27 நட்சத்திரங்களும் உயிரணுவின் தோற்றமும்

27 நட்சத்திரங்களும் “உயிரணுவின் தோற்றமும்” – அகஸ்தியன் கண்டது

 

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் வித்தியாசமான நிலைகளில் உயிரணுக்களைத் தோற்றுவிக்கும் நிலை வருகின்றது.

பூமியோ மற்ற கோள்களோ சுழலும் பொழுது வெப்பமும் ஒரு பகுதியில் ஈர்க்கும் தன்மையும் வருகின்றது.

உயிரணு ஒன்றுக்குள் ஒன்று துடிப்பாகப்படும் பொழுது

1.இந்தத் துடிப்பின் தன்மை அடைபட்டு அதனால் மோதும் தன்மையும்

2.இதிலே ஏற்படும் நிலைகள் ஈர்க்கும் தன்மை வரப்படும் பொழுது

3.தனக்குள் இழுத்து ஒன்றை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

இப்படி உருவானது தான் உயிர்.

இதைத்தான் நாராயணனின் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றுகின்றான் என்று காட்டப்பட்டுள்ளது.

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ… …கம்”.

1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து

2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ… …கம்”.

3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று

4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

பூமியின் நாதம் “ஓ…ம்” என்று இருப்பினும் வியாழன் கோள் மற்ற நிலைகளுடன் மோதப்படும்பொழுது அதனுடைய சுருதியின் நிலைகள் பல விதமாக வரும்.

நாதங்கள் எதனெதன் நிலைகளில் மோதுகின்றதோ அதற்குள் “ஓஒஓ…ஓஒஓ…ஓஒஓம்…ம்…ம்”என்று இந்த மாதிரி அலைகள் தனக்குள் இசைகள் கூடியும் குறைத்தும் வரும்.

அது நுகரும் உணர்வுக்குள் மலரும் தன்மையும் வளரும் தன்மையும் என்ற நிலைகளில் இந்த ஒலி அலைகளைக் கண்டுணர்ந்தவன் ஆதியிலே அகஸ்தியன் என்றாலும் பின்னாடி வந்த வியாசகர் 4000 ஆண்டுகளுக்குள்  மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட பேருண்மைகள் இது.

அதற்கு முன்பு பலர் பெற்றாலும் இந்த உண்மையின் உணர்வுகளை அவரவர்கள் அறிவிலே தெரிந்தது தான் வளர்ச்சி கொண்டது.

மற்ற கோள்கள் சுழலும் பொழுது வெப்பமும் தனக்குள் ஈர்க்கும் சக்தியால் உணவாக எடுத்து விளையும் தன்மையும் வருகின்றது.

1.இப்படி நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியும்

2.வியாழன் கோளின் சத்தும் மூன்றும் சேர்ந்து ஒரு உயிரணுவாக உருவாக்கப்படும் பொழுது

3.எதனின் நிலைகள் கவர்ந்ததோ அதனின் வழி கொண்டு தான் அந்த உயிரணுவின் இயக்கம்.

Leave a Reply