தியான சக்தியைக் கூட்டுவதற்குத்தான் தபோவனம்

 

ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

தியான சக்தியைக் கூட்டுவதற்குத்தான் தபோவனம் 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்கள் “எப்படி இருக்க வேண்டும்…? என்ற நிலையைத் தெரிந்து கொள்வது நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் இதை சோம்பேறி மடம் மாதிரி ஏதோ வந்தோம் சாப்பிட்டோம் போனோம் என்கிற நிலையில் தியானம் செய்யும் நேரத்தில் கூடத் தூங்குவதற்கு ஆரம்பிக்கின்றார்கள்.

இங்கே வருபவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று அனுமதித்தாலும் அவர்கள் இந்த நிலைகளைச் செய்கின்றனர். அதே சமயத்தில் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்து ஒரு வேலையைச் செய்யுங்கள் என்றால் என்ன செய்கின்றார்கள்…?

வெளியில் இருக்கும் பொழுது எந்தத் தவறு செய்து அவர்களுடைய வாழ்க்கையிலும் குறைகள் ஏற்பட்டதோ அந்தக் குறையையே இங்கும் உருவாக்கத் தொடங்கி விடுகின்றனர்.

அவர்களை ஆதரித்து நல்ல நிலைகள் பெறச் செய்து அதனால் இங்கே வரக்கூடிய மற்றவர்களுக்கும் நல்ல நிலையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.

தயவு செய்து இங்கே வருபவர்கள் எல்லோருமே தியானத்தைச் சீராகப் பயன்படுத்தி உயர்வதற்கு இனியாவது முயற்சி எடுங்கள்.

பிறருக்காக என்றும் நண்பர் என்ற நிலைகளில் அனுமதித்தோம் என்றால் அவர்கள் தவறுகளில் இருந்து மீளாத நிலைகள் வருகின்றார்கள். எந்தத் தவறைச் செய்தனரோ அந்தத் தவறையே செய்ய வருகின்றனர்.

திருந்த வேண்டும் என்ற நிலைக்குத்தான் நாம் இத்தனை சிரமமும் படுகின்றோம்.

தபோவன வளர்ச்சியின் தன்மையைப் பேசுவதற்கு மாறாகத் தன் சுயநலத்திற்கு எதிர்பார்த்து வருவதும் அது ஈடேறவில்லை என்றால் தபோவனத்தைக் குறை கூறும் நிலைகளுக்கும் வந்து விடுகின்றனர்.
1.அப்படிப்பட்ட அன்பர்கள் இருந்தால் அது உங்களுடைய பெரும் குற்றமாகும்.
2.அத்தகைய நிலை பெற்றால் நீங்கள் எண்ணியதை உயிர் உங்கள் உடலில் உருவாக்கும்.
3.அதன் பலனை அறிந்த பின்னாவது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் உணர்வுகளையோ மனம் புண்படும்படி எவரும் இந்த நிலையை உருவாக்கினால் அதன் உணர்வின் தன்மையை உயிர் உங்களுக்குள் உருவாக்கி “நீங்களே அதை அனுபவிக்கும் நிலையை…!” உங்கள் உயிர் உருவாக்கிவிடும்.

1.நல்லதைச் செய்து நல்ல நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினால்
2.அது உங்களுக்குள் நலம் பெறும் சக்தியாகும்.
3.உங்கள் சொல் மற்றவரையும் நலம் பெறும் சக்தியாகும்.
4.நண்பர் என்ற நிலையில் அரவணைக்கும் தன்மையும் வரும்.

ஏனென்றால் புதிதாக வருவோர் தபோவனம் வந்தால் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலைகளை அறிந்து கொள்தல் வேண்டும்.

எந்த ஊரில் இருந்தாலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை அனைவரும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சந்தர்ப்பத்தில் குறைகள் வந்தால் ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அருள் ஞானம் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு இத்தகைய நிலைகளை போதித்துத் தபோவனம் சென்றால் உங்களுடைய நிலைகள் இப்படி இருக்க வேண்டும் அந்தக் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்ற நிலையை வழிப்படுத்த வேண்டும்.

இங்கு அருள் நெறிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைகளும் வெளியூரிலிருந்து வரப்படும் போது அவர்களுக்குத் தபோவனத்தின் நன்மதிகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெருக்கி நாம் யாருடன் பழகினாலும் நமது பார்வையில் அவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்றும் உலகுடன் ஒத்து வாழும் நிலையும் சகோதர உணர்வுகள் வளர்ந்திட வேண்டும் என்ற நிலைகளில் தியானிக்க வேண்டும்.

அன்பர்கள் ஒவ்வொருவரும் தபோவனம் நலமாக இருக்க வேண்டும். அது உயர்ந்த நிலைகள் பெற வேண்டும். உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே உங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளையும் பிணிகளையும் போக்கக் கூடிய சக்திகளாகவும் உலகுக்குக் எடுத்துக்காட்டாக நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று (ஞானகுரு) வேண்டிக் கொள்கின்றேன்.

Leave a Reply