சர்க்கரைச் சத்து… இருதய நோய் போன்ற நோய்களை நீக்கும் பயிற்சி

dhanurasana

சர்க்கரைச் சத்து இருதய நோய் போன்ற நோய்களை நீக்கும் பயிற்சி

உங்கள் உடலில் நோய்கள் இருந்தால் கீழ்க்கண்ட முறையில் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
4.எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
5.சிறிது நேரம் புருவ மத்தியில் எண்ணி அந்த உணர்வுகளை உடலுக்குள் கொண்டு செல்லுங்கள்.

சர்க்கரைச் சத்து:–
சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கு நீங்கள் கூடுமான வரை (படத்தில் காட்டியபடி) இதே மாதிரி வைத்துக் கொண்டு படுத்து எங்களுக்குள் இருக்ககூடிய சர்க்கரைச் சத்து சமமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து மூச்சை இழுங்கள்.

சர்க்கரைச் சத்தைக் குறைக்க ஒரு ஐந்து நிமிடம் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்.

(குறிப்பு) வயிற்றில் ஆபரேசனோ அல்லது இருதய ஆபரேசனோ அல்லது கர்ப்பமாக இருப்பவர்களோ இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது. ஆபரேசன் செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்தால் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

ஆஸ்துமா போன்ற நோயோ சர்க்கரைச் சத்தோ இருந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு முறைப்படி இந்தப் பயிற்சி செய்தோமென்றால்
1.நாம் எடுக்கும் உணர்வுகள் நேரடியாக உடலுக்குள் சென்று
2.நம் உடலிலுள்ள நோய்களை அகற்ற இது உதவும்.

ஆபரேசன் செய்தவர்கள் அல்லது கர்ப்பமாக உள்ளவர்கள் பயிற்சிக்குப் பதிலாக
1.மேல் நோக்கிப் பார்த்து விண்ணிலே நினைவினைச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் உயிருடன் ஒன்றி
3.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிச் சுவாசியுங்கள்.

நிச்சயம் அந்த நோய்கள் குறையும்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம்
1.நாங்கள் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எங்கள் உடலில் “நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும்…” என்று
2.ஒரு இரண்டு நிமிடமாவது எண்ணி அந்த உணர்வுடன் சாப்பிடுங்கள்.

இருதய வலி:–
இருதய வலி இருந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்துச் சிறிது பின்னால் சாய்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.மகரிஷிகள் பால் நினைவின் ஆற்றலைச் செலுத்தி
2.மூச்சை இழுங்கள்… ஒரு நொடி நிறுத்துங்கள்…
3.பின் மூச்சை வெளியில் விடுங்கள்.

ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கும். நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் பீடி சிகரெட் பிடிப்பவர்களை உற்றுப் பார்த்து அதைச் சுவாசித்தால்
1.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று
2.இரத்தம் போகும் பாகங்களில் சென்று உறைந்து விடும்.

உறைந்து விட்டால் அந்தப் பகுதிக்கு இரத்தம் போகாமல் அடுத்த பக்கம் பகுதி போய் விடும். இந்தப் பக்கம் அடைபட்டுப் போய்விடும். அதாவது நுரையீலுக்குள் மற்ற இடங்களுக்கு இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும்.

இது அடைபட்டு விட்டால் இதே போல அடுத்த பக்கமும் அடைபடும்.

இரண்டு மூன்று பாதைகளில் ஏதாவது ஒரு பாதையாவது இருந்தால்தான் சீராக இரத்தம் போகும்.
1.போகும் பாதைகளெல்லாம் அடைபட்டு விட்டால்
2.இருதயம் சீராக இயங்காதபடி HEART ATTACK போன்ற நிலைகள் வந்து விடும்.
3.நெஞ்சு வலி அதிகமாகி மடியச்செய்து விடும்.

இதைப்போன்ற நிலைகள் வராமல் தடுக்க இடுப்பிலே கை வைத்துச் சாய்ந்து அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து மகரிஷிகளின் உணர்வுகளை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

அப்போது அந்த அடைப்புகளை எல்லாம் நீக்கிவிடும்.

ரொம்பவும் தொல்லை கொடுத்தது என்றால் தியானம் செய்யும் அன்பர்கள் நான்கு பேரோ ஐந்து பேரோ சேர்ந்து
1.விபூதியையோ அல்லது தண்ணீரையோ முன்னாடி வைத்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை அதற்குள் பாய்ச்சி
3.அவர் இருதயங்களில் உள்ள வலி நீங்கி அது சீராக இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணி
4.அந்தப் பொருளைக் கொடுங்கள்.

அவர் குடிக்கும் போது உங்கள் பார்வையைச் செலுத்தி மகரிஷிகளின் அருள்சக்தி அவர் பெற வேண்டும். அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

(அவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுவதற்கு முன் நமக்குள் அதை வலுவாக ஏற்றிக் கொள்ள வேண்டும்)

அவ்வாறு அவர்களுக்கு நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சப்படும் போது அது நல்லதாகும். இது பழக்கத்திற்கு வர வேண்டும்.

இந்தப் பயிற்சிகளைச் செய்து வந்தாலே நாளடைவில் உங்கள் உடல் நோய் குறைந்துவிடும். குறைந்த பட்சம் ஒரு பத்து நிமிடம் – இருபது நிமிடம் வரையிலும் செய்யலாம்.

அப்புறம் அதற்கடுத்துச் சும்மா இருக்கும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் பரப்புங்கள். அந்த மகரிஷிகளின் எண்ண அலைகளை உடலுக்குள் பாய்ச்சும் போது நம் உடல் தூய்மையாகும்.

அப்போது அந்த மகரிஷிகளின் பால் பற்று வரும்.

1.நம் உடல் நலம் பெறுவதற்கு நமக்கு நாமே
2.இம்முறைப்படி நாம் செய்து கொண்டோம் என்றால் நன்றாக இருக்கும்.

Leave a Reply