்படிப்பட்டது…?
2.அதிலே உயிரணுக்களின் தோற்றங்கள் எவ்வாறு ஆனது…?
3.உயிர் அணுக்களின் தோற்றமான பின் அதனின் வளர்ச்சியில் மனித உருக்கள் எப்படி வந்தது…?
4.மனிதனான பின் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக எப்படி ஆனார்கள்..? என்பதை
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாக்கினார்.

அந்த மகரிஷிகள் அவர்கள் எப்படி ஒளியின் சுடராக ஆனார்களோ அந்த உணர்வின் தன்மையை இப்போது நீங்கள் கேட்டுணரும் போது உங்கள் உடலுக்குள்ளும் அது பதிவாகின்றது.

அதே சமயத்தில் மகரிஷிகள் ஞானத்தின் தன்மை கொண்டு தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஒளி அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படிப் படர்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வுகளை ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி ஏங்கி நுகரப்படும் பொழுது உங்கள் கண்ணுக்கு முன்னாடியும்… அது “மின்னிக் கொண்டு…” வருவதைப் பார்க்கலாம்.

அந்த மின் அணுக்களின் தன்மையில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

1.நீங்கள் கூர்ந்து கவனித்த உணர்வின் தன்மை கொண்டு
2.இதைப் பதிவு செய்து கொண்ட நிலைகளுக்கொப்ப
3.அந்த ஈர்ப்பின் நிலைகளில் விண்ணின் ஆற்றலை நீங்களும் நுகர்ந்தறியும் நிலையாக
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று உமிழ்த்திக் கொண்டு இருக்கும்
5.பேரருள் பேரொளி உணர்வுகளை எல்லோரும் நுகரும் ஆற்றல் பெறவேண்டும்
6.”வேகா நிலையை…!” நீங்கள் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

சமீபத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் அவர்களும் சாகாக்கலை நீக்கி வேகா நிலை பெறவேண்டும்…! என்றும் அதே சமயத்தில் போகாப்புனல்… அதாவது இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் “நான் பிறவிக்கு வரக் கூடாது…!” என்று தெளிவாக்கியுள்ளார்.

 

Leave a Reply