அறியாமல் வரும் பகைமைகளை மறைமுகமாக நீக்கும் முறை – தெய்வீக அன்பை வளர்க்கும் முறை

Mindful Meditation - Om eswara

அறியாமல் வரும் பகைமைகளை “மறைமுகமாக நீக்கும் முறை” – தெய்வீக அன்பை வளர்க்கும் முறை

 

நம் குடும்பங்களிலோ அல்லது நம்மைச் சார்ந்தவர்கள் குடும்பங்களிலோ அன்பாகப் பண்பாக நாம் பழகி வந்தாலும் சந்தர்ப்பத்தால் பகைமையாகி விடுகின்றது.

அப்படிப் பகைமைகள் விளைந்தாலும் நாம் உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். மன பலம் கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

பகைமையான உணர்வுகளைக் கேட்டறியும் பொழுதெல்லாம் உடனே இதைத் தூய்மைப்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தக் குடும்பங்களில் படர வேண்டும்.
2.அவர்கள் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.
3.அவர்களுக்குள் வசிஷ்டரும் அருந்ததி போல ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் வளர வேண்டும்.
4.அவருக்குள் அந்த பற்றுடன் பாசத்துடன் வளர்ந்திடும் இந்த நிலைகள் வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று நாம் எண்ணி எடுக்கும் போது நமக்குள் வரும் இந்தப் பகைமை என்ற பற்றைப் பிரித்துவிடும்.

எது…?

அவர்களின் பகைமையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி இந்த நினைவை நமக்குள் ஊன்றவிடாது.

நான் நண்பனாக அவர்கள் வீட்டிற்குள் சென்றாலும் இந்த எண்ண அலைகளைப் பதித்து இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்களுக்குத் தெரிகின்ற மாதிரி நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

1.அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
3.அவர்கள் பொருள் கண்டு உணர்ந்து செயல் பட வேண்டும் என்று மனதில் எண்ணி
4.நம்முடைய பார்வையின் அலைகளை அங்கே படரச் செய்து
5.நம்முடைய மண் அவர்கள் வீட்டிலே இவ்வாறு எண்ணிப் பதித்து விடுங்கள்.

எங்கே ஊன்றி இருக்கின்றீர்களோ அங்கே பதிவாகும். இப்போது இது பதிவாக்கி விட்டால் இந்த உணர்வுகள் அங்கே பதிந்தது என்ன செய்யும்?

அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த அருள் ஞானத்தை ஊட்டும்.
1.பகைமை என்பது நம் எண்ணத்தில் சிறிதளவு கூட வராது.
2.தெய்வீகப் பண்புகள் நமக்குள் வளரும்.
3.தெய்வீக அன்பாக மாறும்

இந்த முறையினைக் கடைபிடித்தால் மிகவும் நல்லது. செய்து பாருங்கள்.

Leave a Reply