மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று சேர்வது எப்படி…?

self-confidence

மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று சேர்வது எப்படி…?

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

ஏனென்றால் முதலில் சிறிதளவு உள்ளே போயிருந்தாலும்ம் அதற்குண்டான அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
1.அந்தக் கருவின் தன்மை அணுவின் தன்மை அடைவதற்கு முன்னாடி
2.அந்தக் கருவிற்குள்ளேயே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.அதனுடன் இணைத்து விட வேண்டும்.

எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இந்த அலைகளைப் பரப்பப்போகும் போது இது வலுவாகின்றது.

தீமையைத் தள்ளி விடுகின்றது.

நாம் தவறு செய்தவர்களைக் கண்ணிலே பார்க்கும் பொழுது கண்ணின் கரு விழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.

நிலத்திற்குள் ஒரு வித்தை ஊன்றினால் எப்படியோ அதே மாதிரி ஊழ்வினை என்பது ஒரு வித்து. நீங்கள் எந்த எண்ணத்தின் தன்மை கொண்டு பார்த்தாலும் அவைகள் உடலுக்குள் வித்தாகத்தான் மாறுகின்றது.
1.அந்த வித்தின் அலைத் தொடரை அது எடுக்கும்
2.ஆன்மாவாகும் போது சுவாசித்து அதை அறிகின்றோம்.
3.அந்த உணர்வலைகள் உடலுக்குள் போகின்றது.
4.உருவான அணுக்களுக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கின்றது.

ஆனால் வித்து பதிவாகவில்லை என்றால் எடுக்கவே எடுக்காது.

அதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கும் போது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகி விடுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகள் உணர்வுடன் குருநாதர் காட்டியதை இணைத்துப் பார்க்கும் போது
1.கண்களிலே சில வித்தியாசங்கள் வரும்.
2.அந்த வித்தியாசங்கள் வரப்போகும் போது
3.“பளீர்…” என்று அந்த ஒளி அலைகள் வரும்.

எப்படிக் கெட்டவர்களைப் பார்க்கும் போது உங்களுக்குள் பதிவாகி விடுகின்றதோ இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க அலைகள் வரும் போது ஒளிச் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அது நினைவிற்கு வரப்போகும் சக்தி வாய்ந்ததாக உருவாகி காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வை எளிதில் இழுத்துக் கவர முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) ஒன்றைக் கொடுத்தார். அதை எப்படிப் பக்குவப்படுத்தச் சொன்னாரோ அந்த வழியில் தான் உங்கள் அனைவருக்குமே பெறச் செய்கின்றோம்.

குருநாதர் சொன்ன வழியில் எடுத்தீர்கள் என்றால் மெய்ப் பொருளை வளர்க்க முடியும். சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

Leave a Reply