நல்ல நேரம் கிடைக்காதா…! நல்ல நேரம் வராதா…? என்று ஏங்குவோரை ஏமாற்றும் நிலை தான் இன்று உலகெங்கிலும் உள்ளது – ஏமாற்றுவோரிடமிருந்து விடுபடுங்கள்…!

Jaadhagam - nadi

நல்ல நேரம் கிடைக்காதா…! நல்ல நேரம் வராதா…? என்று ஏங்குவோரை ஏமாற்றும் நிலை தான் இன்று உலகெங்கிலும் உள்ளது – ஏமாற்றுவோரிடமிருந்து விடுபடுங்கள்…!

சிலர் ஜாதகம் ஜோதிடத்தைப் பார்த்து விட்டு இருக்கின்ற நேரத்தையும் வீணாகக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

நான்கு விதமான பஞ்சாங்கம் இருக்கும். அந்த நான்கும் நாலு விதமாக இருக்கும். அதைப் பார்க்கும் ஜோதிடக்காரர்கள் அவன் ஒன்றை சொல்வான். இவன் இன்னொன்றைச் சொல்வான்.

கடைசியில் போட்டுக் குழப்பி…
1.இவரிடம் பார்த்தால் நன்றாக இருக்கிறது என்று ஒருவரிடம் போவார்கள்
2.இல்லை.. இல்லை…! அவரிடம் போனால் தான் சரியாகக் கணித்துச் சொல்கிறார் என்று மற்றொருவரிடம் போவார்
3.முதலில் சொன்னதற்கு அதற்கு மாறாகிப் போகும்.
4.இப்படி இந்த உணர்வுகள் மாறி மாறி இங்கே சுவாசித்தது எல்லாம்
5.ஜாதகத்தையே மாற்றிவிடும்.
6.ஜாதகத்தால் நமக்கு எந்தப் பலனும் இல்லை.
7.நான் அவரிடம் போனேன்.. அப்புறம் இவரிடம் போனேன் என்று கால நேரம் தான் விரயமாகும்.

அதைக் காட்டிலும் வாஸ்து சாஸ்திரம் நியூமராலஜி என்று வந்து விட்டது. தவறாக நினைத்து விடாதீர்கள்.

குடும்பத்தில் முன்னாடி எல்லாம் நன்றாகத் தான் வாழ்ந்திருப்பார்கள். அதில் தற்சமயம் சந்தர்ப்பத்தால் ஏதோ நஷ்டமோ கஷ்டமோ ஏற்பட்டு விட்டது என்றால் என்ன சொல்வார்கள்…?

வாஸ்து சாஸ்திரம் பார்க்க அவர்களைக் கூப்பிட்டு வந்ததும்
1.ஓஹோ.. இப்படி ஆகிவிட்டதா…!
2.உங்கள் ராசிக்கு வீட்டில் இருக்கும் நிலையை (வாசலை) மாற்றி
3.வேறு இடத்தில் வாசலை அமைத்தால் சரியாகும் என்பார்கள்.

அம்மா அப்பா தன் பிள்ளைகளுக்கு பெயரை நன்றாக வைத்திருப்பார்கள். ஆனால் நியூமராலஜிப்படி உங்கள் ராசிப் பிரகாரம் உங்கள் பெயரில் உள்ள இந்த எழுத்தை மாற்றி விட்டால் எல்லாம் கூடி வரும் என்பார்கள்.

இதே மாதிரி வியாபாரத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் அமெரிக்காவிலிருந்து ஒரு மருந்து வருகின்றது. அதை எல்லாம் விற்று விட்டீர்கள் என்றால் அதற்கப்புறம் மேல் கொண்டு அதிக இலாபம் வரும். நீங்கள் வாங்கி விற்க விற்க அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பார்கள். “செயின் கோர்வை..” என்று அதைச் சொல்வார்கள்.

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைப்பதற்குண்டான வழிகள் இருக்கின்றதோ அத்தனை வழிகளையும் இன்று மனிதன் செய்து கொண்டிருக்கின்றான்.

இயற்கையின் உண்மையை நாம் பெற வேண்டும் அதை அறிய வேண்டும் என்ற நிலையே அற்றுப் போய் விட்டது.

எப்படியோ சரி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகிற மாதிரி
1.எனக்கு இன்றைக்கு எப்படியாவது நல்ல நேரம் வர வேண்டும்
2.யார் எதை வேண்டுமானாலும் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…!
3.நாம் அவர்களிடம் போய்க் கேட்போம்…
4.நல்ல நேரம் வந்தது என்றால் வரட்டும்…! என்று
5.இப்படித் தான் நம் சிந்தனைகள் செல்கிறது.

அடுத்தவர்களைத்தான் நம்ப வேண்டும் என்று எண்ணுகிறோமே தவிர நமக்குள் இருக்கும் ஆற்றலை அறிய முடியவில்லை.

இதைத் தெரிவிப்பதற்காகத்தான் “பிள்ளையார்…” இந்தப் பிள்ளை யார்..? நீ நன்றாகச் சிந்தித்துப் பார்…! மனிதனாக உருவானால் “முழு முதல் கடவுள்..” சிருஷ்டிக்கும் சக்தி பெற்றவன் மனிதன் என்று முச்சந்தியிலேயே வைத்து விநாயகரைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

1.உயிரே கடவுள். உடலே கோவில்
2.உடலில் உள்ள 1008 குணங்களும் 1008 தெய்வங்களாகக் கொலு வீற்றிருந்து இயக்குகின்றது.
3.நீ எதை எண்ணுகின்றாயோ அதைத்தான் உன் உயிர் உருவாக்குகின்றது… படைக்கின்றது.. என்று
4.ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் சக்திகளை நாம் பெற்றால் இந்த வாழ்க்கையில் வரும் பேரிருளை நீக்கிப் பேரொளி என்ற நிலை பெறலாம். உங்களால் முடியும். உங்கள் அனுபவம் பேசும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

Leave a Reply