மறைந்த உண்மைகளை எல்லோரும் அறிய வேண்டும்…!

Gnanaguru blessings (2)

மறைந்த உண்மைகளை எல்லோரும் அறிய வேண்டும்…! 

மாமகரி ஈஸ்வராய குருதேவர் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தார்.

மகரிஷிகள் கண்ட மெய் உணர்வுகளையும் இயற்கையின் உண்மைகளையும் உபதேசித்தார். அனுபவ வாயிலாகக் காட்டுக்குள் அழைத்துச் சென்று மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் வைத்துச் சில நிலைகளை நேரடியாகவே காட்டினார்.

அவ்வாறு குருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்?

எனக்குள் மறைந்துவிடும்.

உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான்” சொல்கிறேன்.

சிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.

பள்ளியில் படித்த பின் “படித்தை நினைவு கொண்டார்களா…?” என்பதைத் தேர்வின் மூலமாகப் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

படித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின் படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.

அதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை லேசாக எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குத் தீமை வரும் பொழுதெல்லாம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று சிறிது நேரம் சிந்தனை செய்தால் சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.

அந்த ஞானத்தால் உங்கள் தீமைகளை எளிதில் போக்கிக் கொள்ள முடியும்.

ஆகவே
1.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும்
2.உங்கள் உணர்வுகள் உங்கள் சொல்லைக் கேட்போருக்கும் ஞானத்தை  ஊட்டி
3.அவர்களுக்குள் மறைத்திருக்கும் தீமைகளை அவர்களும் நீக்கி
4.நீங்கள் பெற்ற அருள் உணர்வை அவர்களும் பெற்று அவர்களும் தீமைகளை நீக்க வேண்டும்.
5.நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும் என்பற்குத்தான் உங்களுக்குள் இதைத் தெளிவாக்குகின்றேன்.

 

Leave a Reply