துன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்…!

Horoscope of Rishis

துன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்…!

உங்கள் மகனுக்கு நல்ல நேரம் வருகிறதா…? கேட்ட நேரம் வருகிறதா…? என்று ஜாதகத்தைப் பார்க்கின்றீர்கள்.

“ஏழரை நாட்டான் சனி பிடித்து விட்டான்…!” என்று சொன்னால் போதும்…. அதை உடனே உங்கள் உடலில் பதியச் செய்து கொள்கின்றீர்கள்.

அடுத்தாற்போல் அந்தக் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் ஏழரை நாட்டான் வந்து விட்டான் என்ற நிலையில் எந்தத் தொழில் செய்தாலும் இடைஞ்சல் வருகின்றது.
1.இந்த எண்ணத்தை நீங்கள் எடுத்து எடுத்து
2.உங்கள் உணர்வின் அணு செல்களில் (உடலுக்குள்) பதியச் செய்து
3.அதை நீங்கள் மூச்சலைகளாக வெளியிடும் போது
4.சூரியனுடைய காந்தப் புலன்கள் அதை கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

திரும்ப எண்ணும் போதெல்லாம் ஜோஸ்யக்காரன் சொன்னது உங்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வை ஊட்டி உங்களுக்குள் அதை வலுவாக்கிக் கொள்கின்றீர்கள்.

எல்லா மதத்திலும் இதைப் போன்ற நிலை தான்.

அந்தந்த மதத்திற்குத் தக்கவாறு ஜாதகங்களும் நேரமும் காலமும் அதில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும். இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்ட பின் வெளியில் எங்கு போனாலும்…
1.ஏழரை நாட்டான் உச்சத்தில் இருக்கின்றான்
2.நாம் வியாபாரம் செய்தால் ஆகுமா…? என்ற நிலையில்
3.எந்தச் செயலைச் செய்ய வேண்டும் என்றாலும் இந்த நினைவலைகளே முன்னாடி வரும்.

அதே உணர்வை எடுத்துச் சுவாசித்து வியாபாரத்தில் யாரிடம் எதைச் சொன்னாலும் கேட்போர் உள்ளத்தில் அவருடைய புலனறிவில் ஈர்க்கப்பட்டு
1.நாம் எப்படிச் சோர்வடைந்தோமோ
2.அந்த உணர்வின் தூண்டுதலை அங்கேயும் உருவாக்கச் செய்து
3.நல்ல பொருளைக் காட்டினாலும் “இது நன்றாக இல்லை…!” என்று சொல்லிப் போய்க் கொண்டே இருப்பார்கள்
4.வியாபாரம் மந்தமாகிவிடும்.

ஏனென்றால் ஜாதகக்காரர் சொன்னது உடலுக்குள் விளைந்து விட்டது. நீங்கள் நினைத்தவுடனே ஏழரை நாட்டான் சனி வந்துவிடுகிறது. அப்போது உங்கள் வியாபாரம் கெடுகிறது.

ஆனால் என்னுடைய (ஞானகுரு) ஜோசியம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்….!

மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அதிகாலையில் ஒரு பத்து நிமிடமும் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பத்து நிமிடமும் (குறைந்த பட்சம்) மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

இவ்வாறு செய்து பழக்கப்படுத்திய பின்பு
1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும்
2.அல்லது துன்பம் வரும் சமயங்களிலெல்லாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் உரமாகச் சேர்க்கப்பட்டு
5.உங்கள் மனக் கலக்கமோ… மன குழப்பமோ… மன வேதனையோ… உடல் வேதனையோ
6.இதைப் போன்ற நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு இது நிச்சயம் உதவும்.

ஜோதிடக்காரர் சொன்னதைக் கூர்ந்து கேட்டு உங்களுக்குள் பதிவு செய்த பின் கலக்கமும் சந்தேகமும் சோர்வும் அடைகின்றீர்கள். நல்லதைச் செய்ய முற்படும் பொழுதெல்லாம் அதுவே தடையாகின்றது.

ஆனால் யாம் கொடுக்கும் வாக்கின்படி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணி எடுத்து இதை முயற்சித்துப் பாருங்கள்.
1.இதற்குக் காசோ வேறு எதுவும் தேவை இல்லை
2.உங்கள் எண்ணம் தான் வேண்டும்…!

உங்கள் சந்தேகமும் சஞ்சலமும் விலகும். மனதில் உறுதி வரும். உங்கள் எண்ணம் வலுவாகும். உங்கள் காரியங்கள் நிச்சயம் வெற்றி அடையும்.

Leave a Reply