குருநாதர் கொடுத்த சக்திகளைக் காட்டிலும் பன் மடங்கு உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன் – ஞானகுரு

குருநாதர் கொடுத்த சக்திகளைக் காட்டிலும் “பன் மடங்கு” உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன் – ஞானகுரு

குருநாதர் மூன்று இலட்சம் பேர் குடும்பங்களைப் பற்றி அனுபவ வாயிலாகத் தெரிந்து கொள்வதற்காகக் காடு மேடெல்லாம் என்னை அலையச் சொன்னார்.

காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார். வெயிலில் நடக்கச் சொன்னார். இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உனக்குள் உந்துகின்றது என்று பார்…!

1.அப்பொழுது உனக்கு என்னென்ன ஆசைகள் எல்லாம் வருகின்றது?
2.ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்து இடைமறித்து உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?
3.உன்னுடைய ஆசைகள் மனக் கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும்போது அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?
4.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே சிக்கல்களும் துயரங்களும் வருகின்றது? என்பதை நேரடியாகக் காட்டினார்.
5.அப்பொழுது உனக்குள் வரும் தீமைகளைத் தடுக்க நீ என்ன செய்ய வேண்டும்?
6.அதே போல மற்றவர்களை மீட்க நீ என்ன செய்ய வேண்டும்?
7.மகரிஷிகளும் ஞானிகளும் எவ்வாறு விண்ணிலே இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றார்கள்?
8.அவர்கள் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்?
9.அதை நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்?
10.நீ வளர்த்துக் கொண்ட சக்திகளை மற்றவர்களுக்கு எவ்வாறு போதிக்க வேண்டும் என்று தான்
11.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அனுபவ வாயிலாகப் பல சக்திகளைப் பெறச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் எனக்கு எவ்வளவு கொடுத்தாரோ அதைக் காட்டிலும் பன் மடங்கு சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அந்தச் சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார். நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும் என்று இதைக் கலந்துவிட்டால் நீங்கள் இதைப் பெற முடியாது.

குருநாதர் சொன்னதைச் செய்தால் நாம் அனைவருமே அதைப் பெற முடியும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எண்ணங்களாகி அந்த மணங்கள் நமக்குள் வந்துவிடும்.

Leave a Reply